From Wikipedia, the free encyclopedia
ஆட்செப்சுட்டு (Hatshepsut) (/hætˈʃɛpsʊt/;[2] அல்லது Hatchepsut; (பொருள்:புனித மகளிருள் முன்னவர்);[3](பிறப்பு:கிமு 1507– இறப்பு: கிமு 1458) என்பவர் எகிப்தின் 18 ஆம் வம்சத்தின் இராணி ஆவார்.[4] இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் பெண்ணரசி ஆவார். இவரது கல்லறை தேர் எல் பகாரியில் உள்ளது. பண்டைய எகிப்தின் முதலாம் பெண் அரசி நெஃபர்டீட்டீ ஆவார்.
ஆட்செப்சுட்டு Hatshepsut | |
---|---|
ஆட்செப்சுட்டு சிலை, பெருநகரக் கலை அருங்காட்சியகம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1478 – கிமு 1458 ., எகிப்தின் பதினெட்டாம் வம்சம் |
முன்னவர் | இரண்டாம் தூத்மோஸ் |
பின்னவர் | மூன்றாம் தூத்மோஸ் |
துணைவி(யர்) | இரண்டாம் தூத்மோஸ் |
பிள்ளைகள் | மூன்றாம் தூத்மோஸ் |
தந்தை | முதலாம் தூத்மோஸ் |
தாய் | அக்மோஸ் |
பிறப்பு | கிமு 1507 |
இறப்பு | கிமு 1458 (அகவை 51) |
அடக்கம் | KV20 (மறுபுதைப்பு KV60) |
நினைவுச் சின்னங்கள் | கார்நாக் கோயில், ஆட்செப்சுட்டு கல்லறைக் கோயில், சுப்பியோசு ஆர்த்தெமிடோசு, சாப்பெல்லி வட்டாரம். |
பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தைச் சேர்ந்த இந்த இராணி கிமு 1507 முதல் கிமு 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.[5] பண்டைய எகிப்திய வரலாற்றில் எகிப்தை ஆண்ட முதல் அரசி நெஃபர்டீட்டீக்குப் பின்னர், அரசி அட்செப்சுத் எகிப்தை ஆண்ட இரண்டாவது அரசி எனும் பெருமை படைத்தவர். இவர் பார்வோன் முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மா ஆவார். [6]
இவரது ஆட்சியில் எகிப்தின் தெற்கில் இருந்த பண்டு இராச்சியத்தை கைப்பற்றினார்.
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது அரசி ஆட்செப்சுட்டுவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.