இசுக்காட் மொரிசன்

ஆஸ்திரேலியாவின் 30 வது பிரதமர் From Wikipedia, the free encyclopedia

இசுக்காட் மொரிசன்

இசுக்காட் யோன் மொரிசன் (Scott John Morrison[1], பிறப்பு: 13 மே 1968) ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 2018 இல் லிபரல் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, 2018 முதல் 2022 வரை ஆத்திரேலியாவின் 30-வது பிரதமராகப் பதவியில் இருந்தார். 2007 ஆம் ஆண்டிலிருந்து இவர் நியூ சவுத் வேல்சு மாநிலத்தொன் குக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

விரைவான உண்மைகள் ஸ்கொட் மொரிசன்Scott Morrisonநா.உ., ஆத்திரேலியாவின் 30-வது பிரதமர் ...
ஸ்கொட் மொரிசன்
Scott Morrison
Thumb
ஆத்திரேலியாவின் 30-வது பிரதமர்
பதவியில்
24 ஆகத்து 2018  23 மே 2022
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்பீட்டர் கொஸ்குரோவ்
முன்னையவர்மால்கம் டேர்ன்புல்
பின்னவர்அந்தோனி அல்பனீசி
லிபரல் கட்சித் தலைவர்
பதவியில்
24 ஆகத்து 2018  30 மே 2022
Deputyயோசு பிரைடன்பர்க்
முன்னையவர்மால்கம் டேர்ன்புல்
பின்னவர்பீட்டர் டட்டன்
நிதி அமைச்சர்
பதவியில்
21 செப்டம்பர் 2015  24 ஆகத்து 2018
பிரதமர்மால்கம் டேர்ன்புல்
முன்னையவர்ஜோ ஹொக்கி
பின்னவர்யோசு பிரைடன்பர்க்
சமூக சேவைகள் அமைச்சர்
பதவியில்
23 டிசம்பர் 2014  21 செப்டம்பர் 2015
பிரதமர்டோனி அபோட்
மால்கம் டேர்ன்புல்
முன்னையவர்கெவின் ஆன்ட்ரூசு
பின்னவர்கிறித்தியான் போர்ட்டர்
குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
18 செப்டம்பர் 2013  23 டிசம்பர் 2014
பிரதமர்டோனி அபோட்
முன்னையவர்டோனி பர்க்
பின்னவர்பீட்டர் டட்டன்
ஆத்திரேலியா நாடாளுமன்றம்
குக்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 நவம்பர் 2007
முன்னையவர்புரூசு பயார்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஸ்கொட் யோன் மொரிசன்

13 மே 1968 (1968-05-13) (அகவை 56)
வேவர்லி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
அரசியல் கட்சிலிபரல்
பிற அரசியல்
தொடர்புகள்
கூட்டமைப்பு
துணைவர்ஜெனி வாரென்
பிள்ளைகள்2
கல்விநியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (இளங்கலை)
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்
மூடு

சிட்னியில் பிறந்த மொரிசன், நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் படிந்த்து பொருளாதாரப் புவியியலில் பட்டம் பெற்றார். அரசியலில் நுழையும் முன்னர், இவர் 1998 முதல் 2000 வரை நியூசிலாந்து சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். 2004 முதல் 2006 வரை ஆத்திரேலிய சுற்றுலாத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை லிபரல் கட்சியின் நியூ சவுத் வேல்சு கிளையின் பணிப்பாளராகப் பணி ஆற்றினார். 2007 ஆம் ஆண்டு நடுவண் அரசுத்த் தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2010 தேர்தல் வெற்றியின் பின்னர் கட்சியில் முன்வரிசை உறுப்பினரானார்.

2010 தேர்தலில் லிபரல் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அபோட் அமைச்சரவையில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] 2014 டிசம்பரில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில், மொரிசன் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3] 2015 செப்டம்பரில் மால்கம் டேர்ன்புல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்.[4]

2018 ஆகத்து மாதத்தில் பீட்டர் டட்டன் தலைமையில் ஆளும் லிபரல் கட்சியின் பழமைவாதிகளினால் பிரதமர் மால்கம் டேர்ன்புல் ஆட்சிக் கவிழ்ப்பு சவாலை எதிர் கொண்டார். டேர்ன்புல் இச்சவாலை முறியடித்தாலும், அவருக்கு எதிரான சர்ச்சைகள் கட்சியில் அதிகரித்த நிலையில், தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. போட்டியில் இருந்து டேர்ன்புல் விலகிக் கொண்டார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 2018 ஆகத்து 24 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பீட்டர் டட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷொப் ஆகியோரை ஸ்கொட் மொரிசன் எதிர்கொண்டார். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஜூலி பிஷொப் விலகியதை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மொரிசன் பீட்டர் டட்டனை எதிர்கொண்டு 45:40 வாக்குகள் பெற்று கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே நாளில் இவர் ஆத்திரேலியாவின் 30-வது பிரதமராகப் பதவியேற்றார்.[5]

2019 தேர்தலில் மொரிசனின் கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.[6] 2019-20 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலையின் போது விடுமுறை எடுத்ததற்காகவும், இப்பேரழிவை எதிர்கொள்ள இவரது அரசு எடுத்த நடவடிக்கைகளுக்காகவும் மோரிசன் ஒருமனதாக கண்டனம் செய்யப்பட்டார்.[7] 2021 இல் நாடாளுமன்றப் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்காக மோரிசன் பெரும் விமர்சனத்தையும் எதிர்கொண்டார்.[8] கோவிட்-19 பெருந்தொற்றின் போது, மொரிசன் தேசிய அமைச்சரவையை நிறுவினார், அத்துடன் 2020 ஆம் ஆண்டில் பெருந்தொற்றை வெற்றிகரமாக அடக்கிய சில மேற்கத்திய நாடுகளில் ஒன்றாக ஆத்திரேலியா பாராட்டுகளைப் பெற்றது,[9] வெளியுறவுக் கொள்கையில், மொரிசன் ஆக்கசு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம், ஆத்திரேலியா, சீனா இடையேயும்,[10] ஆத்திரேலியா, பிரான்சு இடையேயும்[11] பதற்ற நிலை காணப்பட்டது. 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பை அடுத்து உருசியாவுக்கு எதிரான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு இராணுவத் தளவாட உதவிகளை மொரிசன் வழங்கினார். 2022 கிழக்கு ஆத்திரேலிய வெள்ளத்திற்கு இவரது அரசின் பதிலுக்காகவும் மோரிசன் விமர்சிக்கப்பட்டார்.[12][13][14] அத்துடன் ஆத்திரேலியாவின் காலநிலை மாற்றத்தை அவர் போதுமான அளவில் எதிர்கொள்ளத் தவறியதற்காகவும் விமர்சிக்கப்பட்டார்.[15] 2022 தேர்தலில் மோரிசனின் லிபரல் கட்சி அந்தோனி அல்பனீசி தலைமையிலான தொழிற்கட்சியிடம் தோல்வி கண்டது. அதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.[16]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.