இவர் தனது இஷ்ட தெய்வமான சூரியக் கடவுளான இராவின் சூரியக் கதிர்களின் தேவதையான அதின் வழிபாட்டை பண்டைய எகிப்தில் புகுத்தியவர். அதின் கடவுளைப் பெருமைபடுத்தும் வகையில், தனது ஐந்தாம் ஆண்டு ஆட்சியின் போது, தனது இயற்பெயரான நான்காம் அமென்கோதேப் என்பதை அக்கெனதேன் எனப்பெயர் மாற்றிக் கொண்டவர். மேலும் எகிப்தில் பல கடவுள் வழிபாட்டை ஒழித்து மக்கள் அனைவரும் அதின் கடவுளை மட்டும் வழிபடும் ஓரிறைக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.
இவரது பட்டத்து இராணி நெஃபர்டீட்டீ அழகும், அறிவும் நிரம்பியவள். அக்கேனதெனின் மறைவிற்குப் பின் பத்தொன்பதாம் வம்ச மன்னர்கள், அக்கெனதென் நிறுவிய கல்லறைகள் மற்றும் கோயில்கள் அழித்ததுடன், எகிப்திய மன்னர்களின் பட்டியலிலிருந்து அக்கெனதேனின் பெயர் நீக்கப்பட்டது. மேலும் அவரது (அதின் கடவுளின்) ஓரிறை வழிபாட்டுக் கொள்கை ஒழிந்து, எகிப்தில் மீண்டும் பாரம்பரியக் கடவுள்களின் வழிபாடு படிப்படியாக வளர்ந்தது. [11][12]
கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், பார்வோன் அக்கெனதேன் நிறுவிய அமர்னா நகரமும், அதின் கடவுளின் கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டது.[13]
தீபை நகரத்தில் மணி மகுடம் சூடிய நான்காம் அமென்கோதேப் எனும் அக்கெனதென், புதிய நகரத்தை நிறுவத் துவங்கினார்.
தீபை நகரத்தில், தனது இஷ்ட தெய்வமான இராவின் சூரியக் கதிர்களின் தெய்வமான அதின் கடவுளுக்கு கோயில் மற்றும் அரன்மனைகளை எழுப்பினார்.
பார்வோன் நான்காம் அமென்கொதேப் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாம் ஆண்டில் அமர்னா நகரத்தில் வருகை புரிந்து, தனது பெயரை அக்கெனதென் என அலுவல் முறைப்படி மாற்றிக் கொண்டார். [17]
பண்டைய எகிப்தின் குறிப்புகள், பார்வோன் அக்கெனதென், தான் சீரமைத்த அதின் சமயக் கொள்கைகளை தன் குடிமக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்தார் எனக்குறிப்பிடுகிறது.[18]எகிப்தில் முக்கியத்தும் பெற்ற அமூன் கடவுள் உள்ளிட்ட பல கடவுள்களின் பெயரை மாற்றிக் குறிப்பிட்டார்.[19] பண்டைய எகிப்தின் அனைத்து கடவுள்களையும், தான் வனங்கும் சூரியக் கடவுளான அதெனுக்கு கீழாகக் கருதி வழிபட வைத்தார். ஓரசு தெய்வத்தின் கண் வடிவத்தைத் தாயத்தாக கழுத்தில் கட்டி கொள்ள மக்களை வலியுறுத்தினார். பார்வோன் அக்கெனதெனின் இறப்பிற்குப் பின்னர் பத்தாண்டுகளில், பண்டிய எகிப்தில், பழைய சமய வழிபாடுகள் மீண்டும் படிப்படியாக வளரத்துவங்கியது.
அக்கெனதெனின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பெரும்பாலான கோயில்கள் மற்றும் கட்டிட அமைப்புகள், அவரின் இறப்பிற்குப் பின் எகிப்தின் பத்தொன்பதாம் வம்ச பார்வோன்களால் அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட கட்டிட கற்களை புதிதாக நிறுவப்பட்ட கல்லறைக் கோயில்களின் அஸ்திவாரக் கற்களாகப் பயன்படுத்தப்பட்டது.
அக்கெனதெனின் ஆட்சிக் காலத்தில் அனைத்துத் துறைகளிலும் கலைநயம் சிறப்பாக விளங்கியது. பண்டைய எகிப்தியக் கோயில்கள் மற்றும் பிரமிடுகள் மற்றும் கல்லறைகளில் அரச குடும்பத்தினர், பொது மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களின் சித்திரங்கள், உருவச்சிலைகள் நிறுவப்பட்டது.[20]
பார்வோன் அக்கெதென் மற்றும் அவர்தம் இராணி நெஃபர்டீட்டீ மற்றும் குழந்தைகள் அதின் எனும் சூரியக் கடவுளின் கதிர்களை வழிபடும் சிற்பங்கங்களும், மற்றும் இராணி நெஃபர்டீட்டீயின் அழகிய சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டது.
