பொழுதுபோக்கு
From Wikipedia, the free encyclopedia
பொழுதுபோக்கு (Leisure) அல்லது ஓய்வு நேரம் என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும். பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது.[1][2] ஓய்வு நேரம் என்பது வணிகம், வேலை, வேலை தேடுதல், வீட்டு வேலைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிலிருந்து விலகி, உணவு மற்றும் தூக்கம் போன்ற தேவையான செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்படுவதாகும்.[1] [3] இலவச நேரத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் அணுகுமுறைகளின் பன்முகத்தன்மையின் காரணமாக இதை வரையறுப்பது என்பது எளிதானது அல்ல. எடுத்துக்காட்டாக, சமூக சக்திகள் மற்றும் சூழல்கள் குறித்த சமூகவியல் மற்றும் உளவியல் மன மற்றும் உணர்ச்சி நிலைகள் மற்றும் நிலைமைகள் என வெவ்வேறு துறைகள் அவற்றின் பொதுவான பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வரையறைகளைக் கொண்டுள்ளன. ஒரு ஆராய்ச்சி கண்ணோட்டத்தில், இந்த அணுகுமுறைகள் காலப்போக்கில் அளவிடக்கூடியவை எனவும் மற்றும் ஒப்பிடக்கூடியவை எனவும் உள்ளது.[4]



ஓய்வு நேரப் படிப்புகள் மற்றும் ஓய்வு நேரத்தின் சமூகவியல் ஆகியவை ஓய்வு நேரத்தைப் பற்றிய ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தொடர்பான கல்வித் துறைகளாகும். ஓய்வு நேரம் என்பது பொழுதுபோக்கிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் இது செயல்பாட்டு சூழல்களில் ஓய்வு நேர அனுபவத்தை உள்ளடக்கிய ஒரு நோக்கமான செயலாகும். ஓய்வுக்காலங்கள் ஊதியத்தைப் போன்ற ஒரு நபருக்கு மதிப்புமிக்கவை என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இல்லையெனில், மக்கள் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக வேலை செய்திருப்பார்கள்.[5] இருப்பினும், ஓய்வு நேரத்திற்கும் தவிர்க்க முடியாத செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு கடுமையாக வரையறுக்கப்படவில்லை. எ. கா. மக்கள் சில நேரங்களில் இன்பத்திற்காகவும் நீண்ட கால பயன்பாட்டிற்காகவும் வேலை சார்ந்த பணிகளைச் செய்கிறார்கள்.[6]
ஓய்வு நேரம் என்பது மனித உரிமைகளுக்கான உலக மனித உரிமைகள் சாற்றுரையின் 24 வது பிரிவில் உணரப்பட்டது.
வரலாறு
ஓய்வு என்பது வரலாற்று ரீதியாக உயர் வர்க்கத்தின் சலுகையாகவே இருந்து வருகிறது.[7] ஓய்வு நேரத்திற்கான வாய்ப்புகள் அதிக பணம் அல்லது அமைப்பு மற்றும் குறைந்த வேலை நேரத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை ஓய்வு வியத்தகு முறையில் அதிகரித்து, பெரிய பிரித்தானியாவில் தொடங்கி ஐரோப்பாவின் பிற பணக்கார நாடுகளுக்கு பரவியது. செல்வம் இருந்தபோதிலும் மிகக் குறைவான ஓய்வு நேரத்தை வழங்கியதற்காக ஐரோப்பாவில் அந்த நாடு நற்பெயரைக் கொண்டிருந்தாலும், அது அமெரிக்காவிற்கும் பரவியது. அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள் ஐரோப்பாவை விட கடினமாக உழைக்க வேண்டும் என்பதைக் கண்டறிந்தனர்.[8] அமெரிக்கர்கள் ஏன் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.[9] சமீபத்திய புத்தகத்தில், லாரண்ட் டர்கோட் என்பவர், ஓய்வு என்பது 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படவில்லை. ஆனால் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து மேற்கத்திய உலகில் ஊக்குவிக்கப்படுகிறது என்று வாதிடுகிறார்.[10]
