From Wikipedia, the free encyclopedia
ஆல்ப்ஸ் (Alps, செருமன்: Alpen; பிரெஞ்சு: Alpes; இத்தாலியம்: Alpi) என்பது ஐரோப்பாவில் உள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும். ஆல்ப்ஸ் மலைத்தொடர் 1,200 கிலோமீட்டர்கள் (750 மைல்) நீண்டு அமைந்துள்ளது. இது கிழக்கில் ஆஸ்திரியா முதல் சுலோவீனியா வரையும், தெற்கே இத்தாலி, மொனாக்கோ, மேற்கே சுவிட்சர்லாந்து, லெய்செஸ்டீன், செருமனி, பிரான்சு வரையும் பரந்து காணப்படுகிறது. இந்த எட்டு நாடுகளையும் 'அல்பைன் நாடுகள்' என்று அழைப்பர். ஆல்ப்சின் மிகவும் உயரமான மலையான மொன்ட் பிளாங்க் 4,808 மீட்டர் உயரமானது. இது பிரான்சு-இத்தாலி எல்லையில் அமைந்திருக்கிறது.
ஆல்ப்சு Alps | |
---|---|
மோண்ட் பிளாங்க், ஆல்ப்சின் மிக உயரமான மலை | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | மோண்ட் பிளாங்க் |
உயரம் | 4,810.45 m (15,782.3 அடி) |
புவியியல் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Alpenrelief 01.jpg" does not exist.
| |
நாடுகள் | சுலோவீனியா, பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆசுதிரியா and லீக்டன்ஸ்டைன் |
நிலவியல் | |
மலை பிறப்பு | உயர் மலை ஆக்கம் |
பாறையின் வயது | மூன்றாம் ஊழி |
பாறை வகை | Bündner schist, flysch and molasse |
இந்த மலைத்தொடர் ஐரோப்பாவின் பெரிய மலைத்தொடர் அமைப்புகளுள் ஒன்று. அல்பைன் பகுதியில் பல சிகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 4,000 க்கும் அதிகமான மீட்டர் அளவு (13,123 அடி) கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் "நான்கு ஆயிரங்கள்" என்று அம்மக்கள் அழைக்கின்றனர். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மொத்தம் எண்பத்து இரண்டு சிகரங்கள் 4000 மீட்டர் நீளத்திற்கு மேல் உள்ளது.
ஆல்ப்ஸ் என்னும் ஆங்கில வார்த்தை அல்பஸ் என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பற்றது ஆகும். அல்பஸ் என்னும் லத்தீன் வார்த்தைக்கு வெள்ளை என்று பொருள்.
பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் அல்ப் (ALP), அல்ம் (alm), அல்ஃப் (albe) அல்லது அல்பெ (alpe) என்னும் பெயர்கள் சிகரங்களின் கீழே உள்ள மேய்ச்சல் நிலங்களைக் குறிக்கிறது. அதனால் "ஆல்ப்ஸ்", என்று மலைகளின் முகடுகளை குறிப்பிடுவது ஒரு தவறான வழக்கம் ஆகும். மலைச் சிகரங்களின் பெயர்கள் நாடு மற்றும் மொழிகள் மூலம் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, கொம்பு (ஹொர்ன்), கொகெல் (kogel), கிப்ஃபெல் (gipfel) மற்றும் மிதவை (பெர்க்) போன்ற சொற்கள் செருமன் மொழி பேசும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மோண்ட் மற்றும் மென் துரப்பணம் போன்ற சொற்கள் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளிலும், நம்பத்தகாத (மொன்டெ) அல்லது சிமா (CIMA) போன்ற வார்த்தைகள் இத்தாலிய மொழி பேசும் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன[1] .
எந்த மொழியில் என்ன பெயர் வைத்து அழைத்தாலும், நிரந்தர பனியுடன் வெண்மையாக காட்சி அளிப்பதால் அல்பஸ் என்னும் லத்தீன் பெயரே நிலைத்துவிட்டது.
