வெண்ணி (புரதம்)
From Wikipedia, the free encyclopedia
வெண்ணி (ஆல்புமின், Albumin) என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை. வெப்ப ஆற்றலால், இப்பொருள் திரிபடைந்து திரளத்தொடங்கும். இப்பொருளின் வெண் நிறம் பற்றி வெண்ணி என்று பெயர் பெற்றது. இவ்வகைப் பொருட்கள் கோழி முட்டை போன்ற முட்டைகளில் உள்ள வெள்ளைக்கருவிலும் உள்ளன. ஆனால் இவற்றை வெள்ளைக்கரு அல்லது வெண்ணிக்கரு என்னும் பெயரால் அழைக்கப்படும். வெண்ணிகளில் மிகவும் பரவலாக அறியப்படுவது குருதியில் உள்ள வெண்ணிதான் என்றாலும் இவற்றில் சில வகை ஆற்றலை சேமித்து வைக்கும் பொருளாகவும் உள்ளன, சில செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. குருதியில் உள்ள வெண்ணியானது மஞ்சள் நிறக் குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் 60% ஆகும். இந்த வெண்ணிப் பொருட்கள் கல்லீரலில் உருவாகின்றன.

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.