ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
டேவிட் ஆன்ட்ரூ வார்னர் (David Andrew Warner, பிறப்பு: 27 அக்டோபர் 1986) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் பன்னாட்டு இருபது20 போட்டியில் ஆத்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.இடது-கை தொடக்க மட்டையாளரான இவர் 132 ஆண்டுகளில் முதல்தரத் துடுப்பாட்ட அனுபவம் எதுவும் இன்றி ஆத்திரேலியத் தேசிய அணிக்கு நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது வீரர் ஆவார்[1][2][3][4] இவர் தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநில அணி , சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிட்னி தண்டர் அணிகளுக்காக உள்ளுர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[5]
2014 இல் வார்னர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டேவிட் அன்ட்ரூ வார்னர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 27 அக்டோபர் 1986 பாடிங்டன், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | தொடக்க மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 426) | 1 திசம்பர் 2011 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 3 சனவரி 2024 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 170) | 18 சனவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 19 நவம்பர் 2023 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 31 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 32) | 11 சனவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 24 சூன் 2024 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 31 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006/07–2020/21 | நியூ சவுத் வேல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–2013, 2022–இன்று | டெல்லி கேபிடல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009 | டர்காம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | மிடில்செக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010/11 | வடக்கு மாவட்டங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12, 2013/14, 2022/23–இன்று | சிட்னி தண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012/13 | சிட்னி சிக்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–2021 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | செயிண்ட் லூசியா இசுடார்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | வின்னிபெக் ஹோக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | சில்கெட் சிக்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2024 | துபாய் கெப்பிட்டல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 24 சூன் 2024 |
2015 முதல் 2018 வரை தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் துணைஅணித் தலைவராக இருந்தார்.
துவக்கத்தில் ஸ்லிப்பில் களத்தடுப்பாடினார். பின் 2016 ஆம் ஆண்டில் கைவிரலில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் மத்திய திசையில் களத்தடுப்பாடி வருகிறார். ஜனவரி 23, 2017 இல் ஆலன் பார்டர் பதக்கத்தை வென்றார். இந்தப் பதக்கத்தை வென்ற நான்காவது வீரர் ஆவார். மேலும் தொடர்ச்சியாக இந்தப் பதக்கத்தை ஒரு முறைக்கு மேல் பெற்றவர் எனும் சாதனை படைத்தார்.
ஏப்ரல், 2017 அன்றைய நிலவரப்படி, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையின் படி தேர்வுத் துடுப்பாட்டத்தில் 6 ஆவது இடத்திலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்யில் 3 ஆவது இடத்திலும் உள்ளார். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 1500 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆத்திரேலிய மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] ஒர் ஆண்டில் ஏழு நூறுகள் அடித்த முதல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். செப்டம்பர் 28, 2017 இல் தனது 100 வது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் 100 வது போட்டியில் 100 ஓட்டங்கள் அடித்த முதல் ஆத்திரேலிய வீரர் மற்றும் 8 வது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[7][8]
2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கையின் படி வார்னர், ஸ்டீவ் சிமித் மற்றும் கேமரான் பான்கிராஃப்ட் ஆகியோரை ஒரு ஆண்டுகாலம் சர்வதேச மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தது.[9][10] இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தேர்வானதை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் தடைசெய்தது.[11]
2009-10 காலத்தில் இந்தியன் பிரீமியர் லீக் அணியான தில்லி டேர்டெவில்சில் சேர்க்கப்பட்டார்.[12] 2014 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினால் 880,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.[13]
சிட்னியின் பாடிங்டன் என்ற புறநகரில் பிறந்த டேவிட் வார்னர்[14] 19-வயதிற்கு உட்பட்டோருக்கான ஆத்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு இலங்கை சென்று விளையாடினார்.[15]
டேவிட் ஆண்ட்ரூ வார்னர் அக்டோபர் 27, 1986 அன்று பட்டிங்டன், சிட்னியில் பிறந்தார். தனது 13 ஆம் வயதில் இடது-கையில் மட்டையாடி வந்தபோது இவரது பயிற்சியாளர் வலது-கையால் மட்டையாடும்படி அறிவுறுத்தினார்.[16] இவர் விளையாடிய ஒரு பருவத்திற்கு பின் இவரது தாய் ஷெய்லா வார்னர் அவரை மீண்டும் இடதுகையால் விளையாடும்படி அறிவுறுத்தினார். அதன் பின் சிட்னி கோஸ்டல் துடுப்பாட்ட சங்க 16 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் பல சாதனைகளைப் படைத்தார். தனது 15 ஆவது வயதில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். பின் 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின் தேசிய அணியில் இடம்பெற்றார்.[17] இவர் ராண்ட்விக் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.[18]
டேவிட் வார்னரின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நகரம்/நாடு | அரங்கு | ஆண்டு | முடிவு | |
1 | 163 | 19 | இலங்கை | பிரிஸ்பேன், ஆத்திரேலியா | பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் | 2012 | வெற்றி |
2 | 100 | 20 | இலங்கை | அடிலெயிட், ஆத்திரேலியா | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | 2012 | தோல்வி |
3 | 127 | 51 | இங்கிலாந்து | சிட்னி, ஆத்திரேலியா | சிட்னி கிரிக்கெட் மைதானம் | 2015 | வெற்றி |
டேவிட் வார்னரின் இருபது20 நூறுகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
# | ஓட்டங்கள் | |||||||
4s | 6s | விளையாடிய அணி | எதிரணி | இடம் | ஆண்டு | |||
1 | 107* | 69 | 9 | 5 | டெல்லி டேர்டெவில்ஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | புது தில்லி | 2010 |
2 | 135* | 69 | 11 | 8 | நியூ சவுத் வேல்ஸ் புளூஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | சென்னை | 2011 |
3 | 123* | 68 | 6 | 11 | நியூ சவுத் வேல்ஸ் புளூஸ் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | பெங்களூர் | 2011 |
4 | 102* | 51 | 6 | 6 | சிட்னி தண்டர் | மெல்போர்ன் ஸ்டார்ஸ் | மெல்பேர்ண் | 2011 |
5 | 109* | 54 | 10 | 7 | டெல்லி டேர்டெவில்ஸ் | டெக்கான் சார்ஜர்ஸ் | ஐதராபாத்து (இந்தியா) | 2012 |
6 | 126 | 59 | 10 | 8 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ஐதராபாத்து (இந்தியா) | 2017 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.