இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை / கறுவாப்பட்டை (Cinnamon) என்பது சின்னமாமம் வேரம் அல்லது சி. சேலானிக்கம் (சின்னமாமம் வேரம் என்பதற்கு சி. சேலானிக்கம் என்று பொருள்) என்னும் தாவரவியற் பெயரைக் கொண்டது. இது ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். இது லாரசீயே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் ஆரம்ப உற்பத்தி இலங்கையாக இருப்பதுடன், அதிகமாக விளையும் இடமும் இலங்கையாக இருக்கிறது.[1] இந்த கறிமசால் பொருள் (கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்) மரத்தின் அடித் தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது அடிக்கடி இதற்கு ஒத்த வேறு இனத் தாவரங்களான காசியா மற்றும் சின்னமாமம் பர்மான்னி போன்றவற்றுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. இந்த கறிமசால் பொருட்களும் இலவங்கப்பட்டை என்றே அழைக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை, Yeast இல் உயிரணு சார்ந்த சுவாசத்தின் வீதத்தை குறைக்கிறது.

விரைவான உண்மைகள் இலவங்கப்பட்டை, உயிரியல் வகைப்பாடு ...
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை தழை மற்றும் பூக்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
மாக்னோலியோஃபிட்டா
வகுப்பு:
மாக்னோலியாப்சிடா
வரிசை:
லாரல்ஸ்
குடும்பம்:
லாரசீ
பேரினம்:
சின்னாமாமம்
இனம்:
சி. வேரம்
இருசொற் பெயரீடு
சின்னமாமம் வேரம்
ஜே. பிரசெல்
மூடு

பெயர்முறை மற்றும் பாகுபாட்டியல்

Thumb
அதன் இலைகள் (தொல்லுயிர் எச்சம்)

kinnámōmon என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படுவதிலிருந்து சின்னமன் (இலவங்கப்பட்டை) என்ற பெயர் வந்தது. கிரேக்க மொழியில் அழைக்கப்படும் kinnámōmon என்ற பெயரும் ஃபோனிஷியன் என்ற மொழியிலிருந்து தான் வந்தது. சின்னமாமம் மஞ்சள் என்ற தாவரவியல் பெயர், இலங்கையின் முந்தைய பெயரான சிலோன் என்பதிலிருந்து பெறப்பட்டது.[2]. இலங்கையில் இது தமிழில் கறுவாப்பட்டை/கருவாப்பட்டை என அழைக்கப்படுகிறது. மற்ற்ற பல மொழிகளில், குறிப்பாக ஐரோப்பிய மொழியில், பிரெஞ்சு கேனலே விற்கு தொடர்பான பெயர்கள் இருக்கும். மிகச்சிறிய கேனே (கோரைப்புல், பிரம்பு), அதனுடைய குழாய் போன்ற வடிவத்திலிருந்து வந்தது.

மராட்டிய மொழியில், இது "டல்ச்சினி (दालचिनी)" என்று அழைக்கப்படுகிறது. கன்னடத்தில், இது "செக்கே" என்று அழைக்கப்படுகிறது. வங்காளி மொழியில், "டார்ச்சினி" (দারুচিনি) என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கில், டால்ச்சின்ன சக்கா என்று அழைக்கப்படுகிறது. சக்கா என்பதற்கு அடிமரத்தின் பட்டை அல்லது கட்டை என்று அர்த்தமாகும். சமஸ்கிரதத்தில், இலவங்கப்பட்டை, ட்வாக் அல்லது dārusitā என்று அழைக்கப்படுகிறது. உருது, ஹிந்தி மற்றும் இந்துஸ்தானியில், டார்ச்சினி (दालचीनी دارچینی) என்று இலவங்கப்பட்டை அழைக்கப்படுகிறது. அஸ்ஸாமியில் அல்சானி என்றும், குஜராத்தியில் டாஜ் என்று இது அழைக்கப்படுகிறது. ஃபார்சியில், (பெர்சியா) டார்ச்சின் (دارچین) என்று அழைக்கப்படுகிறது. துருக்கி மொழியில், "Tarçın" என்று அழைக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில், ஜாவா மற்றும் சுமத்திராவில் இது பயிரிடப்படுகிறது. இது, காயு மனிஸ் மற்றும் சில நேரங்களில் காசியா வேரா , உண்மையான காசியா இலவங்கப்பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.[3] இலங்கையில், அசல் சிங்களத்தில், இலவங்கப்பட்டை, குரண்டு [4] என்று அழைக்கப்படுகிறது. இது 17ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் கொரண்டா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.[5] மலையாளத்தில், கருகாபட்டா என்றும் தமிழில் பட்டை அல்லது லவங்கப்பட்டை (இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை ) என்றும் அழைக்கப்படுகிறது. அராபிக் மொழியில், இது குவெர்ஃபா (قرفة) என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

