அர்குன் ஆறு (ஆசியா)
From Wikipedia, the free encyclopedia
அர்குன் ஆறு (Argun or Ergune River); இது, 1,621 கிலோமீட்டர் (1,007 மைல்) நீளம் கொண்டது. இந்த ஆறும் அமுர் ஆறும் சேர்ந்து கிழக்கு சீனா - இரசியா எல்லையின் பகுதியாக அமைந்துள்ளன. இந்த ஆற்றின் மேல் பகுதி, சீனாவில் ஹைலர் ஆறு (ஆங்கிலம்: Hailar River; எளிய சீனம்: 海拉尔 河; பின்யின்: ஹெயிலர் ஹெ (Hăilā'ěr Hé) என அழைக்கப்பபடுகின்றது. அமுர் ஆற்றினை அடையும்வரையிலான அர்குன் ஆற்றின் பகுதியானது, இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலுள்ள 944 கிலோமீட்டர் (587 மைல்) நீள எல்லையாக (1689 ஆம் ஆண்டில் நெர்சின்ஸ்க் (Treaty of Nerchinsk) ஒப்பந்தத்தால் நிறுவப்பட்டது) அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் நாடுகள், இரசியப் பிரதேசம் ...
அர்குன் Argun or Ergune | |
River | |
பெயர் மூலம்: மொங்கோலியன்: ergene, "wide" | |
நாடுகள் | சீனா, உருசியா |
---|---|
இரசியப் பிரதேசம் | சபைக்கால்சுக்கி பிரதேசம் |
Chinese Region | ஹுலுன்புயிர் Hulunbuir |
உற்பத்தியாகும் இடம் | கெர்லன் ஆறு |
- அமைவிடம் | about 195 கிலோமீட்டர்கள் (121 mi) from உலான் பத்தூர் |
- உயர்வு | 1,961 மீ (6,434 அடி) |
கழிமுகம் | அமுர் ஆறு |
நீளம் | 1,620 கிமீ (1,007 மைல்) |
வடிநிலம் | 1,64,000 கிமீ² (63,321 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
|
மூடு