முதலாம் தூத்மோஸ்

From Wikipedia, the free encyclopedia

முதலாம் தூத்மோஸ்

முதலாம் தூத்மோஸ் (Thutmose I) (தோத்மெஸ், தூத்மோசிஸ் முதலாம் தூத்மோசிஸ் என பல பெயரிகளிலும் அழைக்கப்படுபவர்). தூத் என்பதற்கு பண்டைய எகிப்திய மொழியில் பிறந்தவன் எனப்பொருளாகும். முதலாம் தூத்மோஸ் புது எகிப்திய இராச்சியத்தின் எகிப்தின் பதினெட்டாம் அரச குலத்தின் மூன்றாவது பார்வோன் எனப்படும் மன்னர் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் முதலாம் தூத்மோஸ், எகிப்தின் பாரோ ...
முதலாம் தூத்மோஸ்
முதலாம் தூத்மோசின் சிலை (பிரித்தானிய அருங்காட்சியகம்)
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்ஏறத்தாழ கி மு 1506 – 1493, எகிப்தின் 18-வது வம்சத்தின் மூன்றாவது பார்வோன்
முன்னவர்முதலாம் அமென்கோதேப்
பின்னவர்இரண்டாம் தூத்மோஸ்
அரச பட்டங்கள்
  • Prenomen: Aakheperkare
    Great is the Soul of Re[1]
  • M23L2
    N5
    O29
    L1D28
  • Nomen: Thutmose
    தூத்மோசின் பிறப்பு
  • G39N5
    G26F31S29
  • Horus name: Kanekhet meri maat
    Mighty Bull, Beloved of Maat
  • G5
    E1
    D40
    U6C10
  • நெப்டி பெயர்: Kham neseret aa pehet
    Crowned with the royal serpent, Great of power
  • G16
    N28
    D36
    G17
    N35
    F20
    D21 X1
    I13O29
    F9 F9
  • Golden Horus: Nefer Reneput Sankhibu
    Good of Years, Making Hearts to Live
  • G8
    F35M4M4M4S29S34F34
    F34
    F34

துணைவி(யர்)இராணி அக்மோஸ் மற்றும் முத்னோப்ரெட்
பிள்ளைகள்இரண்டாம் தூத்மோஸ், இளவரசி ஆட்செப்சுட்டு, இளவரசன் அமென்மோஸ், வட்ஜ்மோஸ்
தந்தைமுதலாம் அமென்கோதேப் (எனக் கருதப்படுகிறது)
தாய்சென்செனெப்
இறப்புகி மு 1493
அடக்கம்மன்னர்களின் சமவெளியின் கல்லறை எண் 38, பின்னர் எண் 20
நினைவுச் சின்னங்கள்கர்னக் நகரத்தில் நான்காம் மற்றும் ஐந்தாம் பைலோன் மன்னர்களின் இரண்டு நினைவுச் சதுரத் தூபிகளும்; கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் தூண்கள் உடைய மண்டபமும்.
மூடு
கல்லறையில் இருந்த முதலாம் தூத்மோசின் மம்மியை, அவரது மகள் ஹாட்செப்சுத் மறுசீரமைத்து, காவி நிற படிகக் கல் சவப்பெட்டி, பாஸ்டன் நுண் கலைகளின் அருங்காட்சியகம்
முதலாம் தூத்மோஸ் கர்னக் நகரத்தில் நிறுவிய கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் தூண்கள் உடைய மண்டபம்

மன்னர் முதலாம் அமென்கோதேப் இறந்த பின் பட்டத்திற்கு வந்த முதலாம் தூத்மோஸ், தனது படைகளை அனுப்பி, லெவண்ட் மற்றும் எகிப்தின் தெற்குப் பகுதியில் உள்ள, தற்கால சூடானின் வடக்குப் பகுதியில் உள்ள நுபியா பகுதிகளைக் கைப்பற்றினார்.

முதலாம் தூத்மோஸ், மன்னர்களின் சமவெளியின் தீபை மற்றும் அல்-உக்சுர் பகுதிகளில் பல எகிப்தியக் கடவுளர்களின் கோயில்களையும், இறந்து போன எகிப்திய மன்னர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தினர்களின் சடங்களை மம்மி முறையில் பதப்படுத்தி பிரமிடு வடிவிலான பெரிய கட்டிடங்களைக் கட்டி அதில் அடக்கம் செய்தார்.

முதலாம் தூத்மோஸ், எகிப்தை கி மு 1506 முதல் 1493 முடிய அல்லது கி மு 1526 முதல் 1513 முடிய ஆண்டார் என இருவேறு கருத்துகள் உள்ளது.[3][4] முதலாம் தூத்மோசின் மறைவிற்குப் பின் அவரது மகன் இரண்டாம் தூத்மோசும், பின்னர் அவரது மகள் ஆட்செப்சுட்டும் எகிப்தை ஆண்டனர்.

பண்டைய எகிப்தின் மிகப் பெரும் அடைவுகளில் குறிப்பிடத்தக்கது அல்-உக்சுர் கோயில், அல்-உக்சுர், அதாவது "அரண்மனைகள்") எனப்படும் கர்னாக்கில் உள்ள மன்னர்களின் சமவெளி மற்றும் எனப்படும் அரசிகளின் சமவெளியும் அடங்கும்.

கட்டிடத் திட்டங்கள்

Thumb
முதலாம் தூத்மோசின் உயரமான உருவச்சிலை, எகிப்திய அருங்காட்சியகம்
Thumb
மன்னர் முதலாம் தூத்மோஸ் எழுப்பிய நான்முகக் கூர்நுனிக்கம்பம், இடம்; கர்னக்

தூத்மோஸ் தனது ஆட்சிக் காலத்தில் பல எகிப்தியக் கோயில்களையும், கல்லறைகளையும் கட்டினார். கர்னக் இடமிடத்தில், கட்டிடக் கலைஞர் இனேனியின் மேற்பார்வையில் மிகப்பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டது.[5]

இறப்பும், அடக்கமும்

முதலாம் தூத்மோஸ் மறைந்த பின் அவரது சடலம் மம்மி முறையில் பதப்படுத்தி மன்னர்களின் சமவெளியில் உள்ள கல்லறை கட்டிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இக்கல்லறைக் கோயிலைக் கட்டியவர் கட்டிடக் கலைஞர் இனேனி ஆவார்.

மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள மன்னர் முதலாம் தூத்மோசின் கல்லறை, தற்போது கல்லறை எண் KV20 எனப் பெயரிடப்பட்டுள்ளது.[6]

பார்வோன்களின் அணிவகுப்பு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் முதலாம் தூத்மோஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.