From Wikipedia, the free encyclopedia
தகப்பன்சாமி (Thagappansamy) 2006 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் பூஜா நடிப்பில் சிவ சண்முகம் இயக்கத்தில் திருச்சி கோபால்ஜி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். படத்தின் இசையமைப்பாளர் சிறீகாந்து தேவா. தயாரிப்புப் பிரச்சனைகளால் இப்படம் தாமதமாக 28 திசம்பர் 2006 இல் வெளியானது.
தகப்பன்சாமி | |
---|---|
இயக்கம் | சிவ சண்முகம் |
தயாரிப்பு | திருச்சி கோபால்ஜி |
கதை | ராஜேஷ் கந்தன் |
இசை | சிறிகாந்து தேவா |
நடிப்பு | பிரசாந்த் பூஜா நமிதா கருணாஸ் வின்சென்ட் அசோகன் |
ஒளிப்பதிவு | ஜெ. ஸ்ரீதர் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | திருமலை கிரியேசன்ஸ் |
வெளியீடு | 28 திசம்பர் 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதிர்வேல் (பிரசாந்த்) தனது கிராமத்தின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய முயற்சிக்கிறான். அவனது கிராமத்தில் தொடர்ந்து மழைப்பொழிவு தவறுவதால், வறட்சி நீடிக்கிறது. எனவே தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட மக்கள் முடிவுசெய்கிறார்கள். நிலத்தடி நீரைக் கணித்துச் சொல்லும் சண்முகத்தை (மகாதேவன்) அழைத்து வருகிறான். சண்முகத்தோடு அவன் மனைவியும், மகள் மரிக்கொழுந்தும் (பூஜா) வருகிறார்கள். எதிர்பாராவிபத்தின் காரணமாக சண்முகம் இறக்கிறார். தொடர்ந்து நீருக்காக செய்யும் முயற்சிகள் தோல்வியடைகிறது.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஊர்மக்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறும் கடினமான முடிவைக் கனத்த இதயத்துடன் எடுக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பண்ணைக்கு வேலைபார்க்கச் செல்கின்றனர். அங்கு சென்றபிறகுதான் தாங்கள் அனைவரும் அங்கே கொத்தடிமைகளாக 3 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அழைத்து வரப்பட்ட விடயமும், அங்கிருந்து வெளியேற முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியவருகிறது. ஓய்வின்றி கடினமான வேலைகள் அவர்களுக்குத் தரப்படுகிறது. நிலக்கிழாரான தாகூர் தாஸ் (வின்சென்ட் அசோகன்) அவர்களை உடல் மற்றும் மனரீதியாகக் கொடுமைப்படுத்துகிறான். அவனது சகோதரி (நமிதா) கதிர்வேலின் சாகசங்களால் ஈர்க்கப்பட்டு அவனை விரும்புகிறாள்.
கதிர்வேல் அந்தக் கொடுமைகளில் இருந்து தன் கிராமத்தினரை எப்படி மீட்டான்? மரிக்கொழுந்தை திருமணம் செய்தானா என்பதே மீதிக்கதை.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் பா. ரஞ்சித் இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.[1]
படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. படத்தின் பாடல்கள் 15 திசம்பர் 2005 இல் வெளியாகி ஒரு வருடத்திற்குப் பிறகே திரைப்படம் வெளியானது.
வ. எண் | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | பணியாரம் சுட்டு | உதித் நாராயணன், மாலதி லக்ஷ்மன் |
2 | ஆரியமாலா | பலராம், சாதனா சர்கம் |
3 | சங்கு சக்கர | சங்கர் மகாதேவன் |
4 | காதல் முனிவா | அனுபமா, சத்யன் |
5 | ஆதி சிவனே | கருணாஸ், சின்னப்பொண்ணு, சிவ சண்முகம் |
6 | செம்பருத்தி (சிறுபாடல்) | முகேஷ் |
7 | ஆராரோ ஆரிரரோ | முகேஷ் |
8 | புட்டுக்கு (சிறுபாடல்) | கங்கா |
9 | பொறந்த மண்ணுல (சிறுபாடல்) | முகேஷ் |
10 | மழை பெய்யுது | பேபி வைசாலி |
11 | இருக்கன்குடி (சிறுபாடல்) | சின்னப்பொண்ணு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.