மயிலாடுதுறை
தமிழ்நாட்டிலுள்ள ஓர் நகரம், இந்தியா. From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டிலுள்ள ஓர் நகரம், இந்தியா. From Wikipedia, the free encyclopedia
மயிலாடுதுறை (Mayiladuthurai) (முன்பு மாயவரம் என்று அழைக்கப்பட்டது) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிர்வாகத் தலைமையிடமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும்.[3] மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் மயூரம் என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மாயவரம் அல்லது மாயூரம் என்று வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை | |||||||
— சிறப்பு நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°06′06″N 79°39′09″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழ நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | மயிலாடுதுறை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப | ||||||
நகராட்சி தலைவர் | ந. செல்வராஜ் | ||||||
மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை | ||||||
மக்களவை உறுப்பினர் |
இரா. சுதா | ||||||
சட்டமன்றத் தொகுதி | மயிலாடுதுறை | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். ராஜகுமார் (இ.தே.கா) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
85,632 (2011[update]) • 7,700/km2 (19,943/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
11.27 சதுர கிலோமீட்டர்கள் (4.35 sq mi) • 38 மீட்டர்கள் (125 அடி) | ||||||
குறியீடுகள்
|
அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று எம். ஜி. ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், காரைக்கால், நாகை, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. மயிலாடுதுறை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது .
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,929 1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 85,632 ஆகும். அதில் 41,869 ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.8% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,720 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.69%, இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% தமிழ்சமணர்கள் 0.32% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[4]
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மைத் தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது.
நகரின் முக்கிய சுற்றுப்புற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடி நீர்பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது.
அதேபோல நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.
இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, ஏ.வி.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. பள்ளிகளைப் பொறுத்த வரை தேசிய மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, புனித பால்கு மேல்நிலைப் பள்ளி ஆகியன உள்ளன.
மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.
நகரத்தின் முக்கிய வீதிகளாக வண்டிக்கார தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகாதான தெரு, கண்ணாரத் தெரு, துலாக்கட்டம், தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி” முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பப்பட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்கு கடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.[5]
“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் [சான்று தேவை] மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும்
மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாகத் தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. [சான்று தேவை] இதன் காலம் பொ.ஊ.மு. 2000 - பொ.ஊ.மு. 1500 ஆகும்.
நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதா தட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்க்காணும் ஆலயங்கள் நகரைச் சுற்றி அமைந்துள்ளன.
கோயில்.(64 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தோன்றிய இடம்).
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.