இராமகிருஷ்ண மடம், சென்னை
ராமகிருஷ்ணரால் நிறுவப்பட்ட ஆண்களுக்கான துறவற அமைப்பு. From Wikipedia, the free encyclopedia
ராமகிருஷ்ணரால் நிறுவப்பட்ட ஆண்களுக்கான துறவற அமைப்பு. From Wikipedia, the free encyclopedia
இராமகிருஷ்ண மடம், சென்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் [1836-1886] நினைவாக சென்னை, மைலாப்பூரில் கட்டப்பட்டது இராமகிருஷ்ண மடம். இம்மடம், கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்தின், தென்னிந்தியாவில் அமைந்துள்ள முதல் கிளை மடம் ஆகும். இம்மடம், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரால் தொடங்கப்பட்டது.[1]
இராமகிருஷ்ண மடம், சென்னை. | |
---|---|
இராமகிருஷ்ண மடம், சென்னை | |
ஆள்கூறுகள்: | 13°1′51″N 80°16′2″E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | மைலாப்பூர், சென்னை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இராமகிருஷ்ண பரமஹம்சர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து, இசுலாம், பௌத்தம், கிறித்தவம், ஆகிய சமயங்களின் கட்டிடக்கலையின் கலவையாகும். |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1994 |
அமைத்தவர்: | ஸ்ரீஇராமகிருஷ்ண இயக்கம் |
இணையதளம்: | www |
பிப்பிரவரி மாதம், 1897ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் மேற்குலக நாடுகளில் ஆன்மீகப் பயணம் முடித்து கொல்கத்தாவிற்கு திரும்புகையில் சென்னையில் சில நாட்கள் தங்கினார். அவ்வமயம் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் பக்தர்கள், சென்னையில் இராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவாக ஒரு நிலையான மடம் கட்ட கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற சுவாமி விவேகானந்தர், மார்சு மாதம், 1897-இல் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரை தென்நாட்டு தூதராக ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தை கட்டுவதற்கு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.[2]
சென்னை கடற்கரை ஓரத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ் ஹவுஸ் எனும் (தற்பொழுது விவேகானந்தர் இல்லம்) மூன்று மாடி கட்டிடத்தில் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் மடம் உருவாகியது. இக்கட்டிடத்தின் உரிமையாளர் பிலிகிரி அய்யங்கார், இராமகிருஷ்ணரின் தீவிர பக்தர். தனது மூன்று மாடி கட்டிடத்தை ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தின் கிளை மடமாக பயன்படுத்திக் கொள்ள தர முன்வந்தார். அக்கட்டிடத்தில் சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் முயற்சியால் துவக்கப்பட்ட ஆதரவற்ற மாணவர்களுக்காக மாணவர் இல்லம், இன்று ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷின் மாணவர் இல்லம், மைலாப்பூர் என்ற பெயரில் விவேகானந்தர் இல்லத்தில் இயங்கி வருகிறது.[3][4]
ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இராமகிருஷ்ண மடம், கட்டிட உரிமையாளரான பிலிகிரி அய்யங்கார் 1902-இல் இறந்து போன பிறகு, அக்கட்டிட உரிமையாளர்களுக்கு நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டதின் காரணமாக, அக்கட்டிடம் 1906 ஏலத்திற்கு வந்தது. எனவே, அக்கட்டிடத்தின் வெளிப்புற அறையில் (அவுட் ஹவுஸ்) மடத்தின் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார். பின் மைலாப்பூரில் பக்தர் ஏ.கொண்டைய செட்டியார்[5] கொடையாக வழங்கிய நிலத்தில் கட்டிடம் கட்டி இராமகிருஷ்ண மடத்தை 17-11-1907-இல் , சென்னை மைலாப்பூருக்கு மாற்றினார். இரண்டு ஆண்டுகளுள் காண்டிராக்டரின் ஏமாற்று வேலை காரணமாக மைலாப்பூர் மடத்தின் கட்டிடம் பல இடங்களில் விரிசல் கண்டது.1912-இல் சுவாமி இராமகிருஷ்ணானந்தாவிற்கு பின் இந்த மடத்தை கவணிக்க வந்த சுவாமி சர்வானந்தா, கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு, இரண்டு மாடிகள் கொண்ட விசாலமான புதிய கட்டிடத்தை நிர்மாணித்தார்.[6]
ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், ஸ்ரீஇராமகிருஷ்ண பரம்பரையின் தலைவரும், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் தலைமை மடத்தின் தலைவருமான சுவாமி பிரம்மானந்தா, இரண்டாம் முறையாக சென்னைக்கு வந்து மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தை விரிவாக்கம் செய்ய 04-08-1916-இல் அடிக்கல் நாட்டினார். 27-04-1917-இல் விரிவாக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவாக அக்கட்டிடத்திற்கு ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் என பெயர் சூட்டப்பட்டது. 2000-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீஇராமகிருஷ்ணருக்கு ஒரு புதிய பிரபஞ்சக் கோயில் கட்ட முடிவு எடுத்து கட்டிடப்பணி துவக்க 01-12-1977-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 07-02-2000-ஆம் ஆண்டில் பிரபஞ்சக் கோயில் திறப்பு விழா நடைபெற்றது.[7]
மேற்படி பிறந்தநாள் விழாக்களும், சிறப்பு பூஜைகளும் வேள்விகளுடனும், தோத்திரங்கள் பாடியும், இசை நிகழ்ச்சிகளுடனும், சொற்பொழிவுகளுடனும் சிறப்பாக நடைபெறுகிறது.[9]
ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் பரம்பரையில் அமைந்த மடங்களில் சென்னை மடம் அதிக அளவில் அனைத்து ஆன்மீக நூல்கள், குழந்தைகளுக்கான் நன்னெறி கதை நூல்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது. மேலும் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை நூல் வடிவில் வெளியிட்டும் வருகின்றனர்.[10] சென்னை இராமகிருஷ்ண மடம், வேதாந்த கேசரி எனும் ஆங்கில மாத இதழும், இராமகிருஷ்ண விஜயம் எனும் மாத இதழும் முறையே 1914 மற்றும் 1921 ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. மடத்தில் வாரந்திர ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்துகின்றனர்.
