From Wikipedia, the free encyclopedia
அந்தோனி அல்பனீசி (Anthony Norman Albanese, ஆந்தனி நோர்மன் அல்பனீசி,[1] பிறப்பு: 2 மார்ச் 1963) ஆத்திரேலிய அரசியல்வாதியும், தற்போதைய ஆத்திரேலியப் பிரதமரும் ஆவார்.[2] இவர் மே 2019 முதல் ஆத்திரேலியத் தொழில் கட்சியின் தலைவராக உள்ள அல்பனீசி, எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 1996 முதல் கிரைண்ட்லர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கெவின் ரட் அரசாங்கத்தின் கீழ் ஆத்திரேலியாவின் துணைப் பிரதமராக அல்பனீசி இருந்துள்ளார். 2013 மற்றும் 2007 முதல் 2013 வரை கெவின் ரட் மற்றும் ஜூலியா கிலார்ட் அரசாங்கங்களில் அமைச்சராகவும் இருந்தார்.
மாண்புமிகு அந்தோனி அல்பனீசி Anthony Albanese | |
---|---|
2022 இல் அல்பனீசி | |
ஆத்திரேலியாவின் 31-வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2022 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | இசுக்காட் மொரிசன் |
ஆத்திரேலியத் தொழில் கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
முன்னையவர் | பில் சோர்ட்டன் |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 30 மே 2019 – 23 மே 2022 | |
பிரதமர் | இசுக்காட் மொரிசன் |
முன்னையவர் | பில் சோர்ட்டன் |
பின்னவர் | பீட்டர் டட்டன் |
ஆத்திரேலியத் துணைப் பிரதமர் | |
பதவியில் 27 சூன் 2013 – 18 செப்டம்பர் 2013 | |
பிரதமர் | கெவின் ரட் |
முன்னையவர் | உவைன் சுவான் |
பின்னவர் | வாரன் திரசு |
தொழிற்கட்சியின் துணைத் தலைவர் | |
பதவியில் 26 சூன் 2013 – 13 அக்டோபர் 2013 | |
தலைவர் | கெவின் ரட் |
முன்னையவர் | உவைன் சுவான் |
பின்னவர் | தானியா பிலிபெர்செக் |
உட்கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 3 திசம்பர் 2007 – 18 செப்டம்பர் 2013 | |
பிரதமர் | கெவின் ரட் ஜூலியா கிலார்ட் |
முன்னையவர் | மார்க் வைல் |
பின்னவர் | வாரன் திரசு |
அவைத் தலைவர் | |
பதவியில் 3 திசம்பர் 2007 – 18 செப்டம்பர் 2013 | |
பிரதமர் | கெவின் ரட் ஜூலியா கிலார்ட் |
Deputy | இசுட்டீவன் சிமித் |
முன்னையவர் | டோனி அபோட் |
பின்னவர் | கிறித்தோபர் பைன் |
பிராந்திய அபிவிருத்தி, உள்ளாட்சி அமைச்சர் | |
பதவியில் 3 திசம்பர் 2007 – 14 செப்டம்பர் 2010 | |
பிரதமர் | கெவின் ரட் ஜூலியா கிலார்ட் |
முன்னையவர் | ஜிம் லாயிடு |
பின்னவர் | சைமன் கிரீன் |
கிரைன்ட்லர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 மார்ச் 1996 | |
முன்னையவர் | செனட் மெக்கியூ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 மார்ச்சு 1963 டார்லிங்கர்சுட், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா |
அரசியல் கட்சி | Labor |
துணைவர்(கள்) | கார்மெல் டெபட் (தி. 2000; பிரிவு 2019) |
துணை | ஜோடி ஐடன் |
பிள்ளைகள் | 1 |
முன்னாள் கல்லூரி | சிட்னி பல்கலைக்கழகம் (BEc) |
இணையத்தளம் | anthonyalbanese |
புனைப்பெயர் | அல்போ |
சிட்னியில் 1963 மார்ச் 2 இல் பிறந்த அல்பனீசி,[3] புனித மேரி கதீட்ரல் கல்லூரியில் கல்வி பயின்று,[4] சிட்னி பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பட்டப் படிப்பை முடித்தார்.[3] மாணவராக இருந்தபோதே தொழிற் கட்சியில் இணைந்தார்.[5] பின்னர் கட்சி அலுவலராகவும், உள்ளாட்சி அமைச்சில் ஆய்வுப் பணியாளராகப் பணியாற்றினார்.[6] அல்பனீசி ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவைக்கு 1996 தேர்தலில் நியூ சவுத் வேல்சு மாநிலத்தின் கிரைண்ட்லர் தொகுதியில் இருந்து தெரிவானார்.[7] 2001 இல் இவர் முதன் முதலாக தொழிற் கட்சியின் நிழல் அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டார்.[3] 2006 இல் எதிர்க்கட்சி விவவகாரங்களுக்கான மேலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[3]
2007 தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அல்பனீசி நாடாளுமன்ற அவைத் தலைவராகவும், பிராந்திய அபிவிருத்தி, உள்ளாட்சி அமைச்சராகவும், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்தார்.[8] 2010 முதல் 2013 வரை கெவின் ரட், ஜூலியா கிலார்ட் ஆகியோருக்கிடையே இடம்பெற்றுவந்த கட்சித் தலைமைப் போட்டியில், இவர் இருவருக்குமிடையே ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார். 2013 சூன் மாதத்தில் அல்பனீசி கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஆத்திரேலியாவின் துணைப் பிரதமராகப் பதவி ஏற்றார்.[9]
2013 தேர்தலில் தொழிற்கட்சி தோவியடைந்ததை அடுத்து நடைபெற்ற தொழிற்கட்சித் தலைவர் போட்டியில், அல்பனீசி பில் சோர்ட்டனுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[10] பில் சோர்ட்டனின் நிழல் அமைச்சரவையில் அல்பனீசி இணைத்துக் கொள்ளப்பட்டார். 2019 தேர்தலிலும் தொழிற்கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, பில் சோர்ட்டன் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகினார். அல்பனீசி கட்சித் தலைவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டு,[11] எதிர்க்கட்சித் தலைவரானார்.[12][13]
2022 மே 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அல்பனீசி இசுக்காட் மொரிசன் தலைமையிலான லிபரன்-தேசியவாதிகள் கூட்டணியைத் தோற்கடித்து ஆத்திரேலியாவின் 31-வது பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட நான்காவது தொழிற்கட்சித் தலைவர் இவராவார்.[14][15] இவர் 2022 மே 23 இல் பிரதமராகப் பதவியேற்றார்.[16][17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.