யாழ்ப்பாண மாநகரசபை (Jaffna Municipal Council) என்பது யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இது தற்போது யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியையும், நல்லூர் தொகுதியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.

விரைவான உண்மைகள் யாழ்ப்பாணம் மாநகர சபைJaffna Municipal Council, வகை ...
யாழ்ப்பாணம் மாநகர சபை
Jaffna Municipal Council
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1 சனவரி 1949 (1949-01-01)
முன்புயாழ்ப்பாண நகர சபை
தலைமை
வெற்றிடம் 2022 திசம்பர் 31
துணை முதல்வர்
துரைராஜா ஈசன், ததேகூ
26 மார்ச் 2018 முதல்
மாநகர ஆணையாளர்
ஆர். ரி. ஜெயசீலன்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்45
Thumb
அரசியல் குழுக்கள்
அரசு (16)

எதிரணி (29)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள் + 1 ஆண்டு
தேர்தல்கள்
கலப்புத் தேர்தல்
அண்மைய தேர்தல்
8 பெப்ரவரி 2018
வலைத்தளம்
யாழ் மாநகரசபை
மூடு

இது வட்டாரம் என அழைக்கப்படும் 23 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வெவ்வேறாக உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி நகர முதல்வர் (Mayor), துணை நகர முதல்வர் ஆகியோரைத் தெரிவு செய்வர். புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட பின்னர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். நகரபிதா, துணைநகரபிதா ஆகியோரையும் மக்களே நேரடியாகத் தெரிவு செய்கின்றனர்.

தோற்றம்

1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு (Road Committee) என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906 ஆம் ஆண்டில் மற்றும் 1898 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.

மாநகரசபைக் கட்டிடம்

Thumb
யாழ்ப்பாணம் பிரதேச சபையில் உள்ள யாழ் மண்ணைப் பிரதிபலிக்கும் மரத்தினால் ஆன யாழ் சின்னம்

குடியேற்றவாதக் காலப் பாணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடம், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் அமைந்திருந்தது. இங்கே சபை அலுவலகங்களுடன், நகரமண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. 1980களின் இறுதியில், கோட்டையைச் சுற்றி இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் இக் கட்டிடம் முற்றாகவே அழிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாநகரசபையின் அலுவலகம் நல்லூருக்குத் தற்காலிக இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. எல்லா வசதிகளும் அடங்கிய புதிய கட்டிடமொன்றைக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாயினும், நாட்டிலிருந்த குழப்ப நிலை காரணமாக இது நிறைவேறவில்லை.

வட்டாரங்கள்

யாழ் மாநகரசபையில் தற்போது (2018) 27 தனி வட்டாரங்கள் உள்ளன.[1][2] வட்டாரம் ஒவ்வொன்றும் ஒரு எண்ணாலும், ஒரு பெயராலும் குறிப்பிடப்படுகின்றன. விபரங்கள் பின்வருமாறு:[3]

மேலதிகத் தகவல்கள் இல., வட்டாரம் ...
இல.
வட்டாரம்
வட்டார
இல.