1944-2006க்கு இடைபட்ட காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பிரபா என்ற தெலுங்கு மாத இதழும் அனைத்துத் தெலுங்கு நூல்களும் சென்னை மடமே வெளியிட்டது குறிப்பிடதக்கதாகும். 2006 டிசம்பரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தெலுங்கு பதிப்பகம் சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
ஆதரவற்ற அனாதை குழந்தைகள் தங்கிப் படிக்கும் உறைவிடப் பள்ளிக்கூடம் திருவல்லிக்கேனியில் 16-05-1917-இல் இராமகிருஷ்ண மடம் சார்பில் இன்று வரை நன்கு செயல்படுகிறது.
சென்னை, ஜார்ஜ் டவுனில் இருந்த சென்னை நேசனல் பெண்கள் பள்ளியின் நிர்வாகம் 1921-ஆம் ஆண்டு முதல் சென்னை இராமகிருஷ்ண மடத்தின் கீழ் வந்த்து. 1932-இல் ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று தியாகராய நகரில் துவக்கப்பட்டது. சென்னை தியாகராயநகரில் செயல்பட்டு கொண்டிருந்த ஸ்ரீசாரதா பெண்கள் பள்ளிக்கூடம் 1938-இல் சென்னை இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. சூன் மாதம், 1946-ஆம் ஆண்டில் மைலாப்பூரில் துவக்கப்பட்ட இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் துவக்கப்பட்டது. மடத்தின் கல்வி நடவடிக்கைகள் அதிகரிக்கவே, அந்நிறுவனங்களை வழிநடத்திச் செல்ல பல குழுக்கள் அமைக்கப்பட்டது. சென்னை இராமகிருஷ்ண மட்த்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இதர கல்வி நிறுவனங்கள்:
1928 மற்றும் 1948-ஆம் ஆண்டுகளில் மைலாப்பூரில் குடிசைபகுதிகள் எரிந்த பொழுது, இராமகிருஷ்ண மடம், சென்னை சார்பில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு, அரசிடமிருந்து நிலம் பெற்று இராமகிருஷ்ணபுரம் எனும் குடியிருப்பை இலவசமாக கட்டி வழங்கியது.[15] சென்னை, இராமகிருஷ்ண மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிவாரணப்பணிகள்;
மாதம்/ஆண்டு | பாதிக்கப்பட்ட கிராமங்கள்/மாவட்டம் | நிவாரண வகை |
---|---|---|
1924 | கோயமுத்தூர், பவானி, சத்தியமங்கலம் மற்றும் இதர மாவட்டங்கள் | உணவுப் பொருட்கள் வழங்கல் |
1927 | நெல்லூர் மாவட்டம் | புயல் நிவாரணப் பணி |
1932 | செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் | புயல் நிவாரணப் பணி |
1941 | தஞ்சாவூர் மாவட்டம் | புயல் நிவாரணப் பணி |
1955 | தஞ்சாவூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் | புயல் நிவாரணப் பணி |
1957 | இராமநாதபுரம் மாவட்டம் | கலவர நிவாரணப் பணி |
நவம்பர் 1957 | சூலூர் பேட்டை, நெல்லூர் மாவட்டம் | மழை வெள்ள நிவாரணப் பணி |
1961 | திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறு, தஞ்சை மாவட்டம் | மழை வெள்ள நிவாரணப் பணி |
1962 | லால்குடி, திருச்சி மாவட்டம் | தீ பரவல் தொடர்பான நிவாரணப்பணி |
1965 | இராமேசுவரம் & தனுஷ்கோடி | புயல் நிவாரணப் பணி |
1972–73 | பவானி, கோயம்புத்தூர் மாவட்டம் | புயல் நிவாரணப் பணி |
நவம்பர் 1977 | தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் | புயல் நிவாரணப்பணி |
நவம்பர், 1985 | வியாசர்பாடி, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, கோட்டூர்புரம் மற்றும் பெரம்பூர் | மழை வெள்ள நிவாரணப் பணி |
சனவரி 1993 | கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 கிராமங்கள் | வெள்ள நிவாரணப் பணி |
செப்டம்பர் 1993 | கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுவீட்டுவிளை, கீழ்மடிச்சல் & கஞ்சிநகர் | புயல் நிவாரணப் பணி |
டிசம்பர் 1993 | தமிழ்நாட்டில் 47 கிராமங்கள் | புயல் நிவாரணப் பணிகள் |
திசம்பர் 2004 – மே மாதம் 2005 | செங்கல்பட்டு, சென்னை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் | சுனாமி நிவாரணப் பணிகள்[16] |
2008 | தஞ்சாவூர் & திருவாரூர் மாவட்டங்கள் | வெள்ள நிவாரணப் பணிகள் [17] |
2010 | திருவாரூர் & நாகப்பட்டினம் மாவட்டங்கள் | வெள்ள நிவாரணப் பணிகள் |
Seamless Wikipedia browsing. On steroids.