ஆல்ப்சு என்பது மத்திய ஐரோப்பாவின் பிறை வடிவத்திலமைந்த புவியியல் சிறப்பம்சம் கொண்ட மலைத்தொடராகும் , இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 800 கிமீ (500 மைல்) வளைநீளத்திலும் 200 கிமீ (120 மைல்) அகலத்திலும் அமைந்துள்ளன.மலை உச்சியின் சராசரி உயரம் 2.5 கிமீ (1.6 மைல்) ஆகும் [2] மத்தியதரைக் கடலில் தொடங்கி போ படுகைக்கு (po basin) மேலே பிரான்சு வழியாக கிரெனோபிளிலிருந்து கிழக்கு நோக்கி மத்திய மற்றும் தெற்கு சுவிச்சர்லாந்து வரை நீண்டு வியன்னா, ஆஸ்திரியா மற்றும் கிழக்கே ஏட்ரியாட்டிக் கடல் மற்றும் ஸ்லோவேனியா வரைத் தொடர்ந்து [3][4] செருமனியின் பவேரியா வரைக்கும் பரவியுள்ளது.சியாசோ, சுவிட்சர்லாந்து மற்றும் அல்காவ், பவேரியா போன்ற பகுதிகளில், மலைத் தொடர்களுக்கும் தட்டையான நிலப்பகுதிக்கும் இடையே உள்ள எல்லைகளை தெளிவாகக் கூறுகின்றன; ஜெனீவா போன்ற பிற இடங்களில், எல்லைக் கோடு தெளிவற்று உள்ளது. சுவிஸ், பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகியவை மிகப்பெரிய அல்பைன் பனிப் பிரதேசத்தில் உள்ள நாடுகளாகும்.
ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக மேற்கு ஆல்ப்ஸ் எனவும் கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் ஆஸ்திரியா, செருமனி, இத்தாலி, லெய்செஸ்டீன், சுலோவீனியா ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை மொன்ட் பிளாங்க் ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது பீஸ் பேர்னினா (Piz Bernina), இது 4,049 மீ (13,284 அடி) உயரமானது.
இந்த மலைகள் ஆப்பிரிக்கா மற்றும் யுரேசியா டெக்டோனிக் அடுக்குகள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மோதியதால் உருவாக்கப்பட்டது ஆகும். பூமியின் இரண்டு அடுக்குகள் மோதும் பொழுது ஏற்படும் தீவிர சுருங்குதலினால் கடல் படிவப் பாறைகள் ஒன்றன் மீது மற்றொன்று மோதி உயர் மலைச் சிகரங்களும், மடிப்பு மலைகளும் உருவாகும். இதுபோன்று உருவானதே ஆல்ப்ஸ் மலைத்தொடரும், மோண்ட் பிளாங்க் மற்றும் மேட்டர்ஹார்ன் போன்ற மலை சிகரங்களும் ஆகும். மோண்ட் பிளாங்க் பிரஞ்சு-இத்தாலிய எல்லை பரவியிருக்கின்றது.
ஐரோப்பாவின் மொத்த காலநிலையும் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் காலநிலை பாதிக்கும்.ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெய்யும் மழையெ ஐரோப்பாவின் மொத்த காலநிலையும் மாற்றுகின்றது.
நிலவியலாலர்கள் 18 ஆம் நூற்றாண்டில் ஆல்ப்ஸ் ராக் அமைப்புக்களை பற்றி படிக்கத் தொடங்கினார்கள்.அவ்வாராய்ச்சியின் போது அதன் உருவாக்கம் பற்றி பல கருத்துகள் வெளியிட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் உள்ள ஜியோசைகிலின்(geosynclines) போன்ற கோட்பாடுகள் மூலம் "மடிந்த" மலை சங்கிலிகள் பற்றி விளக்க பயன்படுத்தினர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் 'டெக்டோனிக் பலகை கோட்பாடு' என்பதையே பரவலாக ஏற்று கொண்டனர்.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் உருவாக்கம் (உயர் மலை ஆக்கம்) ஒரு உபகதை(episodic process) செயலாக இருந்தது ஆகும்.சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று நிலவியலாலர்கள் கூறுகின்றனர்.