கனடா
கனடாவில், ஓய்வு நேரம் வேலை நேரத்தின் சரிவுடன் தொடர்புடையது . அங்கு தார்மீக மதிப்புகள் மற்றும் இன-மத மற்றும் பாலின சமூகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் நீண்ட இரவுகள் மற்றும் கோடையின் நீண்ட பகல்நேரத்துடன் கூடிய ஒரு குளிர்ந்த நாட்டில், குதிரைப் பந்தயம், வளைதடிப் பந்தாட்டம், கூட்டமாக கூடி பாடல்களைப் ஆடுவது, பனிச்சறுக்கு மற்றும் பலகை விளையாட்டுகள் போன்ற குழு விளையாட்டுகள் பிடித்த ஓய்வு நடவடிக்கைகளில் அடங்கும்.[11][12][13] தேவாலயங்கள் ஓய்வு நேர நடவடிக்கைகளை வழிநடத்த முயன்றன. குடிப்பழக்கத்திற்கு எதிராக பிரசங்கம் செய்தன. மேலும், வருடாந்திர மறுமலர்ச்சிகள் மற்றும் வாராந்திர சங்க நடவடிக்கைகளைத் திட்டமிட்டன.[14] 1930 வாக்கில் கனடியர்களை தங்கள் உள்ளூர் அல்லது பிராந்திய வளைத்தடிப்பந்தாட்ட அணிகளுக்குப் பின்னால் ஒன்றிணைப்பதில் வானொலி முக்கிய பங்கு வகித்தது. [15]
பிரான்சு
பிரான்சில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஓய்வு என்பது இனி ஒரு தனிப்பட்ட செயல்பாடாக இருக்கவில்லை. இது மேலும் மேலும் ஒழுங்கமைக்கப்பட்டது. 1858இல் 80,000 மக்கள் தொகை கொண்ட பிரெஞ்சு தொழில்துறை நகரமான லீல் நகரத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தொழிலாள வர்க்கத்திற்கான உணவகங்களின் எண்ணிக்கை 1300 அல்லது ஒவ்வொரு மூன்று வீடுகளுக்கும் ஒன்று என எண்ணப்பட்டன. அங்கு 63 மது விடுதிகளும் மற்றும் பாடும் சங்கங்களும், 37 சீட்டாட்ட விடுதிகளும், 23 பந்து வீச்சு சங்கங்களும் மற்றும் வில்வித்தைக்கு 18 சங்கங்களும் இருந்ததென கணக்கிடப்பட்டது. தேவாலயங்களும் தங்கள் சமூக அமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திலும் அதிகாரிகளின் நீண்ட பட்டியல் மற்றும் விருந்துகள், திருவிழாக்கள் மற்றும் போட்டிகளின் பரபரப்பான அட்டவணை இருந்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான பொழுது போக்குச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன.[16]
ஐக்கிய இராச்சியம்

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பிரிட்டனில் கல்வியறிவு, செல்வம், பயணத்தின் எளிமை மற்றும் சமூகத்தின் விரிவான உணர்வு வளர்ந்ததால், அனைத்து வகை மக்களின் பங்கிலும் அனைத்து வகையான ஓய்வு நேர நடவடிக்கைகளிலும் அதிக நேரமும் ஆர்வமும் இருந்தது.[17]
பொழுதுபோக்குகளின் வகைகள்

பொழுதுபோக்குர நடவடிக்கைகளின் வரம்பு மிகவும் முறைசாரா மற்றும் சாதாரணமானவை முதல் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் வரை நீண்டுள்ளது. பொழுதுபோக்கு என்பது தனிப்பட்ட திருப்திக்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். சமூகம் மாறும்போது பொழுதுபோக்குகளின் பட்டியல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.
