From Wikipedia, the free encyclopedia
பட்டணத்தில் பூதம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[1] கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். வீனஸ் பிக்சர்சுக்காக "பிராஸ் பாட்டில்"[2] என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற இக்கற்பனைக் கதையை புகழ்பெற்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் உருவாக்கினார். மேலும் இப்படத்தில் பூதமாகத் தோன்றினார்.
பட்டணத்தில் பூதம் | |
---|---|
இயக்கம் | எம். வி. ராமன் |
தயாரிப்பு | டி. கோவிந்தராஜன் சாரதா புரொடக்ஷன்ஸ் |
கதை | ஜாவர் சீதாராமன் |
இசை | ஆர். கோவர்த்தனன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா நாகேஷ் வி. கே. ராமசாமி வி. எஸ். ராகவன் |
ஒளிப்பதிவு | ஹச். ஜி. ராஜு, ரவிகாந்த் நியாகச் |
படத்தொகுப்பு | எம். வி. ராமன், ஆர். பாஸ்கரன், பி.ஸ்டான்லி |
வெளியீடு | ஏப்ரல் 14, 1967 |
நீளம் | 4790 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கூடைப்பந்து வீர்ரான பாஸ்கர் (ஜெய்சங்கர்), தொழிலதிபர் தங்கவேலின் (வி. கே. ராமசாமி) மகள் லதாவை (கே. ஆர். விஜயா) சந்திக்கிறார். இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கே. பாலாஜி. இதற்கிடையில் கலைப்பொருள் என்று நினைத்துப் பழம்பெரும் ஜாடி ஒன்றை வாங்கிவருகிறார் தங்கவேல். அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களால் அதை துரதிஷ்டம் என நினைக்கும் தங்கவேல், அந்த ஜாடியைக் கவிதைப் போட்டிக்கு நன்கொடையாக அளித்துவிடுகிறார். அந்தப் போட்டியில் வெல்லும் பாஸ்கருக்கு ஜாடி பரிசாகக் கொடுக்கப்படுகிறது. பாஸ்கரும் அவரது நண்பர் சீசர் சீனுவும் (நாகேஷ்) வீட்டுக்கு வந்து ஜாடியில் என்ன இருக்கிறது என அறிய அதை சிரம்ப்பட்டு திறக்கிறார்கள்.
அதிலிருந்து அரேபிய பூதம் விடுதலையாகிறது. அந்த பூதம் பாஸ்கர், சீசர் சீனு ஆகியோருக்கு சேவை செய்கிறது, பாஸ்கரை சந்தேகப்பட்டுப் பிரியும் லாதாவை அரேபிய பூதமான ஜீ பூம் பா. சேர்த்து வைப்பதோடு; தங்கவேலுவின் தொழில் கூட்டாளியான சபாபதியும் ( வி.எஸ்.ராகவன்) அவரது மகனும் மோசமான கள்ளக் கடத்தல் கும்பலின் சூத்திரதாரிகள் என்பதைக் கண்டறிந்து அவர்களை போலீஸிடம் பிடித்துக்கொடுக்க உதவுகிறது. இறுதியில் பூதம் பூமியை விட்டுக் கிளம்புகிறது.
பாடல்கள்[3]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்.
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "கண்ணில் கண்டதெல்லாம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:10 | |
2. | "இதழை விரித்தது..." | டி. எம். செளந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 05:58 | |
3. | "நான் யார்..." | பி. சுசீலா | 03:14 | |
4. | "அந்த சிவகாமி..." | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 06:07 | |
5. | "உலகத்தில் சிறந்தது..." | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஏ. எல். ராகவன், | 06:02 | |
மொத்த நீளம்: |
25:31 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.