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மனித வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பாலியோலித்திக் காலம் வரை பின்னோக்கி செல்கின்றன.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5,000 ஆண்டுகள் பழமையான பதபடுத்தப்பட்ட மனித உடலை, 1991 இல் ஆஸ்திரிய-இத்தாலிய எல்லைப்பகுதியில் ஒரு பனிக்கட்டியின் உள்ளே கண்டுபிடித்தார்கள்.கி.மு. 6 ம் நூற்றாண்டுகளில், 'செல்டிக் லா தேனே' என்னும் கலாச்சாரம் இங்கு நிறுவப்பட்டு உள்ளது. அல்பைன் பகுதிகள் ஒரு வலுவான கலாச்சார அடையாளத்தை இன்றும் கொண்டுள்ளது.அல்பைன் பகுதிகள் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுற்றுலாத்துறையினால் வளரத் தொடங்கியது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்பகுதிகள் பெரிதும் விரிவடைந்தது. எனினும், அல்ப்ஸில் வாழும் மக்கள் பாரம்பரிய தொழிலான விவசாயம்,பாலாடைக்கட்டி தயாரித்தல் (cheesemaking), மற்றும் மரப்பொருட்கள் செய்தல் போன்றவற்றையே பின்பற்றுகிறார்கள். தற்போது இந்த பிராந்தியத்தில் 14 மில்லியன் மக்கள் குடிமக்களாகவும், 120 மில்லியன் மக்கள் ஆண்டு பார்வையாளர்களாகவும் உள்ளனர்.
சுற்றுலா துறையில் வெளிநாட்டவர்களின் ஆல்ப்ஸ் விஜயம், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. இயற்கைக்காட்சிகளை அனுபவிக்கவும், மலைகளில் பயணம் செய்யவும் அதிக அளவில் வந்தனர். கீழ்நோக்கி பனிச்சறுக்கு செய்யும் விளையாட்டு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில பார்வையாளர்களிடையே ஒரு பிரபலமான விளையாட்டாக மாறியது.
இத்தாலியின் பனிச்சறுக்கு, ஸ்கை-லிப்ட் போன்றவை அல்ப்ஸ் பகுதியில் சுற்றுலா கோடை பார்வையாளர்களை கவர்வனவை ஆகும். இத்தாலி ஒரு மில்லியன் ஆண்டு பார்வையாளர்களை கொண்ட உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும்[5].
மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு, ஆல்பைன் பகுதிகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளன. 1924 குளிர்கால ஒலிம்பிக்ஸ், சாமோனிக்ஸ், பிரான்சில்; 1928 குளிர்கால ஒலிம்பிக்ஸ் , புனித மொறிட்ஸ், சுவிச்சர்லாந்து; மற்றும் 1936 குளிர்கால ஒலிம்பிக்ஸ், கார்மிஷ்-பார்டென்கிர்ஷென்(Garmisch-Partenkirchen), ஜெர்மனி.
ஆல்ப்சானது போருக்காகவும் வணிகத்திற்காகவும் கடக்கப்பட்டிருக்கிறது.யாத்திரை செல்வோர், மாணவர்கள் மற்றும் சுற்றுலா வாசிகளாலும் இம்மலைத்தொடர் கடக்கப்பட்டுள்ளது.சாலை வழியாகவும் தொடர் வண்டிகள் மூலமாகவும் கால்நடையாகவும் கடக்கக்கூடிய கடவு (passes) என்றழைக்கப்படும் இவை சமவெளிப்பகுதிகளிலிருந்து பள்ளத்தாக்குகளுடன் கூடிய மலைப்பிரதேச மண்டலங்களுக்கு இட்டுச்செல்கின்றன[6].இடைக்கால காலத்தில் இம்மலைத் தொடரிலுள்ள முக்கிய வழிகளிலுள்ள மலையுச்சிகளில் சமய உத்தரவுகளால் (religious order) அறவுளிகள் (தீராநோயுற்றோர் கவனிப்பு இல்லம்-hospices) நிறுவப்பட்டது [7]
அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள பட்டியலின் படி ஆல்ப்சு மலைத்தொடரின் 128 உச்சிமுனைகள் மற்றும் துணை உச்சிகள் கடல் மட்டத்திலிருந்து 4000 மிட்டர் (13,123 அடிகள்) அதற்கு மேற்பட்ட உயர அளவுகளில் பிரான்சு, இத்தாலி, மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடகளில் காணப்படுவதாக சர்வதேச மலையேற்ற சம்மேளனம் International Climbing and Mountaineering Federation (UIAA) வரையறுத்துள்ளது.இவ்வமைப்பு 4000 மீட்டர் அதற்கு அதிமான உயரமுள்ள 82 மலையுச்சி முனைகளின் பெயர் பட்டியலை 1994 ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இப்பட்டியலில் 4000 மீட்டர் அதிகமான உயரமுள்ள 82 மலையுச்சிகளை அனைத்துலக மலையேற்ற சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக வெளிட்டுள்ளது இவற்றுல் 48 சுவிச்சர்லாந்திலும் 45 வலைசிலும் 7 பெர்னிலும் 38 இத்தாலியிலும் பிரான்சில் 25 ம் உள்ளன. கீழே உள்ள அட்டவணை நான்காயிரம் மீட்டர் உயரம் கொண்ட உச்சி முனைகளையும் அதற்கு குறைந்த உயரம் கொண்ட மலைத்தொடர்களும் நாடுகள் வாரியாக காட்டுகிறது.
