கொங்குத் தமிழ் (Kongu Tamil) அல்லது கோயம்புத்தூர் தமிழ் என்பது கொங்கு நாட்டில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். இவ்வட்டார வழக்கு மொழி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்–(மேற்கு பகுதியான பழநி உட்பட அதை சுற்றியுள்ள சில பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது. இவ்வழக்கு இதற்கு முன்பு ”காங்கி” என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் கொங்கு தமிழ், நாடு(கள்) ...
கொங்கு தமிழ்
Kongu Tamil
கொங்கு தமிழ் tamiḻ
நாடு(கள்)மேற்கு தமிழ்நாடு, ( கர்நாடகா, கேரளா சில பகுதிகள் )
பிராந்தியம்கொங்கு நாடு
இனம்கொங்கு வேளாளர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10000000  (date missing)
தமிழ் எழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா (தமிழ்நாடு)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புNone
Thumb
தமிழ்நாட்டில் கொங்கு தமிழ் பேசும் பகுதிகள்
மூடு

சொற்பிறப்பியல்

கொங்கு என்ற சொல்லுக்குத் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால், காங்கி எனப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது. இம்மொழிக்கு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் கொங்குத் தமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது. மேலும் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொங்கு நாடு எனவும் அழைத்தனர்.[2][3]

சிறப்புகள்

தமிழ் மொழி தன் சிறப்பாக கொண்டிருக்கும் எழுத்தைவிட கூடுதலான எழுத்துகளை இயல்பாகவே பயன்படுத்தும் மொழி இது.[4]

தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். தொல்காப்பிய இலக்கண விதிப்படி தமிழின் இனமிகல் விதிப் புணர்ச்சி அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாக கொங்குத் தமிழ் இருக்கிறது.[4]

இதன் விளைவாகவே இந்த மொழியின் இலாவகம், பலரையும் எளிதில் ஈர்ப்பதாகவும், கற்பதற்கு எளிமையாகவும் அமைகிறது.[5][6][4]

தொனி, அகராதியியல்

என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற அல்லது என்ட, உன்ட என்றும், என்னடா என்பதை என்றா என்றும் கூறுவார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, சாப்பிட்டுபுட்டு, "தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்குட்டு' என்றும் கூறுவார்கள். மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் 'ங்கோ' போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று 'கோ' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள். வரணும் என்பதை வரோணும் என்பது போல ஓணும் போட்டு பேசுவார்கள். பத்தாயிரம் ரூபாய் என்பதற்கு பத்தாயிரன்றுவா என்பார்கள். வணக்கம், திங்கட்கிழமை என்பதற்கு பெரியவர்கள் நமஸ்காரம், சோமவாரம் என்பார்கள் (மேல் கொங்கு).[6]

தனிப்பட்ட அம்சங்கள்

மாரி என்ற முன்னொட்டு பொதுவாக கொங்கு தமிழில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணம்: தம்பிமார், அண்ணன்மார், கன்னிமார், நாயக்கர்மார், கொழுந்தியராமார்.

மேலதிகத் தகவல்கள் தமிழ், துறை வாரியாகத் தமிழ் ...
மூடு

மற்ற பேச்சுவழக்குகளுடன் தொடர்பு

யாழ்ப்பாண பேச்சுத்தமிழுக்கும் கொங்கு தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. காங்கேசன் என்ற கூழங்கையனின் கங்க வம்சத்தார் கொங்கிலிருந்து ஆளும் வர்க்கமாக யாழ்ப்பாண சோழர் காலத்தில் குடா நாட்டுக்கு வந்ததாக மட்டக்களப்பு மான்மியம் மற்றும் கோணேசர் கல்வெட்டு ஆகிய நூல்கள் கூறுகின்றன. மேலும் வன்னிமைகளில் ஒன்றும் கொங்கில் பால வேளாளரில் கொற்றந்தை வன்னிமை என்கிறது. இதனால் மொழி ஒற்றுமை உள்ளதாக ஆய்வாளர்கள் சிவபிரகாஷ்[7], பொன் தீபங்கர்[8] ஆகியோர் கூறுகின்றனர்.[9]

