சோவியத் வானியற்பியல் From Wikipedia, the free encyclopedia
விக்தர் அமசாசுபோவிச் அம்பர்த்சுமியான் (Victor Amazaspovich Ambartsumian, உருசியம்: Ви́ктор Амаза́спович Амбарцумя́н; ஆர்மீனியம்: Վիկտոր Համզասպի Համբարձումյան, 18 செப்டம்பர் [யூ.நா. 5 செப்டம்பர்] 1908 – 12 ஆகத்து 1996) ஒரு சோவியத் ஒன்றிய ஆர்மேனிய அறிவியலாளர், கோட்பாட்டு இயற்பியலை நிறுவியவர்களில் ஒருவர்.[1] கணித இயற்பியலுக்குப் பெரும் பங்களிப்பு செய்த இவர் விண்மீன் இயற்பியல், ஒண்முகில், உடுக்கண வானியல், உடுக்கண அமைப்புகளின் இயங்கியல், விண்மீன்களின் அண்டப்பிறப்பியல், பால்வெளிகள் ஆகிய புலங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
விக்தர் அம்பர்த்சுமியான் | |
---|---|
பிறப்பு | திபிலீசி, உருசியப் பேரரசு (இன்றைய ஜார்ஜியா) | 18 செப்டம்பர் 1908
இறப்பு | 12 ஆகத்து 1996 87) பியூரகான், ஆர்மேனியா | (அகவை
தேசியம் | ஆர்மேனியர் |
துறை | கோட்பாட்டு இயற்பியல் |
விருதுகள் | உலொமனசோவ் பொற்பதக்கம் (1971) |
இவர் 1946 இல் பியூரகான் வான்காணகத்தை நிறுவினார்.[2][3] இவர் ஆர்மேனியக் கல்விக்கழகத்தின் இரண்டாம் நெடுநாளைய தலைவராவார் (1947–93). இவர் 1961 முதல் 1964 வரை பன்னாட்டு வானியல் ஒண்றியத்தின் தலைவரக விளங்கினார். இவர் இருமுறை பன்னாட்டு அறிவியல் ஒன்றியத்தின் மன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் (1966–72).
இவர் அரசு வானியல் கழகம் உட்பட பல கல்விக்கழகங்களின் அயல்நாட்டு உறுப்பினராக இருந்துள்ளார்.[4] இவற்றில் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகமும் அடங்கும். இவர் பெற்ற விருதுகளாவன இசுடாலின் பரிசு (1946, 1950), சமவுடைமை உழைப்பு வீர்ர் (1968, 1978), உருசியக் கூட்டமைப்பின் அரசு பரிசு அரசு வானியல் கழ்கத்தின் பொற்பதக்கம்,[5] புரூசு பொற்பதக்கம்,[6] ஆர்மேனியத் தேசிய வீர்ர் ஆகியன உள்ளடங்கும்.
இவரது பெயரிடப்பட்டவை
ஆர்மேனியக் குடியரசின் தலைவர் அறிவியலுக்கான அம்பர்த்சுமியான் பன்னாட்டுப் பரிசு ஒன்றை நிறுவி அறிவித்துள்ளார். இது வானியற்பியலிலும் அதுசார்ந்த கணிதவியல், இயற்பியல் துறைகளுக்கும் தரப்படும். $500,000 மதிப்புள்ள இது வென்றவரின் நாட்டைப் பற்றிக் கருதாமல் அனைத்து நாட்டினருக்கும் வழங்கப்படுகிறது. இப்பரிசு முதலில் 2010 இல் வழங்கப்பட்டது.[7]
Seamless Wikipedia browsing. On steroids.