குறையளவுப் பிதுக்கம் | UIAA பட்டியல் | விரிவாக்கப்பட்ட பட்டியல் | கார்ல் புலோடிக் Karl Blodig பட்டியல் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாடு / தொடர் | 2,000 மீட்டர்கள் (6,562 அடி) | 1,500 மீட்டர்கள் (4,921 அடி) (Ultras) | 1,000 மீட்டர்கள் (3,281 அடி) | 500 மீட்டர்கள் (1,640 அடி) | 300 மீட்டர்கள் (984 அடி) | 200 மீட்டர்கள் (656 அடி) | 100 மீட்டர்கள் (328 அடி) | 30 மீட்டர்கள் (98 அடி) | - | - | - |
சுவிச்சர்லாந்து | 3 | 4 | 9 | 17 | 24 | 28 | 37 | 46 | 48 | 71 | 41 |
இத்தாலி | 1 | 2 | 3 | 5 | 7 | 8 | 20 | 31 | 38 | 60 | 25 |
பிரான்ஸ் | 2 | 2 | 2 | 4 | 4 | 6 | 11 | 20 | 25 | 41 | 13 |
பென்னைன் ஆல்ப்ஸ் | 1 | 2 | 6 | 11 | 15 | 19 | 26 | 38 | 41 | 65 | 34 |
பிளான்ங் மாசிப் கிகரம் | 1 | 1 | 1 | 3 | 3 | 5 | 11 | 23 | 28 | 46 | 15 |
பெர்னிஸி ஆல்ப்ஸ் | 1 | 1 | 2 | 5 | 7 | 7 | 9 | 9 | 9 | 10 | 9 |
தௌபின் ஆல்ப்ஸ் | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 2 | 3 | 1 |
பெர்னியா தொடர் | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 2 | 1 |
கிரெயன் ஆல்ப்ஸ் [8] | 0 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 2 | 1 |
மொத்தம் | 5 | 7 | 12 | 22 | 29 | 35 | 51 | 73 | 82 | 128 | 61 |
ஆல்ப்ஸ் மலைத்தொடர் பல்வகை தாதுக்களின் ஆதாரமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை வெட்டி எடுக்கப்படுகின்றன.ஹால்ஸ்டாட் கலாச்சாரத்தில் (புராதனக் கற்காலத்தின் நாகரிகப் பகுதி) கி.மு. 8 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளில், செல்டிக் பழங்குடியினர் செம்புகளை வெட்டி எடுத்தனர். பின்னர் ரோமானியர்கள் பாட் கஸ்தின் பகுதியில் நாணயங்களுக்காக தங்கத்தை வெட்டினார்கள். ஸ்டீரியாவின் எர்ஜ்பெர்க் எஃகு தொழிற்துறைக்கான உயர்தர இரும்பு தாதுவை வழங்குகிறது.அல்பைன் பிராந்தியத்தில் இங்குலிகம் (cinnabar), சுகந்திக்கல் (amethyst) மற்றும் குவார்ட்ஃசு (quartz) போன்ற படிகங்கள் பரவலாக காணப்படுகின்றன . சுலோவேனியாவில் உள்ள இங்குலியப் படிவுகள் இங்குலிக நிறமிகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன[9].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.