பேச்சு வழக்கு சிதைதல்

கொங்கு வட்டார பேச்சுவழக்கின் தூய வடிவம், வார்த்தை பயன்பாடுகள் கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மை மக்களான கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தால் மற்றும் 3-4 நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வாழ்ந்த பூர்விக மக்களால் பேசப்படும் பேச்சுவழக்கு ஆகும். இது கொங்கு மண்டலம் முழுவதும் பொதுவானது ஆனால் சிறிய பிராந்திய மாறுபாடு கொண்டது. பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியில் குறிப்பிடத்தக்க மலையாளிகள் மற்றும் செட்டியார் இருப்பதால், வட்டார பேச்சு வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் பகுதியில், படுகர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை காரணமாக, பிராந்திய பேச்சுவழக்கு முழு உச்சரிப்பில் இல்லை. காரமடை, சத்தியமங்கலம், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் குறிப்பிடத்தக்க கன்னடம் பேசுபவர்கள் இருப்பதால், பேச்சுவழக்கு சற்று மாறுபடுகிறது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் கரூர் போன்ற தொழில் நகரங்களில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வருவதால், பேச்சுவழக்குகள் கணிசமாக மாறிவிட்டன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமே சுத்தமான பேச்சுவழக்கில் சரியான தொனி மற்றும் சொற்களஞ்சியத்துடன் கொங்கு தமிழில் பேசுகிறார்கள்.[10]

வினைச்சொல் மற்றும் பிரதிபெயர் பயன்பாடு

கொங்கு தமிழ் பேசுபவர்கள் வித்தியாசமான பிரதிபெயர் மற்றும் வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இங்கே சில உதாரணங்கள்.

மேலதிகத் தகவல்கள் ஆங்கிலம், சாதாரண தமிழ் ...
பொது தமிழ் - கொங்கு தமிழ்
ஆங்கிலம் சாதாரண தமிழ் கொங்கு தமிழ்
like him அவனை போல அவனாட்ட
with him அவனுடன் அவனோட
will be enough போதுமா தாட்டுமா
here இங்கே இக்கட்ட / இந்தாண்ட
If not ஆகாவிட்டால் ஆகாட்டி
If not come வரவில்லை என்றால் வரலீன
once ஒருமுறை ஒருக்கா
once again மீண்டும் ஒருமுறை மருக்கா
that's what என்ன என்று என்னனு
throw away தூக்கி எறி / வெளிய எறி அக்கட்ட வீசு
huge மிகப்பெரிய இத்தாச்சோடு
how large எவ்வளவு பெரியது எத்தாச்சோடு
always/altime எல்லா நேரமும் எந்நேரமும், அன்னாடும்
How much tree எத்தனை மரம் எத்தனீ/ எத்தீனி மரம்
If didn't come வரவில்லை என்றால்/வரலீன வராட்டி
or not இல்லனா இல்லாட்டி
preparing Tea டீ போடுறேன் டீ வெக்கறேன்
at what time, you will come எந்த நேரத்தில் வருவீர்கள் எந்நேர வருவீங்க
fix the clip கிளிப் மாட்டு கிளிப் குத்து
Kneading the dough மாவு அரைப்பது மாவு ஆட்டுவது
coffe spilled காபி சிந்தீரிச்சு காபி கொட்டிருச்சு
run an errand - ஒரு எட்டு ஓடிட்டு ஒடியா
this time you itself go இந்த முறை/தடவை நீயே போ இந்த நட நீயே போ
Brush the teeth பல் துலக்கு பல் தேயு
Light the lamp விளக்கு ஏற்று விளக்கு போடு
Prepare food சாப்பாடு செய் சாப்பாடு ஆக்கு
Don't ever come here இங்கு எப்போதும் வராதே இங்க கீது வந்துராத
There அங்கு அவத்தால
Nearby, North South East west அருகில், வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு பக்கத்தால, வடக்கால தெற்க்கால கிழக்கால மேற்க்கால
By whom, by whom, by him யாரால, எவரால, அவரால யாருனால, எவுருனால, அவர்னால
மூடு

