வளைதடிப் பந்தாட்டம்
From Wikipedia, the free encyclopedia
வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி, ஹொக்கி, Hockey) என்பது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். 19-ஆம் நூற்றாண்டில் இலண்டனின் பொதுப் பள்ளிகளில் உருவான இந்த விளையாட்டின் மேம்படுத்தப்பட்டப் பதிப்பானது தற்போது பன்னாட்டு அளவில் விளையாடப்படுகிறது.[1]

ஆடுகளம்
வளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.
பந்து
பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.
ஆட்டக்காலம்
இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.
ஆட்டக்காரர்கள்
விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.