பார்வோன்களின் அணிவகுப்பு

From Wikipedia, the free encyclopedia

பார்வோன்களின் அணிவகுப்பு

பார்வோன்களின் தங்கமயமான அணிவகுப்பு (Pharaohs' Golden Parade) (அரபு மொழி: موكب المومياوات الملكية) புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1550 முதல் கிமு 1077 முடிய ஆண்ட 17-ஆம் வம்ச முதல் 20-ஆம் வம்சத்தின் 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளுடன் கூடிய அழகிய வேலைப்பாடுகளுடன் வர்ணம் தீட்டப்பட்ட சவப்பெட்டிகளை, அழகிய ஊர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டு, எகிப்தின் அருங்காட்சியகத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு, எகிப்து அரசின் முழு அரசு மரியாதையுடன் 3 ஏப்ரல் 2021 அன்று அணிவகுப்பாகக் கொண்டுச் செல்லப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் பூர்வீக பெயர், நாள் ...
பார்வோன்களின் தங்கமயமான அணிவகுப்பு
Thumb
நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான இலச்சினை
பூர்வீக பெயர் موكب المومياوات الملكية
நாள்3 ஏப்ரல் 2021
இடம்எகிப்திய அருங்காட்சியகம், எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம்
அமைவிடம்கெய்ரோ, எகிப்து
மூடு

அணிவகுப்பில் எடுத்துச் செல்லப்பட்ட மம்மிகள்

அணிவகுப்பு வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 17-ஆம் வம்சம் முதல் 20-ஆம் வம்ச பார்வோன்கள் மற்றும் அரசிகளின் மம்மிகள் பட்டியல்::[3]

  1. செக்கனென்ரே தாவோ – (கிமு 1558/1560 – கிமு 1558) – 17-ஆம் வம்சம்
  2. அரசி அக்மோஸ்-நெபர்தாரி -18-ஆம் வம்சம்
  3. முதலாம் அமென்கோதேப் - (கிமு 1526 – 1506) - 18-ஆம் வம்சம்
  4. அரசி அக்மோஸ்-மெரிதமுன்18-ஆம் வம்சம்
  5. முதலாம் தூத்மோஸ் - (கிமு 1506 – 1493) - 18-ஆம் வம்சம்
  6. இரண்டாம் தூத்மோஸ் – (கிமு 1493 - 1479) -18-ஆம் வம்சம்
  7. அரசி ஆட்செப்சுட்டு – (கிமு 1507 – கிமு1458) -18-ஆம் வம்சம்
  8. மூன்றாம் தூத்மோஸ் – (கிமு 1479 - கிமு 1425) - 18-ஆம் வம்சம்
  9. இரண்டாம் அமென்கோதேப் – (கிமு 1421 - கிமு 1407) - 18-ஆம் வம்சம்
  10. நான்காம் தூத்மோஸ் – (கிமு 1401 – 1391) -18-ஆம் வம்சம்
  11. மூன்றாம் அமென்கோதேப் – (கிமு 1386 – 1349) -18-ஆம் வம்சம்
  12. அரசி தியே18-ஆம் வம்சம்
  13. முதலாம் சேத்தி- (கிமு 1290–1279) - 19-ஆம வம்சம்
  14. இரண்டாம் ராமேசஸ் – (கிமு 1292 - கிமு 1189) - 19-ஆம் வம்சம்
  15. மெர்நெப்தா – (கிமு 1213 - கிமு 1203) - 19-ஆம் வம்சம்
  16. இரண்டாம் சேத்தி – (கிமு 1203 முதல் கிமு 1197) - 19-ஆம் வம்சம்
  17. சிப்டா – (கிமு 1197 - கிமு 1191) -19-ஆம் வம்சம்
  18. மூன்றாம் ராமேசஸ் – (கிமு 1189 - 1077) = 20-ஆம் வம்சம்
  19. நான்காம் ராமேசஸ் – (கிமு 1155 - கிமு 1149) - 20-ஆம் வம்சம்
  20. ஐந்தாம் ராமேசஸ் – (கிமு 1149 முதல் கிமு 1145) -20-ஆம் வம்சம்
  21. ஆறாம் ராமேசஸ் - (8 ஆண்டுகள்) - 20-ஆம் வம்சம்
  22. ஒன்பதாம் ராமேசஸ் – (கிமு 1129 – கிமு 1111) - 20-ஆம் வம்சம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.