உறவு முறை சொற்கள்

மேலதிகத் தகவல்கள் கொங்கு தமிழ் ...
கொங்கு தமிழில் உறவு முறை சொற்கள்
கொங்கு தமிழ்
அப்புச்சி தாய்வழி தாத்தா
அப்பாரு தந்தை வழி தாத்தா
அம்முச்சி, அம்மாச்சி, அம்மாயி, அம்மாத்தா தாய்வழி ஆத்தா (பாட்டி)
ஆத்தா, அப்பத்தா, ஆயா- தந்தைவழி தந்தைவழி ஆத்தா (பாட்டி)
கொழுந்தனார் கணவரின் தம்பி
கொழுந்தியாள் கணவனின் தங்கை, மனைவியின் தங்கை, நாத்தனார்
நங்கை, நங்கையாள் அண்ணி (அண்ணணின் மனைவி/ மனைவியின் அக்கா), நாத்தனார்
மச்சான் அக்காவின் கணவர், மைத்துனன்
மச்சாண்டார் கணவனின் அண்ணன்
ஐயன் (பொது) பெரியவர் (பொது)
அம்மணி, அம்முணி, அம்மிணி (பொது) பெண்ணைக் குறிக்கும்
கன்னு, கன்னுக்குட்டி, தங்கம்/தங்கோ, மயிலு, எம்மயிலு, சாமி, குஞ்சு, ராசா, தங்க மயிலு, தங்கக்குட்டி, எஞ்சாமி, என்ராசா, எங்கண்ணு, சாமி செல்லம், செல்லத்தங்கம், செல்லமயிலு, ராசாத்தி[11] கொங்கு தமிழில் குழந்தைகளை கொஞ்சப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தைகள்
மூடு

சிறு பொழுதுகள்

மேலதிகத் தகவல்கள் கொங்கு தமிழ், தமிழ் ...
சிறு பொழுதுகள்
கொங்கு தமிழ் தமிழ்
கோழிகூப்பட அதிகாலை, வைகறை
காத்தால/விடியால காலை
மத்தியானம் நண்பகல்
வெய்ய தாள எற்பாடு
பொழுதோடா மாலை
அந்தி இரவு
சாமம் யாமம்
மூடு

திசைகள்

மேலதிகத் தகவல்கள் பெயர்ச்சொல், வினையுரிச்சொல் ...
கொங்கு தமிழில் திசை-சொற்களின் பயன்பாடு[12]
பெயர்ச்சொல் வினையுரிச்சொல் பெயரடைச்சொல் பெயர்ச்சொல்(பகுதி)
வடக்கு வடக்கு வடவரம் வடக்கால வடகோடு
கிழக்கு கெழக்கு கெழவரம் கெழக்கால கெழகோடு
மேற்கு மேக்கு மேவரம் மேக்கால மேகோடு
தெற்கு தெக்கு தெம்பரம் தெக்கால தெகோடு
மூடு

கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்

(அகரவரிசையில்)

