From Wikipedia, the free encyclopedia
காசிட்டு மக்கள் (Kassites) (கிமு 1531 — 1155) பண்டைய அண்மை கிழக்கில், பழைய பாபிலோனியப் பேரரசுக்குப் பின், பாபிலோனியாவை கிமு 1531 முதல் கிமு 1155 முடிய 366 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள்.[1]
பாபிலோனியாவின் காசிட்டு வம்சம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1531 — 1155 | |||||||||||
தலைநகரம் | துர்-குரிகல்சு | ||||||||||
பேசப்படும் மொழிகள் | காசிட்டு மொழி | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
பாபிலோனிய மன்னர் | |||||||||||
• கிமு 1500 | இரண்டாம் அகும் (முதல்) | ||||||||||
• கிமு 1157—1155 | என்லில்- நதின் - அகி (இறுதி) | ||||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||||
• தொடக்கம் | கிமு 1531 | ||||||||||
• பாபிலோனை அழித்தல் | 1531 | ||||||||||
கிமு 1158 | |||||||||||
• முடிவு | கிமு 1155 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | ஈரான் ஈராக் |
1595ல் இட்டைட்டு பேரரசினர் பாபிலோனியாவை தாக்கி அழித்த போது, காசிட்டு மக்கள் பாபிலோனியாவைக் கைப்பற்றி துர் - குரிகல்சு நகரத்தில் காசிட்டு வம்சத்தை நிறுவினர்.[2][3]
இராணுவ பழங்குடி மக்களான காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கினாலும், உள்ளூரில் செல்வாக்கு பெற இயலவில்லை.[4] காசிட்டு வம்சத்தின் 500 ஆண்டு ஆட்சியில் பாபிலோனிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர்.[3] காசிட்டு மக்களின் போர்க் குதிரைகள் மற்றும் போர் இரதங்கள் போற்றப்படும் முறை முதன்முதலில் பபிலோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.[4]
காசிட்டு மக்களின் தாயகம் தற்கால ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் ஆகும். ஈல மக்கள், குடியன்களைப் போன்று காசிட்டு மக்களும் மெசொப்பொத்தேமியாவில் தங்களது இராச்சியத்தை நிறுவினர்.[5][6]
அம்முராபியின் மகன் ஆட்சியில் கிமு 18ம் நூற்றாண்டில் பாபிலோனியா எதிரிகளால் தாக்கப்படும் போது, காசிட்டு மக்கள் பாபிலோனில் குடியேறினர். கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்டைட்டு பேரரசால் அழிந்த பின்னர், காசிட்டு மக்கள் துர் - குரிகல்சு நகரத்தை நிறுவி, 1531ல் காசிட்டு வம்ச ஆட்சியை மெசொப்பொத்தேமியாவில் நிறுவி, தற்கால ஈராக் மற்றும் ஈரானின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர்.
ஆட்சியாளர் | ஆட்சிக் காலம் | குறிப்பு |
---|---|---|
இரண்டாம் அகும் | பாபிலோனிற்கு கடவுள் மர்துக் சிலையை திருப்பிக் கொண்டுவருதல் | |
முதலாம் பர்னபுரியாஷ் | 1500 | அசிரியாவின்வின் மூன்றாம் புசூர் - அசூர் (கிமு 1503 - 1479) உடன் ஒப்பந்தம் செய்தல் |
மூன்றாம் கஷ்டிலியாஷ் | ||
உலம்புரியாஷ் | கிமு 1480 | சீலாந்து வம்சத்தவரை வெற்றி கொள்ளல் |
மூன்றாம் அகும் | கிமு 1470 | |
கரைந்தாஷ் | கிமு 1410 | அசிரியாவின் அசூர் - பெல் - நிசேசு உடன் அமைதி ஒப்பந்தம் செய்தல் |
கதஷ்மன் - ஹர்பி | கிமு 1400 | சுத்துக்கு ஏதிராக படையெடுத்தல் |
முதலம் குரிகல்சு | கிமு 1375 | துர் - குரிகல்சு நகரத்தை நிறுவதல் |
கதஷ்மான் - என்லில் | கிமு 1374—1360 | |
இரண்டாம் பர்னபுரியாஷ் | கிமு 1359—1333 | அசிரிய மன்னர் முதலாம் அசூர் - உபால்லித் சமகாலத்தவர் |
கர-ஹர்தாஷ் | கிமு 1333 | அசிரிய மன்னர் முதலாம் அசூர் - உபால்லித்தின் பேரன் |
நசி - புகாஷ் | கிமு 1333 | |
இரண்டாம் குரிகல்சு | கிமு 1332—1308 | அசிரிய மன்னர் என்லில் - நிராரியுடன் போரிடுதல் |
நசி - மருத்தாஷ் | கிமு 1307—1282 | அசிரிய மன்னர் அதாத் - நிராரியிடம் நாட்டின் பெரும் பகுதிகளை இழத்தல் |
கதாஷ்மன் - துர்கு | கிமு 1281—1264 | இட்டைட்டு பேரரசர் மூன்றாம் ஹத்துசிலியின் சமகாலத்தவர் |
இரண்டாம் கதஷ்மன் - என்லில் | 1263—1255 | |
குதுர் - என்லில் | கிமு 1254—1246 | நிப்பூர் நகர மறுமலர்ச்சி காலம் |
சகரக்தி - சூரியாஷ் | கிமு 1245—1233 | |
நான்காம் கஷ்திலியாசு | கிமு 1232—1225 | அசிரிய மன்னர் துகுல்தி - நினுர்தாவால் பதவி நீக்கப்பட்டார். |
என்லில் - நதின் - சுமி | கிமு 1224 | அசிரியா இராச்சியத்திற்கு திறை செலுத்தியவர் |
இரண்டாம் கதஷ்மன் - ஹர்பி | கிமு 1223 | அசிரியா இராச்சியத்திற்கு திறை செலுத்தியவர் |
ஆதாத் - சுமா - இட்டின்னா | கிமு 1222—1217 | அசிரியா இராச்சியத்திற்கு திறை செலுத்தியவர் |
ஆதாத் - சுமா - உசூர் | கிமு 1216—1187 | |
இரண்டாம் மெலி - சிபாக் | கிமு 1186—1172 | |
மர்துக் - அப்லா - இட்டின்னா | கிமு 1171—1159 | |
சபாபா - சுமா - இட்டின் | கிமு 1158 | ஈலம் மன்னர் சுத்ருக் - நஹ்குண்டேவால் தோற்கடிக்கப்படல் |
என்லில் - நதின் - அஹி | கிமு 1157—1155 | ஈலம் மன்னர் இரண்டாம் குடிர் - நஹ்குண்டேவால் |
பாபிலோனியப் பெயர்களை காசிட்டு வம்ச மன்னர்கள் சூட்டிக் கொண்டாலும், காசிட்டு மக்களின் பழங்குடி மரபுப்படி வாழ்ந்தனர். காசிட்டு மக்கள் தங்கள் குலமரபை போற்றினர்.[7]
மித்தானி இராச்சிய மக்கள் போன்று காசிட்டு மக்கள், இந்திய-ஐரோப்பிய மொழியை பேசினர்.[3]
காசிட்டு வம்சத்தின் இறுதி எட்டு மன்னர்கள் காலத்தில், காசிட்டு மக்கள் அக்காதியம் மொழி பேசினர். காசிட்டு மக்கள் அசிரியர்களுடன் திருமண உறவு பூண்டனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.