வாசிப்பு
புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்கள் அல்லது செய்தித்தாள்கள் போன்றவற்றை வாசிப்பது வாசித்தல் எனப்படுகிறது. இது ஒரு வழக்கமான பொழுதுபோக்காகும். மேலும் இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கமாகும்.[18]1900க்குப் பிறகு கல்வியறிவு மற்றும் ஓய்வு நேரம் விரிவடைந்ததால், வாசிப்பு ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியது. வயது வந்தோருக்கான புனைகதைகள் 1920 களில் இரட்டிப்பாகியது. 1935 வாக்கில் ஆண்டுக்கு 2800 புதிய புத்தகங்களை எட்டியது. நூலகங்கள் தங்கள் பங்குகளை மூன்று மடங்காக அதிகரித்தன. மேலும் புதிய புனைகதைகளுக்கான பெரும் தேவையைக் கண்டன.[19] 1935 ஆம் ஆண்டில் பெங்குயின் பதிப்பகத்தாரின் ஆலன் லேன் என்ற விலை மலிவான புத்தகம் ஒரு வியத்தகு கண்டுபிடிப்பாகும். அந்நிறுவனம் வெளியிட்ட நூல்களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே மற்றும் அகதா கிறிஸ்டி ஆகியோரின் புதினங்களும் அடங்கும். அவை மலிவாக விற்கப்பட்டன.[20] இருப்பினும், போர் ஆண்டுகளில் வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தகக் கடைகளுக்கு ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் 1940 ஆம் ஆண்டில் பாட்டர்னோஸ்டர் சதுக்கத்தில் நடந்த விமானத் தாக்குதலால் அங்கிருந்த காகித கிடங்குகளில் 5 மில்லியன் புத்தகங்கள் எரிந்தது.[21]
சாதாரண பொழுதுபோக்கு


"சாதாரண பொழுதுபோக்கு என்பது ஒப்பீட்டளவில் குறுகிய கால, மகிழ்ச்சியான செயலாகும். இதை அனுபவிக்க சிறப்பு பயிற்சி ஏதும் தேவையில்லை".[22]
பண்பாட்டு வேறுபாடுகள்
பொழுதுபோக்குக்கான நேரம் ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்திற்கு மாறுபடும். இருப்பினும் வேட்டைக்காரர்கள் மிகவும் சிக்கலான சமூகங்களில் உள்ளவர்களை விட கணிசமாக அதிக பொழுதுபோக்கிற்கான நேரத்தைக் கொண்டுள்ளனர் என்று மானுடவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.[23] இதன் விளைவாக, வட அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளான சோஷோன் போன்ற இசைக்குழு சமூகங்கள் ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு அசாதாரணமாக சோம்பேறியாக தெரிந்தனர்.[24]
புள்ளிவிவரப்படி, வீட்டு மற்றும் பெற்றோருக்குரிய பொறுப்புகள் மற்றும் ஊதியம் பெறும் வேலையில் பங்கேற்பது ஆகிய இரண்டின் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆண்கள் பெண்களை விட அதிக பொழுது போக்கிற்கான நேரத்தைக் கொண்டுள்ளனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், வயது வந்த ஆண்களுக்கு ஒவ்வொரு வாரமும் பெண்களை விட ஒன்று முதல் ஒன்பது மணி நேரம் வரை அதிக பொழுதுபோக்கிற்கான நேரம் கிடைக்கும்.[25]
குடும்பப் பொழுதுபோக்கு
குடும்பப் பொழுதுபோக்கு என்பது பெற்றோர், குழந்தைகள் மற்றும் உடன்பிறப்புகள் ஆகியோருடன் நேரம் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக செலவழிக்கும் ஒரு செயலாகும். மேலும் இது தாத்தா பாட்டி, பெற்றோர் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பொழுதுபோகும் நடவடிக்கைகளில் ஒன்றாக விரிவுபடுத்தப்படலாம்.[26][27] [28] மேலும், வார இறுதி நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் இவ்வகையில் அடங்கும்
முதுமை
பொழுதுபோக்கு என்பது வாழ்நாள் முழுவதும் முக்கியமானது . இது கட்டுப்பாடு மற்றும் சுய மதிப்பு உணர்வை எளிதாக்கும்.[29] குறிப்பாக, வயதானவர்கள், உடல், சமூகம், உணர்ச்சி, கலாச்சார மற்றும் ஆன்மீக அம்சங்களால் பயனடையலாம்.[30] எடுத்துக்காட்டாக, பேரக்குழந்தைகளுடன் ஓய்வு நேரத்தில் ஈடுபடுவது தலைமுறை உணர்வுகளை மேம்படுத்தும். இதன் மூலம் வயதானவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வதன் மூலம் நல்வாழ்வை அடைய முடியும்.[31]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.