  • அக்கட்ட, அக்கட்டு, அக்கட்டாலே (அக் கிடை)- அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு, move aside)
  • அக்கப்போர் - சண்டை/தொந்தரவு
  • அகராதி - எல்லாம் தெரிந்தார்போல நடத்தல்
  • அந்திக்கு - இரவுக்கு
  • அங்கராக்கு/அங்கராப்பு- சட்டை
  • அட்டாரி, அட்டாலி - பரண்
  • அப்பச்சி, அப்புச்சி - தாய்வழித் தாத்தா
  • அப்பத்தாள்/அப்பத்தாயாள்/அப்பாயி- தந்தைவழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
  • அப்பாறு - அப்பாவின் அப்பா
  • அப்பாயி - அப்பாவி
  • அம்மிணி - பெண்ணைக் குறிக்கும்
  • அமுச்சி - அம்மாயி - அம்மத்தாள் - அம்மாவின் அம்மா
  • -அட்ல, -அல்லெ (அவ்விடத்தில்) (காசரகோடு பாஷையிலும் (கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில் பேசப்படும் மலையாளம்) - இடம் (உ.தா. அந்த அல்லெ உக்காரு - அந்த இடத்தில் உட்கார்)
  • அஸ்கா(வ்) - வெஞ்சர்க்கரை
  • அவுதி - அவசரம்
  • அரசாணிக்காய் - பரங்கிக்காய்
  • குச்சுக்கோ - உக்காருங்க (கோவை நாயுடுமார் பகுதிகளில் வயதான பெரியவர்கள் பேசும் வழக்குச் சொல்)
  • அத்துவாணம் (அத்வானம்) - நிலையற்றது
  • அன்னன்/அணன் (கிழக்கு) - அப்பா (அன்னே நின்னையல்லால் - தேவார வழக்கு)
  • அண்ணாந்து - மேலே பார்த்து
  • அவத்த/அவடத்த/அவத்தகால/அவடத்தகால - (அவ்விடத்தில்) (அவத்த பாரு, அவத்தகால பாம்பு இருக்குது)

  • ஆசாரி - மரவேலைசெய்வோர்
  • ஆசாரம் - வீட்டினுள் உள்ள முற்பகுதி
  • ஆகாவளி - ஒதவாக்கரை - ஒன்றுக்கும் உதவாதவன்
  • ஆட்டம்/ஆட்ட - போல என்று பொருள்படும் ஒரு சொல்(be like): (அக்காளாட்டம்/ட்ட சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
  • ஆத்தா, ஆயா, ஆயி (அப்பாயி) - பழைய காலத்தில் அம்மா, தற்போது அப்பாவின் அம்மா
  • ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
  • ஆரு - யார்
  • ஆன - ஆனை - யானை
  • ஆட்டாங்கல் - ஆட்டு உரல்

  • இக்கிட்டு - இடர்பாடு
  • இத்தாச்சோடு-மிகப்பெரிய
  • இட்டேறி / இட்டாறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
  • இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
  • இவத்த/இவடத்த/இவத்தகால (இவ்விடத்தில்) - இந்த இடத்தில்

  • ஈக்கமாறு(சீமாறு) - ஈர்க்க மாறு (விளக்குமாறு)
  • ஈருளி - பேன், ஈர் முதலியவற்றை நீக்கப் பயன்படும் கருவி

  • உண்டி - (மாதிரி) = ஹுண்டியல் -> ஹுண்டி   -> உண்டி = Making hole? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
  • உக்காரு - உட்கார்
  • உப்புசம், உக்கரம் - புழுக்கம்
  • உறம்பிர - உறைம்பிரை - ஒறமொறை- சொந்தக்காரர்கள் - விருந்தாளி (உறவின்முறை). உறன் பரை = உறம்பரை
  • உன்ற/உன்ட/உம்பட - உன்றன்/உன்னுடைய

  • ஊக்காலி (?ஊர்க்காலி) - பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். (ரவுடி)
  • ஊளமூக்கு (ஈழைமூக்கு) - சளி நிரம்பிய மூக்கு
  • ஊட்டுக்காரி - வீட்டுக்காரி - மனைவி - மனையாள்
  • ஊறுபட்ட - ஏகப்பட்ட (எ.க:சோத்துல ஊறுபட்ட உப்பு . உறு - மிகை. )
  • உண்டுனா - அதிகமாக (எ.க: உண்டுனா திங்காத - அதிகமாக உண்ணாதே)

