கோத்தா கினபாலு பெருநகரப் பகுதி From Wikipedia, the free encyclopedia
பெரும் கோத்தா கினபாலு (ஆங்கிலம்: Greater Kota Kinabalu மலாய்: Zon Metropolitan Kota Kinabalu) என்பது மலேசியா, கோத்தா கினபாலு பெருநகரத்தின் எல்லைகளை நிர்ணயிக்கும் புவியியல் சொல் ஆகும்.[3]
பெரும் கோத்தா கினபாலு | |
---|---|
பெருநகரப் பகுதி | |
Greater Kota Kinabalu | |
| |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
முதன்மை நகரம் | கோத்தா கினபாலு |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,277 km2 (1,265 sq mi) |
மக்கள்தொகை (2019)[2] | |
• மொத்தம் | 10,92,400 |
• அடர்த்தி | 333/km2 (860/sq mi) |
சபா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான கோத்தா கினபாலு மாநகரம் அமைந்துள்ள கோத்தா கினபாலு மாவட்டம் (Kota Kinabalu District); மற்றும் பெனாம்பாங் மாவட்டம் (Penampang District), துவாரான் மாவட்டம் (Tuaran District), பாப்பார் மாவட்டம் (Papar District) ஆகிய மாவட்டங்களை; இந்தப் பெரும் கோத்தா கினபாலு பெருநகரப் பகுதி உள்ளடக்கி உள்ளது.
கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியில் உள்ளடக்கிய அந்த மாவட்டங்களும் மேற்குக் கடற்கரைப் பிரிவின் ஒரு பகுதியாகும். 2019-ஆம் ஆண்டில், அந்த மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை: 1.1 மில்லியன்; பரப்பளவு: 3,277 கி.மீ.2.
பெரும் கோத்தா கினபாலு எனும் பெயர் பொதுவாக மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களால் அமலாக்கம் செய்யப்படும் சமூக, பொருளாதார மற்றும் மூலோபாய மேம்பாட்டுத் திட்டமிடல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப் படுகிறது.[4]
சபா மேம்பாட்டு பெருவழி (Sabah Development Corridor) திட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒரு சிறப்பு அமைப்பான சபா பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு ஆணையம் (Sabah Economic Development and Investment Authority) தயாரித்த கொள்கை நடவடிக்கை ஆவணத்தில் இந்த வார்த்தை தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது.[5]
2033-ஆம் ஆண்டிற்குள் கோத்தா கினாபாலு மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில், மக்கள்தொகை வளர்ச்சியைத் திட்டமிடும் கொள்கை ஆவணமான சபா கட்டமைப்பு திட்டம் 2033-இல் (Sabah Structure Plan 2033) இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. கோத்தா கினபாலு வெள்ளத் தடுப்புக் குழுவின் (Greater Kota Kinabalu Flood Prevention Committee) பயன்பாட்டிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.[6][7]
பெரும் கோத்தா கினபாலு பகுதி சபாவின் மத்திய மேற்கு கடற்கரையில் (Central West Coast of Sabah) அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் கிழக்கே குரோக்கர் மலைத்தொடராலும் (Crocker Range), மேற்கில் தென் சீனக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.
இந்தப் பெரும் கோத்தா கினபாலு பகுதி, சராசரியாக 10 கி.மீ. அகலம் கொண்ட கடற்கரைச் சமவெளியைக் கொண்டுள்ளது. இங்கு குறைந்த உயரமான மலைகளால் நிறையவே உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 1,951 மீட்டர் உயரம் உள்ள அலாப் மலை (Mount Alab) இந்தப் பகுதியில்தான் உள்ளது.
கோத்தா கினபாலு மத்திய வணிக மாவட்டத்திற்கு (Kota Kinabalu Central Business District) அருகில் பல தீவுகள் உள்ளன. துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா(Tunku Abdul Rahman National Park) ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும்.
கோத்தா கினபாலு மத்திய வணிக மாவட்டத்தில் இருந்து, 56 கிமீ தொலைவில், தென் சீனக் கடலில் மெங்காலும் தீவு (Mengalum Island) உள்ளது.
2010-இல், பெரும் கோத்தா கினபாலுவின் மக்கள் தொகை 855,556 ஆகும். பெனாம்பாங் மாவட்டம் இப்பகுதியில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும். அதைத் தொடர்ந்து கோத்தா கினபாலு மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 2019-இல் கிட்டத்தட்ட 1.1 மில்லியனாக இருந்தது.
மாவட்டம் | பரப்பளவு (கிமீ²) | மக்கள் தொகை (2020)[8] | அடர்த்தி (மக்கள்/கிமீ²) | மக்கள் தொகை (2010) | அடர்த்தி (மக்கள்/கிமீ²) |
---|---|---|---|---|---|
கோத்தா கினபாலு | 352 | 572,704 | 1,627 | 452,058 | 1,284 |
பெனாம்பாங் | 467 | 152,709 | 327 | 121,934 | 261 |
துவாரான் | 1,170 | 128,700 | 110 | 102,411 | 88 |
பாப்பார் | 1,248 | 167,337 | 134 | 124,420 | 99 |
பெரும் கோத்தா கினபாலு | 3,277 | 1,021,450 | 855,556 | 261 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.