இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், ஒளிப்பதிவாளர், புதின எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
தங்கர் பச்சான் (Thangar Bachan) தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார். தேசிய திரைப்பட விருதுகளில் நடுவர் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[1]
தங்கர் பச்சான் | |
---|---|
பிறப்பு | தங்கராசு 1961 பத்திரக்கோட்டை,பண்ணுருட்டி வட்டம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | உழவர், ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நாவலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1990 – தற்போது வரை |
தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர்.[2]
திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவர்.
தங்கர்பச்சன் முதல் படமான மலைச் சாரல் மூலம் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் மோகமுள், பாரதி போன்ற படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டார். இவர் இயக்குநராக அழகி படத்தின் வழியாக அறிமுகமானார்.
திரைப்படங்கள் தவிர இலக்கியப் பணிகளிலும் அவ்வப்போது இவர் பங்களித்துள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் அம்மாவின் கைப்பேசி ஆகியவை இவரது புதினங்களாகும். இறுதியில் இந்தப் புதினங்களை இவரை திரைப்படங்களாக இயக்கினார்.
தமிழ்த் திரைப்படங்களில் சரியாக சித்தரிக்கப்படாத வட தமிழக கிராமங்களை சித்தரித்த பங்களிப்பிற்காக தங்கர் பச்சன் அறியப்பட்டவர். இவரது கதைக்களம் பெரும்பாலும் பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பாரதிராஜாவுக்குப் பிறகு தங்கர் பச்சான் படங்களில் கிராமங்கள் சிறப்பாகக் காட்டப்பட்டன. பாரதிராஜாவே தனக்குப் பிறகு பச்சன் சிறந்த கிராமியப் படங்களை இயக்குகிறார் என்று தெரிவித்தார்ர்.[3]
2024 இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பாக கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 24,980,09 வாக்கு வித்தியாசத்தில் எம். கே. விஷ்ணு பிரசாதிடம் தோல்வியடைந்தார்.[4][5] பின்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த வந்தார் அப்பொழுது சற்று ஆவேசமாக தோல்வியை குறித்து பேசினார்.[6]
ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2002 | அழகி | |
சொல்ல மறந்த கதை | ||
2004 | தென்றல் | |
2005 | சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி | |
2007 | பள்ளிக்கூடம் | வெற்றியாளர், சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
ஒன்பது ரூபாய் நோட்டு | ||
2013 | அம்மாவின் கைப்பேசி | [7] |
2017 | களவாடிய பொழுதுகள் | |
2023 | கருமேகங்கள் கலைகின்றன | |
தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.