  • எச்சு - அதிகம்(கன்னட பிரயோகத்தில், எச்சு - அதிகம்)
  • எகத்தாளம் - நக்கல், பரிகாசம், திமிர்
  • எழுதிங்கள் - கொங்கு பெண் மக்களுக்கு செய்யப்பெறும் சடங்கு
  • எரவாரம் - கூரையின் கீழ் பகுதி (தாள்வாரம்)
  • என்ற/என்ட/எம்பட - என்றன்/என்னுடைய (mine)
  • எத்தாச்சோடு - எவ்வளவு பெரியது
  • எந்தநேர் - எவ்விடம்/எந்தப்பக்கம் (where)
  • எடைப்பால் சோறு - இடைப்பகல் உணவு
  • எச்சிப் பணிக்கம் - எச்சில் துப்பும் கலம்

  • ஏகமாக - மிகுதியாக, பரவலாக
  • ஏதாச்சும் - ஏதாவதும்
  • ஏகதேசம் - ஏறக்குறைய
  • ஏனம் - பாத்திரம்
  • ஏத்தவாரி - கிணற்றில் ஏற்றம் பூட்டி நீர் இறைத்த பகுதி

  • ஐயன்/அய்யன்- பெரியவர் அல்லது அப்பா/தந்தையின் தந்தை

  • ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)(மலையாள பிரயோகத்தில், ஒட்டாகே - ஆக கூடி, -உம்)
  • ஒடக்கா(ய்) - ஓணான்
  • ஒப்புட்டு - போளி
  • ஒணத்தி (உணர்ச்சி) - சுவையாக/உஷாராக
  • ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
  • ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் உண்டு விரதம் இருத்தல்
  • ஒலக்கை/ரக்க - உலக்கை (உரலில் குத்தப் பயன்படும் கருவி)
  • ஒன்ற/உன்ட/உம்பட - உன்னுடைய
  • ஒருவாடு - மிக அதிகமாக(பொள்ளாச்சி பகுதியில் புழங்கும் மலையாளச்சொல்)
  • ஒருக்கா(ல்)- ஒரு முறை
  • ஒரம்பர (உறவின்முறை)- விருந்தினர்

  • ஓரியாட்டம் - சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான். (ஓரி - ஒற்றை)

  • கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
  • கட்டுசோத்து விருந்து - கட்டுச்சாத விருந்து, வளைகாப்பு
  • கடைகால், கடக்கால் - அடித்தளம்
  • கடகோடு - கடைசி (அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
  • கடையாணி - அச்சாணி
  • கரடு - சிறு குன்று
  • கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
  • காணியாச்சி (காணியாட்சி) - குலதெய்வம் (பெண்)
  • காராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)
  • கினாவு, கெனாவு - கனவு
  • குக்கு (கோவை நாயுடுமார் பகுதிகளில்) - உட்கார்
  • குச்சிகிழங்கு - மரவள்ளிகிழங்கு
  • கூம்பு - கார்த்திகை தீபம் (கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிரு)
  • கூதல்/கூதர் - குளிர், கூதகாலம்- குளிர்காலம் (மலையாள பிரயோகத்தில்)
  • கூறுகெட்டவன் - அறிவு கெட்டவன்
  • கொரவளை \ தொண்டை - குரல்வளை
  • கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாவட்டங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)
  • கொழு/கொலவு - இரும்பாலான ஏர்முனை
  • கொழுந்தனார் - கணவரின் தம்பி
  • கொழுந்தியாள் - கணவனின் தங்கை, மனைவியின் தங்கை
  • கொட்டமுத்து - ஆமணக்கு
  • கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
  • கோசு - சிறிய சண்டை
  • கோடி - நீரில் நனையாத துணி/பதுத்துணி
  • கொங்காடை- மழைக்கு பாதுகாக்கும் ஆடை-சணல் சாக்கில் செய்தது
  • கூச்சம் - மரத்தூண்
  • கள்ளக்காய் - நிலக்கடலை
  • கரிஞ்சிக்குட்டிக் கீரை - மணத்தக்காளிக் கீரை
  • கவைக்கோல் / கவ்வக்கோல் -

