தேவகோட்டை
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
தேவகோட்டை (ஆங்கிலம்:Devakottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.செட்டிநாடு என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் 76 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று.
தேவகோட்டை | |||||
— முதல் நிலை நகராட்சி — | |||||
ஆள்கூறு | 9°57′19″N 78°48′58″E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | சிவகங்கை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை | 51,865 (2011[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
செட்டிநாட்டு வீடுகள் தேவகோட்டையின் சிறப்பு.இதன் அருகாமையில் உள்ள நகரம் காரைக்குடி ஆகும்.
இவ்வூரின் அமைவிடம் 9.95°N 78.82°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது.தேவகோட்டையில் மொத்தம் 16 ஊரணிகள் உள்ளன.காரைக்குடி இதன் அருகாமையில் உள்ள நகரமாகும்[சான்று தேவை]
திருச்சிராப்பள்ளி – இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், திருச்சியிலிருந்து இராமேசுவரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை விமான நிலையமாகும். அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை சாலை ரயில் நிலையம். காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம் 15 கீ. மீ தொலைவில் உள்ளது தேவகோட்டையில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவகோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவகோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும்.
சோழ நாட்டில் காவிரிபூபட்டினத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த ஊர்களில் ஒன்று தேவி கோட்டை அதன் நினைவாக பாண்டிய நாட்டில் இந்த ஊருக்கு தேவி கோட்டை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் தேவி கோட்டை என்பது "தேவகோட்டை" என மருவியது.[6]
சுதந்திர போராட்ட காலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவகோட்டையில் பெரும் கிளர்சசி நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர்களால் தேவகோட்டை முனிசிப் நீதிமன்றம் தீ மூட்டப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை ஆர்ச் பகுதியில் ஆங்கிலேயர்களால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தினால் தேவகோட்டை "தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்" என்று அழைக்கப்படுகிறது.[7]
தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்
தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள்.
தேவகோட்டை அருகே உள்ள கோயில்கள்.
தமிழிசையை வளர்க்கும் நோக்கத்துடன் டி.ஆர்.அருணாச்சலம் மற்றும் சின்ன அண்ணாமலை முயற்சியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நிதியுதவியுடன் இரண்டாவது தமிழிசை மாநாடு தேவகோட்டையில் 1941ஆம் ஆண்டு நடைபெற்றது.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.