கிராம சேவையாளர் பிரிவு
1வண்ணார்பண்ணை வடக்குயா098வண்ணார்பண்ணை
யா099வண்ணார்பண்ணை மேற்கு (பகுதி)
2கந்தர்மடம் வடமேற்குயா100வண்ணார்பண்ணை வடகிழக்கு
யா102கந்தர்மடம் வடமேற்கு
யா123கொக்குவில் தென்கிழக்கு (பகுதி)
3கந்தர்மடம் வடகிழக்குயா103கந்தர்மடம் வடகிழக்கு
4நல்லூர் இராசதானியா106நல்லூர் வடக்கு
யா107நல்லூர் இராசதானி
யா108நல்லூர் தெற்கு
5சங்கிலியன் தோப்புயா109சங்கிலியன் தோப்பு
6அரியாலையா094அரியாலை மத்திய வடக்கு (பகுதி)
யா095அரியாலை மத்தி
யா096அரியாலை மத்திய தெற்கு
7கலைமகள்யா091அரியாலை வட மேற்கு
8கந்தர்மடம் தெற்குயா104கந்தர்மடம் தென்மேற்கு
யா105கந்தர்மடம் தென்கிழக்கு
9ஐயனார் கோவிலடியா097ஐயனார் கோவிலடி
யா101நீராவியடி
10புதிய சோனகத் தெருயா088புதிய சோனகத் தெரு
11நாவாந்துறை வடக்குயா085நாவாந்துறை வடக்கு
12நாவாந்துறை தெற்குயா084நாவாந்துறை தெற்கு
13பழைய சோனகத் தெருயா086சோனகத் தெரு தெற்கு
யா087சோனகத் தெரு வடக்கு
14பெரிய கடையா080பெரிய கடை
யா082வண்ணார்பண்ணை
15அத்தியடியா078அத்தியடி
யா079சிராம்பியடி
16சுண்டிக்குளி மருதடியா076சுண்டிக்குளி வடக்கு
யா077மருதடி
17அரியாலை மேற்குயா092அரியாலை மேற்கு (மத்தி)
யா093அரியாலை தென்மேற்கு
18கொழும்புத்துறையா061நெடுங்குளம்
யா062கொழும்புத்துறை கிழக்கு
யா063கொழும்புத்துறை மேற்கு
19பாசையூர்யா064பாசையூர் கிழக்கு
யா065பாசையூர் மேற்கு
20ஈச்சமோட்டையா066ஈச்சமோட்டை
21தேவாலயம்யா075சுண்டுக்குளி தெற்கு
22திருநகர்யா067திருநகர்
23குருநகர்யா070குருநகர் கிழக்கு
யா071குருநகர் மேற்கு
24யாழ் நகர்யா073யாழ் நகர் மேற்கு
யா074யாழ் நகர் கிழக்கு
25கொட்டடி கோட்டையா081கோட்டை
யா083கொட்டடி
26ரெக்கிளமேசன் மேற்குயா069ரெக்கிளமேசன் மேற்கு
யா072சின்ன கடை
27ரெக்கிளமேசன் கிழக்குயா068ரெக்கிளமேசன் கிழக்கு
மூடு

முதல்வர்களும் பதவிக்காலமும்

மாநகரசபை தேர்தல் முடிவுகள்

2009 தேர்தல்

2009 ஆகத்து 8 ஆம் நாள் நடந்த யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் முடிவுகள்:[4]

மேலதிகத் தகவல்கள் கூட்டணிகளும் கட்சிகளும், வாக்குகள் ...
கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஈபிடிபி, இசுக, அ.இ.முகா) 10,60250.67%13
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இதக, ஈபிஆர்எல்எஃப் (சு), டெலோ) 8,00838.28%8
சுயேட்சை 1 1,1755.62%1
 தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ, புளொட், ஈபிஆர்எல்எஃப் (வ)) 1,0074.81%1
 ஐக்கிய தேசியக் கட்சி 830.40%0
சுயேட்சை 2 470.22%0
செல்லுபடியான வாக்குகள் 20,922100.00%23
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,358
மொத்த வாக்குகள் 22,280
தவி செய்யப்பட்ட வாக்காளர்கள் 100,417
வாக்குவீதம் 22.19%
மூடு

2018 தேர்தல்

2018 பெப்ரவரி 8 நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்:[5]

மேலதிகத் தகவல்கள் கூட்டணிகளும் கட்சிகளும், வாக்குகள் ...
கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
வட்டாரம்PRமொத்தம்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இதக, புளொட், டெலோ) 14,42435.76%14216
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அஇதகா) 12,02029.80%9413
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 8,67121.50%2810
 ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேக, முகா, அஇமகா ஏனை.) 2,4236.01%123
 இலங்கை சுதந்திரக் கட்சி 1,4793.67%022
 தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ), ஈபிஆர்எல்எஃப்) 1,0712.66%101
 மக்கள் விடுதலை முன்னணி 2420.60%000
செல்லுபடியான வாக்குகள்40,330100.00%271845
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்586
மொத்த வாக்குகள்40,916
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்56,245
வாக்குவீதம்72.75%
மூடு

இம்மானுவேல் ஆர்னோல்ட் (ததேகூ) மாநகர முதல்வராகவும், துரைராஜா ஈசன் (ததேகூ) துணை முதல்வராகவும் 2018 மார்ச் 26 இல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6][7][8]

யாழ் மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை இரண்டுமுறை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இம்மானுவேல் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை இழந்தார். இதனை அடுத்து 2020 திசம்பர் 30 அன்று இடம்பெற்ற முதல்வர் பதவிக்கான தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) உறுப்பினர் வி. மணிவண்ணன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிவண்ணன் 21 வாக்குகளையும், ஆர்னோல்ட் 20 வாக்குகளையும் பெற்றனர். மணிவண்ணனுக்கு ஆதரவாக ததேமமு உறுப்பினர்கள் 10 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர்.[9]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.