Remove ads
இது தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
முசிறி (Musiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். திருச்சிக்கு வடமேற்கில் 32 கி.மீ தொலைவில் முசிறி நகராட்சி உள்ளது.
முசிறி | |||||||
— இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 10°56′N 78°27′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழ நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||||
வட்டம் | முசிறி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை | 28,727 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 82 மீட்டர்கள் (269 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/musiri |
16 அக்டோபர் 2021 அன்று முசிறி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]
ஒப்புமை நினைவால் கருவூர்ச் சேரர் சூட்டிய பெயர் இந்த ஊர் முசிறி. முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்). இதன் பெயர்தான் காவிரிக்கரை முசிறிக்குச் சூட்டப்பட்டுள்ளது.
இவ்வூரின் அமைவிடம் 10.93°N 78.45°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.
18.80 சகிமீ பரப்பும், 24 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட நகராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 7,764 வீடுகளும், 28,727 மக்கள்தொகையும் கொண்டது.[8] [9]
முசிறியில் மொத்தம் 4 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
முசிறி அருகே 4 கி.மீ தொலைவில் வடுகபட்டி என்னும் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது. இது 1968 முதல் செயல்பட்டு வருகின்றது.
மேலும் முசிறி - துறையூர் நெடுஞ்சாலையில் முசிறியிலிருந்து சரியாக 5 கி.மீ தொலைவில் சிவிலிப்பட்டி என்னும் சிற்றூரில் MIT என்னும் தனியார் பல்-தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது
மேலும் முசிறி வளர்ச்சி பெற்று வரும் நகராட்சியாகும். இங்கே 2 பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவன்ங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
முசிறி அருகே சுமார் 14 கி.மீ தொலைவில் குணசீலம் என்னும் ஊரில் அமையப் பெற்ற வைணவ தலமே பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயமாகும். மேலும் மன நலம் பாதிக்கபட்டோரை குணமாக்கும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது.
முசிறி கைகாட்டியில் இருந்து காவிரிக் கரைக்கு அருகில் கரை அடிக்கடி உடைந்து வந்த நிலையில் கட்டப்பட்ட கோவிலே அழகுநாச்சியம்மன் கோவிலாகும். 21 பந்தி தெய்வங்களை கொண்ட கோவிலாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.