முனையில் இரண்டாக பிரிக்கப்பட்ட குச்சி

  • கம்பத்தாட்டம் - கோவில் திருவிழாவில் ஆடும் ஆட்டம்

  • சடவு - பிரச்சினம், பிரச்சனை செய்ய, தொந்தரவு, வெறுப்பு (அவனுட சடவு எடுக்கமுடியல - அவன் தொந்தரவு தாங்கமுடியல) (மலையாள பிரயோகத்தில், சடவு, சடைக - மனந்தளர்க, தடைபடுத்துக)
  • சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
  • சாங்கியம் - சடங்கு
  • சாயங்காலம் - மாலை
  • சல்லை- சல்ல - இடர், (அ) மூங்கில் சல்லை
  • சிறு(லு)வாடு - சிறு சேமிப்பு
  • சீக்கு - நோய் (மலையாள பிரயோகத்தில், சீக்கு, சீத்தை - அழுக்கு, அசுத்தம்)
  • சீக்கடி - கொசுக்கடி
  • சொள்ளை - கொசு
  • சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
  • சீறாட்டு - கோபம்/பிடிவாதம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீறாடிட்டு வந்துவிட்டது) (மலையாள பிரயோகத்தில், சீறுக-கோபிக்க)
  • சீவகட்டை - சீவல்கட்டை- துடைப்பம்
  • சீவக்காய் - சியக்காய்
  • சுல்லான் (சுள்ளான்?) - கொசு
  • செகுனி, செவுனி - தாடை/கன்னம்
  • செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
  • சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
  • சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா)
  • சோமவாரம் - திங்கட்கிழமை (வடசொல்: ஸோமவாஸரம்)
  • சோறு - அன்னம்
  • சீப்பம்பால் - சீம்பால்
  • சாளை - வீடு (காட்டுச்சாளை - தோட்டத்து வீடு)
  • சயனம் - சகுனம்
  • சோட்டாளி - நண்பன் (உன்ற சோட்டாளி எங்க)

  • தண்ணி வார்க்க, தண்ணி ஊத்திக்க - குளிக்க
  • தவளை/ பொங்கத்தவளை - பித்தளையாலான பொங்கல் பானை
  • தவக்கா - தவளை(உயிரினம்) (frog)
  • தாரை - தடம் (கால்தாரை-காலடி தடம்)
  • தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் (ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை)
  • துழாவு - தேடு
  • திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
  • தும்பி - பூச்சி (உதாகரித்து), தட்டாந்தும்பி
  • தொறப்பு - பூட்டு, தொறப்பு கை - திறவுகோல்
  • தாவாரம் - தாழ்வாரம்
  • தடுக்கு - தென்னை ஓலைப் பாய்
  • தெரக்கு - மும்முரம் (தெரக்கா வேலை செய்யுறாங்க)

  • நங்கை, நங்கையாள் - அண்ணி (அண்ணணின் மனைவி/ மனைவியின் அக்காள்)
  • நலுங்கு - பயத்தால் உடல் நலம் குன்றிய (குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
  • நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
  • நச்சு - வாசாலம், பேசிக்கொண்டே இருப்பது/தொந்தரவு
  • நத்துவாய் - உணவு பிரியர்
  • நியாயம் (நாயம்) - பேச்சு (அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
  • நீசத்தண்ணி - பழையசோற்றுத்தண்ணீர்
  • நெனவு - நினைவு
  • நோவு/நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரீல. இன்னைக்கு வரல).
  • நோம்பி (நோன்பு) - திருவிழா
  • நமஸ்காரம் - மேல்கொங்கு பெரியவர்கள் (வடசொல்)

  • பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
  • படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
  • படி, பறை, சம்பா, ஆலாக்கு - அரிசியளப்பு அளவைகள்
  • பழமை - பேச்சு (அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை)
  • பன்னாடி - கணவன்,
  • பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
  • பாச்சை, பாற்றை- கரப்பான் பூச்சி (மலையாள பிரயோகத்தில், பாற்ற - கரப்பான்)
  • பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
  • புண்ணியர்ச்சனை- (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
  • புளுதண்ணி - நீர் ஊற்றி வைத்த பழைய சோறு
  • புள்ள - (இளம்) பெண்
  • பிள்ளார்/புள்ளாரு - பிள்ளையார் - புடுச்சு வெச்சா புள்ளாரு (பிடித்து வைத்தால் பிள்ளையார்)
  • பெருக்கான் - பெருச்சாளி
  • பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
  • பொட்டாட்டம் - அமைதியாக
  • பொடக்காலி - புழக்கடை
  • பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
  • பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர் (தம்பி)
  • பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரி (தங்கை)
  • பொழுதோட - பொழுது சாயும் முன்
  • பட்டி நோம்பி - மாட்டுப்பொங்கல்
  • படி -1 லிட்டர்
  • புறத்தாண்டை/பொறவுக்கு/பொறகால - பின்னால்

  • மச்சான் - அக்காவின் கணவர்
  • மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
  • மசுரு - மயிர்
  • முதலாளி - பண்ணைக்கு சொந்தக்காரன்
  • முட்டுவழி - முதலீடு
  • மெய்யாலும் − மெஞ்ஞாலும் புழப்பு - தொடர்வேலை
  • மலங்காடு - மலைக்காடு
  • மசை - மந்தமான
  • மச நாய் - வெறி நாய்
  • மசக்கிருக்கன் - முட்டாள் பைத்தியக்காரன்
  • மசையன் - விவரமற்றவன்
  • மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
  • மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
  • முக்கு - வளைவு,
  • முச்சூடும் - முழுவதும்,
  • மேட்டுக்காடு - வானம் பார்த்த பூமி
  • மாத்து - விஷேச வீட்டில் உட்கார விரிக்கும் சேலை
  • மொண்ணை - மழுங்கிய (மொண்ணைக்கத்தி)
  • மக்கிரி - பெரிய கூடை (6கூடை-1மக்கிரி)
  • மறுக்கா - மறுமுறை, இன்னொரு முறை
  • மஞ்சி - நார் (தேங்காய் மஞ்சி - தேங்காய் நார்)
  • மம்முட்டி - மண்வெட்டி

  • வளவு - ஒரு சுற்றத்தாரின் வாழ்விடம்
  • வட்டல் (வட்டில்) - தட்டு
  • வவுறு - வயிறு
  • வாக்கு - கோவிலில் கேட்கப்படும் ஒரு வகை சந்தேகங்கள்
  • விஷண்ணம்/வெசணம் - நோவுகை/மனக்கஷ்டம் (சம்ஸ்கிருதம்- மனஸ்தாபம்)
  • விசுக்குன்னு - திடீரென்று
  • வெகு - அதிக
  • வெள்ளாங்காய் - வெங்காயம்
  • வெசயா (விசையாக)- விரைவாக
  • வெள்ளாங்காய்/வெள்ளவெங்காயம் - பூண்டு
  • வெள்ளாமை (வேளாண்மை) - உழவு, விவசாயம்
  • வெலாவு - ஏர் வரிசை
  • வெசாலம், வெசாழக்கிழமை - வியாழக்கிழமை
  • வேகு வேகுனு, வெக்கு வெக்குனு- அவசரஅவசரமாய்
  • வேச காலம் - வெயில் காலம்
  • வள்ளம் - 4 படி (லிட்டர்) மரக்கால்
  • வாது - கிளை (அணில் வாது விட்டு வாது தாவியது)
  • விடியால - காலை

  • ரக்கிரி- பொரியலாகச் செய்யாது கடையப்படும் கீரை வகைகள்(எ-டு: பண்ண ரக்கிரி, தொய்ய ரக்கிரி, புளுமிச்ச ரக்கிரி)

து

  • துளிவேள (துளிவேளை) - குறைவாக

தெ

  • தெலுவு (தெளிவு) - பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் (போதை அற்றது)

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.