இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (தெலுங்கு: ఆల్ ఇండియా మజ్లిస్ ఎ ఇత్తెహాదుల్ ముస్లిమీన్, All India Majlis-e-Ittehad-ul Muslimeen, AIMM) சுருக்கமாக மஜ்லிஸ் கட்சி என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சியாகும். பிரித்தானிய இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் 1927 ஆம் ஆண்டில் ஐதராபாத்து நகரத்தில் நிறுவப்பட்டது. [3]
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |
---|---|
சுருக்கக்குறி | AIMIM |
தலைவர் | அசதுத்தீன் ஒவைசி |
நிறுவனர் | சுல்தான் சலாவுதீன் ஒவைசி |
மக்களவைத் தலைவர் | அசதுத்தீன் ஒவைசி |
தொடக்கம் | 12 நவம்பர் 1927 |
தலைமையகம் | அகபுரா, ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா. |
கொள்கை | இசுலாம்[1] |
நிறங்கள் | பச்சை |
இ.தே.ஆ நிலை | தெலங்காணா (மாநில கட்சி) பீகார் (மாநில கட்சி) |
கூட்டணி | சனநாயக மதச்சார்பற்ற முன்னணி (2020-தற்போதுவரை)[2] ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2008-2012) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவை & மாநிலச் சட்டமன்ற மேலவை) | Indian states 5 / 243 மகாராஷ்டிர சட்டமன்றம் 2 / 288 தெலங்காணா சட்டப் பேரவை 7 / 119 தெலங்காணா சட்ட மேலவை 2 / 40
|
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
1927 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாநிலத்தின் நிசாம் மீர் உஸ்மான் அலி கான் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஐதராபாத் மாநிலத்தின் அதிகாரியாக இருந்த நவாப் முகம்மது நவாஸ் கான் என்பவரால் இக்கட்சி நிறுவப்பட்டு, வரையறுக்கப்பட்டது. பகதூர் யார் ஜங் இதன் முதல் தலைவராக 1938ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அசதுத்தீன் ஒவைசி இதன் தற்போதைய தலைவராக இருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.