குடும்பம் மற்றும் உறவினர்கள்
பார்வோன் அக்கெனதெனனுக்கு நெஃபர்டீட்டீ,கியா, மெரிததென் மற்றும் தாடுக்கிபா என நான்கு மனைவியரும், சமென்கரே, மெரிததேன், மெக்கேததென், அன்கேஸ்செனமூன், நெபெர்நெபெருவாதென் தசெரித், நெபெநெருருரே, துட்டன்காமன் என எட்டு மகன்களும் இளவரசி செதெபென்ரே என்ற மகளும் இருந்தனர். [21]
அக்கெனதெனின் கல்லறைக் கோயிலில் அகழாய்வில் கண்டெடுத்த முக்கியமான அமர்னா கடிதங்கள் மூலம், அக்கெனதெனின் ஆட்சி முறை, பண்டைய எகிப்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் அறியமுடிகிறது. மெசொப்பொத்தேமியா உள்ள மித்தானி, இட்டைட்டு, அசிரிய மன்னர்கள், எகிப்தியபார்வோன்களுக்கு, களிமண் பலகைகளில்ஆப்பெழுத்தில் எழுதிய கடிதங்கள் வாயிலாக நிதியுதவியாக கட்டித் தங்கம் கேட்டதையும், பார்வோன் அக்கெனதெனை தங்களின் பேரரசராக ஏற்றதும் தெரியவருகிறது. மித்தானி இராச்சிய மன்னர் தன் மகள் தாடுக்கெப்பாவை அக்கெனதெனுக்கு மணமுடித்துக் கொடுத்தார் என்ற செய்தி அமர்னா கடிதங்கள் மூலம் தெரியவருகிறது.
பார்வோன் அக்கெனதென் தனது ஆட்சிக் காலத்தின் 17-வது ஆண்டில் இறந்ததாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[22] இவரது கல்லறை தீபை நகரத்தில் எழுப்பட்டது. இவரது மறைவிற்குப் பின் அவரது மகன் துட்டன்காமன் எகிப்தின் அரியணை ஏறினார்.
Dodson, Aidan; Amarna Sunset (2009). Nefertiti, Tutankhamun, Ay, Horemheb, and the Egyptian Counter-Reformation. The American University in Cairo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-977-416-304-3 pp. 8, 170
Hornung,Erik(1992-01-01)."The Rediscovery of Akhenaten and His Place in Religion".Journal of the American Research Center in Egypt29: 43–49.doi:10.2307/40000483.
Jürgen von Beckerath (1997). Chronologie des Pharaonischen Ägypten. Mainz: Philipp von Zabern
Berman, Lawrence (1998). "Overview of Amenhotep III and His Reign", and Raymond Johnson, "Monuments and Monumental Art under Amenhotep III" in Amenhotep III: Perspectives on his Reign ed: David O'Connor & Eric Cline, University of Michigan Press
Rosalie David (1998). Handbook to Life in Ancient Egypt, Facts on File Inc.
Edward Chaney, "Freudian Egypt", The London Magazine, April/May 2006, pp.62–69.
Edward Chaney,"Egypt in England and America: The Cultural Memorials of Religion, Royalty and Revolution", in Sites of Exchange: European Crossroads and Faultlines, eds. M. Ascari and A. Corrado (Amsterdam, Rodopi, 2006), pp.39–69.
Peter Clayton (2006). Chronicle of the Pharaohs, Thames and Hudson
Kozloff,Arielle(2006)."Bubonic Plague in the Reign of Amenhotep III?".KMT17(3).
"Lessons for surveillance in the 21st century: a historical perspective from the past five millennia".Soz Praventivmed46(6): 361–68.2001.doi:10.1007/BF01321662.பப்மெட்:11851070.
Shortridge K(1992)."Pandemic influenza: a zoonosis?".Semin Respir Infect7(1): 11–25.பப்மெட்:1609163.
Aldred, Cyril (1991) [1988]. Akhenaten: King of Egypt. Thames & Hudson.
Aldred, Cyril (1973). Akhenaten and Nefertiti. London: Thames & Hudson.
Aldred, Cyril (1984). The Egyptians. London: Thames & Hudson.
Bilolo, Mubabinge (2004) [1988]. "Sect. I, vol. 2". Le Créateur et la Création dans la pensée memphite et amarnienne. Approche synoptique du Document Philosophique de Memphis et du Grand Hymne Théologique d'Echnaton (in French) (newed.). Munich-Paris: Academy of African Thought.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
El Mahdy, Christine (1999). Tutankhamen: The Life and Death of a Boy King. Headline.
Holland, Tom (1998). The Sleeper in the Sands (novel), Abacus – a fictionalised adventure story based closely on the mysteries of Akhenaten's reign
Hornung, Erik (1999). Akhenaten and the Religion of Light, translated by David Lorton. Cornell University Press.
Najovits, Simson. Egypt, Trunk of the Tree, Volume I, The Contexts, Volume II, The Consequences, Algora Publishing, New York, 2003 and 2004. On Akhenaten: Vol. II, Chapter 11, pp.117–73 and Chapter 12, pp.205–13
Redford, Donald B. (1984). Akhenaten: The Heretic King. Princeton University Press
Reeves, Nicholas (2001). Akhenaten: Egypt's False Prophet. Thames and Hudson.
Stevens, Anna (2012). Akhenaten's workers: the Amarna Stone village survey, 2005–2009. Volume I, The survey, excavations and architecture. Egypt Exploration Society.