மரகதப் புறா (Common emerald dove), வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறா, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப் பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (longirostris ) மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியிலிருந்து கேப் யார்க் தீபகற்பம் வரையிலும், கிரைசோகுலோரா (chrysochlora ) கேப் யோர்க் தீபகற்பத்திலிருந்து தெற்கு நியூ சவுத் வேல்ஸ் வரையிலும் மற்றும் நார்ஃபோக் தீவிலிருந்து லார்டு ஹோவ் தீவு வரையிலும், நடலிசு (கிறிஸ்துமஸ் தீவு மரகதப்புறா) கிறிஸ்துமஸ் தீவிலும் காணப்படுகின்றன. மரகதப் புறா இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாகும். இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது. இப்பறவை தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.[2][3] பசிபிக் மரகதப் புறா மற்றும் ஸ்டீபனின் மரகதப் புறா இரண்டும் குறிப்புடையதாகக் கருதப்பட்டன.

விரைவான உண்மைகள் மரகதப்புறா, காப்பு நிலை ...
மரகதப்புறா
Thumb
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
சால்கோபாப்சு
இனம்:
சா. இண்டிகா
இருசொற் பெயரீடு
சால்கோபாப்சு இண்டிகா
லின்னேயஸ், 1827
துணையினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்

கொலும்பா இண்டிகா

மூடு


விளக்கம்

பறத்தல் பொதுவான புறவுகளை ஒத்த விதத்தில் வேகமாகவும் நேராகவும், முறையான இறக்கைத் துடிப்புகளுடன், அவ்வப்போது விரைந்த கூறிய துடிப்புகளுடன் காணப்படும். பொதுவாக இப்பறவை விரும்பிய காட்டுப் பகுதிகளுக்கிடையே, தாழ்வாகப் பறக்கிறது. எனினும், தொந்தரவு செய்யப்பட நேரங்களில், பறப்பதை விட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது, அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.

மரகதப் புறா தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 – 11.2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும்போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது. இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் கிரைசோகுலோரா (chrysochlora) இனத்தில் சிவப்பு நிறத்திலிருந்து (லாங்கிராஸ்டிரிஸ் (longirostris) இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது. கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றது.

ஆண் பறவையின் தோள்ப் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதில்லை. பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன.இளம் பறவைகள் பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.

பரவல் மற்றும் வாழ்விடம்

இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடு கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.

நடத்தை மற்றும் சூழலியல்

மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. இவை நிலத்தில் விழுந்த பழங்களைத் தேடி உண்ணுகின்றன. இவை விதைகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உண்ணுகின்றன. இவை பொதுவாக அணுகக் கூடியவையாகவும் பழக்கப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.

இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும் ஆறு அல்லது ஏழு கூவல்கள் கொண்ட, மெதுவான முனகும் கூவலாகக் காணப்படுகின்றது. இவை மூக்கிலிருந்து "ஹூ-ஹூ-ஹூன்" என்றும் ஓ சையிடுகின்றன. ஆண் பறவைகள் இனச்சேர்க்கையின்போது மெல்ல ஆட்டமிடுகின்றன.

வகைப்பாட்டியல்

1743ஆம் ஆண்டில், ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் எட்வர்ட்ஸ் தனது எ நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் அன்காமன் பேர்ட்ஸ் என்ற புத்தகத்தில் மரகதப் புறாவின் படத்தையும் விளக்கத்தையும் சேர்த்தார். "Green Wing'd Dove" என்ற ஆங்கிலப் பெயரைப் பயன்படுத்தினார். லண்டனுக்கு அருகில் உள்ள ரோதர்ஹித் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிகரின் வீட்டில் உள்ள ஒரு பறவையிலிருந்து அவர் வரைந்த ஓவியம். கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து புறா வந்ததாக எட்வர்ட்ஸிடம் கூறப்பட்டது.[4] 1758 ஆம் ஆண்டில் ஸ்வீடிஷ் இயற்கையியலாளர் கரோலஸ் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுரொவை பத்தாவது பதிப்பிற்காக புதுப்பித்த போது, கொலம்பா இனத்தைச் சேர்ந்த மற்ற அனைத்து புறாக்களுடன் மரகதப் புறாவை வைத்தார். லின்னேயஸ் ஒரு சுருக்கமான விளக்கத்தை உள்ளடக்கினார், கொலம்பா இண்டிகா என்ற இருசொல் பெயரை உருவாக்கினார் மற்றும் எட்வர்ட்ஸின் பணிகளை மேற்கோள் காட்டினார்.[5] இண்டிகா என்ற குறிப்பிட்ட அடைமொழி "இந்தியன்" என்பதற்கான லத்தீன் மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளைக் குறிக்க லின்னேயஸால் பயன்படுத்தப்படுகிறது. [6] 1843 ஆம் ஆண்டில் ஜான் கோல்ட் என்ற ஆங்கில பறவையியல் வல்லுனரால் அறிமுகப்படுத்தப்பட்ட சால்கோபாப்ஸ் இனத்தில் இந்த இனம் இப்போது வைக்கப்பட்டுள்ளது. [7] [8]

இதில் ஆறு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[8]

  • இந்திய மரகதப்புறா சா. இ. இண்டிகா ( லின்னேயஸ், 1758) - இந்தியா முதல் தென் சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மேற்கு பப்புவான் தீவுகள்
  • சா. இ. இராபின்சோனி பேக்கர், 1928 – இலங்கை
  • சா. இ. மேக்சிமா கார்ட்ரெட், 1931 - அந்தமான் தீவுகள்
  • சா. இ. அகஸ்டா போனபார்டே, 1855 - நிக்கோபார் தீவுகள்
  • சா. இ. நேடாலிசு லிசுடர், 1889 – கிறிஸ்துமஸ் தீவு (இந்தியப் பெருங்கடல்)
  • சா. இ. மினிமா ஹார்டெர்ட், 1931 – நும்பா, பயக் மற்றும் மியாசு நும் தீவுகள் (வடக்கு நியூ கினியாவில்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.