யூப்பிரடீஸ் ஆற்றின் கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கிஷ் நகரத் தொல்லியல் களம், ஏறத்தாழ ஒரு முட்டை வடிவத்தில் நாற்பது தொல்லியல் மேடுகளைக் கொண்டது. அவைகளில் புகழ்பெற்ற மேடுகள் பின்வருமாறு:
டெல் உகய்மிர் தொல்லியல் களம் - கிஷ் நகரத்தின் மையப் பகுதி என கருதப்படுகிறது. கிஷ் என்பதற்கு சிவப்பு எனப்பொருள். சிவப்பு நிற செங்கற்களாலான சிதிலமடைந்த கட்டிடங்கள் இங்குள்ளது.
இங்கரா தொல்லியல் களம் -:கிஷ் நகரத்தின் கிழக்கே அமைந்தது. இங்கு கிஷ் நகர மக்கள் வழிபட்ட இனான்னாவின் கோயில் உள்ளது.[7]
தொல்லியல் மேடு W - புது அசிரியப் பேரரசின் ஆப்பெழுத்தில் எழுத்தப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டது.
கிஷ் நகரத்தின் உகய்மிர் தொல்லியல் களத்தை 1912 மற்றும் 1914களில் பிரான்சு நாட்டு தொல்லியல் ஆய்வாளர் அகழ்வாய்வு செய்து, பழைய பாபிலோனிய இராச்சியத்தின் 1,400 தொல்பொருட்களை கண்டுபிடித்தார். அவைகளின் முக்கியமானவைகள் இஸ்தான்புல் மற்றும் லூவர் நகர அருங்காட்சியகங்களில் உள்ளது.[8][9]
பின்னர் 1923 முதல் 1933 முடிய கிஷ் நகர தொல்லியல் களங்களில் கண்டெடுத்த தொல்பொருட்கள் சிகாகோ மற்றும் ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகங்கள் வைக்கப்பட்டுள்ளது.[10][11][12][13][14][15][16]
1988, 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இத்தொல்லியல் களத்தை சப்பானியர்கள் அகழ்வாய்வு செய்தனர்.[17][18][19]
Henri de Genouillac, Premières recherches archéologiques à Kich: mission d'Henri de Genouillac 1911-1912: rapport sur les travaux et inventaires, fac-similés, dessins, photographies et plans. Tome premier, Paris: Libr. ancienne Edouard Champion, 5, quai Malaquais, 1924
P. R. S. Moorey, Kish excavations, 1923–1933: with a microfiche catalogue of the objects in Oxford excavated by the Oxford-Field Museum, Chicago, Expedition to Kish in Iraq, Clarendon Press, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-19-813191-7
S. D. Ross, 'The excavations at Kish. With special reference to the conclusions reached in 1928-29', in Journal of The Royal Central Asian Society, vol. 17, iss. 3, pp. 291 - 300, 1930
K. Matsumoto and H. Oguchi, News from Kish: The 2001 Japanese Work,
al-Rafidan, vol. 25, pp. 1-8, 2004
E. Mackay, Report on the Excavation of the "A" Cemetery at Kish, Mesopotamia, Pt. 1, A Sumerian Palace and the "A" Cemetery, Pt. 2 (Anthropology Memoirs I, 1-2), Chicago: Field Museum,1931
McGuire Gibson, The Archaeological uses of Cuneiform Documents: Patterns of Occupation at the City of Kish, Iraq, vol. 34, iss. 2, pp.113–123, Autumn 1972
T. Claydon, Kish in the Kassite Period (c. 1650 – 1150 B.C), Iraq, vol. 54, pp.141–155, 1992
P. R. S. Moorey, A Re-Consideration of the Excavations on Tell Ingharra (East Kish) 1923-33, Iraq, vol. 28, no. 1, pp.18–51, 1966
P. R. S. Moorey, The Terracotta Plaques from Kish and Hursagkalama, c. 1850 to 1650B.C., Iraq, vol. 37, no. 2, pp.79–99, 1975
Norman Yoffee, The Economics of Ritual at Late Old Babylonian Kish, Journal of the Economic and Social History of the Orient, vol. 41, no. 3, pp.312–343, 1998
P. R. S. Moorey, The "Plano-Convex Building" at Kish and Early Mesopotamian Palaces, Iraq, vol. 26, no. 2, pp.83–98, 1964
P. R. S. Moorey, Cemetery A at Kish: Grave Groups and Chronology, Iraq, vol. 32, no. 2, pp.86–128, 1970
Wu Yuhong and Stephanie Dalley, The Origins of the Manana Dynasty at Kish and the Assyrian King List, Iraq, vol. 52, pp.159–165, 1990
Seton Lloyd, Back to Ingharra: Some Further Thoughts on the Excavations at East Kish, Iraq, vol. 31, no. 1, pp.40–48, 1969
Federico Zaina, Radiocarbon date from Early Dynastic Kish and the stratigraphy and chronology of the YWN Sounding at Tell Ingharr, Iraq, vol. 77(1), pp.225–234, 2015
Zaina, F., Craft, Administration and Power in Early Dynastic Mesopotamian Public Buildings. Recovering the Plano-convex Building at Kish, Iraq, Paléorient, vol. 41, p.177–197, 2015