Remove ads
From Wikipedia, the free encyclopedia
வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.
டயானா | |
---|---|
வேல்ஸ் இளவரசி | |
பிறிஸ்டல் நகரில் சமூக நிலைய திறப்பு நிகழ்வு, மே 1987 | |
உடனுறை துணை | சார்ல்ஸ், வேல்ஸ் இளவரசர் (1981–1996) |
பிள்ளைகள் | |
முழுப்பெயர் | |
டயானா பிரான்செஸ் ஸ்பென்சர்[1] | |
பட்டங்கள் | |
டயானா, வேல்ஸ் இளவரசி த லேடி டயானா ஸ்பென்சர் | |
வேந்திய மரபு | வின்சர் மாளிகை |
தந்தை | ஜோன் ஸ்பென்சர் |
தாய் | பிரான்செஸ் ஷாண்ட் கிட் |
பிறப்பு | நோர்போக், இங்கிலாந்து | 1 சூலை 1961
இறப்பு | 31 ஆகத்து 1997 36) பாரிஸ், பிரான்ஸ் | (அகவை
அடக்கம் | நோர்தாம்ப்டன்ஷயர் |
இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது. நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் தானுந்து ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராத்சிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது[2].
டயானா 1 ஜூலை 1961, 7:45, பார்க் ஹவுஸ், சான்றிங்கம், நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார். ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா, புனித மேரி மேக்டலீன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார். அவருடன் பிறந்தவர்கள் சாரா, ஜேன் மற்றும் சார்லஸ் ஆகியோர். அவர் பிறக்கும் ஒரு வருடத்திற்கு முன் ஜான் எனும் சகோதரன் இறந்து போனான். வாரிசுக்கான மோதல் டயானாவின் பெற்றோர்களுக்கு இடையில் வெறுப்பை தந்தது. டயானாவிற்கு எட்டு வயதிருக்கும் போது அவ்விருவரும் பிரிந்து சென்றனர். விவாகரத்துக்கு பின்னர் டயானா தன் தாயுடன் இருந்தார், கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கு டயானா லண்டனுக்கு வரும் போது லார்டு அல்தார்ப் தன் முன்னால் மனைவி வருவதை அனுமதிப்பதில்லை. சிறிது காலம் கழித்து தன் மாமியார் லேடி ஃபெர்மாயின் ஆதரவுடன் லார்டு அல்தார்ப் தன் மகளை திரும்ப பெற்றார். டயானா முதலில் நோர்ஃபோக்கில் உள்ள ரிட்டில்ஸ்வர்த் ஹாலில் படித்தார், பின்னர் செவனோக்ஸ், கென்டில், உள்ள தி நியூ ஹை ஸ்கூல்லில் படித்தார். 1973ல் லார்டு அல்தார்ப், டார்த்மவுத்தின் கோமாட்டி ரைய்னெவுடன் உறவு கொண்டார். 9 ஜூன் 1975ல் தன் தந்தை டயானாவை எர்ல் ஸ்பென்சர்ராக நியமித்து; டயானா, லேடி டயானா என்றழைக்கப்பட்டார். டயானா மிகுந்த அமைதியானவர், இசையிலும், நடனத்திலும் விருப்பம் உள்ளவர்.
1968ல் டயானா ரிட்டில்ஸ்வர்த் ஹால் பெண்கள் பள்ளியில் படித்தார். பின்னர் வெஸ்ட் ஹீத் பள்ளிக்கு மாற்றப்பட்டார், அவர் கல்வியில் பெரிதாக பிரகாசிக்க வில்லை அதிக பாடங்களில் தோல்வியுற்றிருந்தார். ஆனால் அவருக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது சிறந்த பியானோ கலைஞராக ஆனார். 1977ல் ரூக்மாண்ட், ஸ்விட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டிடுட் அல்பின் விடெமானட் எனும் பள்ளியில் பயின்றார் அச்சமயம் அவர் தன் வருங்கால கணவரை சந்தித்தார், டயானா நீச்சல், நீர் மூழ்குதல், பெல்லரினா எனும் கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண்ணாகவும் பிரகாசித்தார். அவர் பாலேட் நடனத்தை சிறிது காலம் பயின்றாலும் பின்னர் தன் உய்ரம் காரணமாக வெளியேறினார். டயானா முதன் முதலாக செவிலித்தாயாக அலெக்ஸான்றா எனும் பெண்ணுக்கு 17 வயதிருக்கும் போது வேலை செய்து வந்தார். அதன் பின்னர் டயானா லண்டனுக்கு 1978ல் வந்து தன் தாய் அதிகமாக ஸ்காட்லாந்தில் இருந்ததால் அவரின் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். அதன் பின்னர் தன் 18வது பிறந்த நாளுக்கு 100,000 பவுண்டு மதிப்புள்ள குடியிருப்பு வாங்கப்பட்டது. அங்கே அவர் 1981 வரை மூன்று குடியிருப்பு வாசிகளுடன் வசித்து வந்தார். தன் தாயின் ஆலோசனையின் படி சமையல் வகுப்புகளுக்கு சென்றார், சிறந்த சமையல்க்காரர் ஆகா விடினும் நல்ல நடன பயிற்றுனராக ஆனார். அதுவும் ஒரு சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்தால் நின்று போனது. அதன் பின்னர் அவர் சிறிது காலம், ஆரம்ப பள்ளியில் உத்வியாளராக இருந்தார், தன் சகோதரி சாராவுக்கு உதவி செய்து வந்தார், விருந்தினர் கூட்டம், உபசரிக்கும் பெண்ணாக இருந்தார். சிறிது காலம் லண்டனில் வசிக்கும் ஒரு குடும்பதுக்கு செவிலித்தாயாகவும் வேலை செய்து வந்தார்.
வேல்ஸ் இளவரசர் சார்லஸ், டையானாவின் மூத்த சகோதரி சாராவுடன் முன்னரே தொடர்பு வைத்திருந்தார், அதன் பின்னர் பல்வேறு நிகழ்வுகளுக்கு பின், பிப்ரவரி ஆறாம் தேதி 1981ல் இளவரசர் சார்லஸ் தம் காதலை கூற டயானாவும் ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி இருபத்தி நான்காம் தேதி, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, டயானா 30,000 பவுண்டு மதிப்புள்ள மோதிரத்தை தேர்வு செய்தார். அதே மோதிரம் பின்னர் கேத் மிடில்டன்னுக்கு 2010ல் நிச்சயதார்த்த மோதிரம் ஆனது. தன் நிச்சயதார்த்தை தொடர்ந்து டயானா தன் வேலைகளை விடுத்து, க்லேரன்ஸ் இல்லத்தில் சிறிது காலம் வசித்து வந்தார். அதன் பின்னர் தன் திருமணம் வரை பக்கிங்க்ஹாம் இல்லத்தில் வசித்து வந்தார். 1981, ஜூலை, இருபத்தி ஒன்பதாம் தேதி டயானாவுக்கும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ்க்கும் புனித பால் தேவலயத்தில் திருமணம் நடந்தது. இதன் மூலம் இருபது வயது டயானா வேல்ஸ் இளவரசி ஆனார். இத்திருமணத்தை 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியின் ஊடாகவும், அறுபது லட்சம் மக்கள் நேரடியாகவும் கண்டனர். டயானா இருபத்தி ஐந்து அடி நீளமுள்ள ஒன்பதாயிரம் பவுண்டு மதிப்புள்ள உடையை அணிந்து வந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.