Thumb
2005 ஆம் ஆண்டில் இலவங்கப்பட்டையின் (கானிலா) விளைச்சல்
Thumb
கோஹெலரின் மருத்துவ குணம் நிறைந்த செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட சின்னமாமம் வேரம் (1887)
Thumb
உண்மையான இலவங்கப்பட்டை அடிமரப்பட்டையின் குவில்கள் மற்றும் அரைக்கப்பட்ட இலவங்கப்பட்டை.

இலவங்கப்பட்டை அதனுடைய பண்டைய தன்மைக்கு பெயர் போனதாக இருக்கிறது. இலவங்கப்பட்டை என்ற இந்த கறிமசால் பொருளை பத்தி முதன் முதலாக வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் தான் சொல்லப்பட்டது. பரிசுத்த அபிஷேக எண்ணெயில் இனிப்பாக இலவங்கப்பட்டை (எபிரேய மொழி קִנָּמוֹן, qinnāmôn) மற்றும் காசியா ஆகிய இரண்டையுமே பயன்படுத்தும் படி மோசேக்கு கட்டளையிடப்பட்டது; நீதிமொழிகளில், காதலரின் படுக்கை, வெள்ளைப்போளம், கற்றாழை மற்றும் இலவங்கப்பட்டையால் வாசனை காட்டப்பட்டிருக்கும்; உன்னதப்பாட்டில் (சாலமோனின் பாடலில்) உள்ள ஒரு பாடலில், அவருடைய காதலியின் அழகையும், இலவங்கப்பட்டை வாசனையடிக்கும் அவளுடைய உடைகள் லீலி புஷ்பத்தின் வாசனை போல இருக்கிறது என்று விவரிக்கப்பட்டிருக்கும். பண்டைய நாடுகளின் மத்தியில் இது மிகவும் மதிப்பு வாய்ந்ததாக எண்ணப்பட்டது. அதனால் இவற்றை அன்பளிப்பாக, கடவுளுக்கும் அரசர்களுக்கும் அளிக்க உகந்ததாக இருந்தது: மிலிடஸில் உள்ள அப்பொல்லோவின் கோவிலுக்கு இலவங்கப்பட்டை மற்றும் காசியா அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கல்வெட்டு பதிவுகள் கூறுகின்றன.[6] மத்திய தரைகடல் உலகத்தில், கறிமசால வாணிபத்தில் ஈடுபட்டிருந்த இடைப்பட்ட வாணிபர்கள், விநியோகம் செய்பவர்களாக தங்களுடைய தனி உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக பல நூற்றாண்டுகளாக இதனுடைய மூல பொருட்கள் மர்மமாக வைத்திருந்தனர். இருப்பினும், இலங்கை, இலவங்கப்பட்டை விளைவிக்கப்படும் இடமாக இருக்கிறது.[1] கிமு 2000த்தின் ஆரம்ப காலத்தில் எகிப்திற்கு இது இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இதை குறித்து சொல்பவர்கள், இது சீனாவிலிருந்து வந்தது என்றும் காசியாவுடன் இதை குழப்பிக்கொள்கிறார்கள் என்றும் கூறினார்கள்.[7] இது, கிரேக்க எழுத்தாளர்கள் மற்றும் மற்ற இலக்கிய எழுத்தாளர்களாலும் கூட மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ரோமில் பிணங்களை எரிக்கும் விறகு கட்டையாக பொதுவாக பயன்படுத்தப்படுவதற்கு இது மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தது. ஆனால், பேரரசர் நீரோ, தன்னுடைய மனைவி பாப்பாய் சபீனாவின் பிணத்தை எரிப்பதற்கு நகர விநியோகத்தில் ஒரு வருட விநியோக மதிப்புடைய பட்டைகளை கிபி 65ல் எரித்தார் என்று சொல்லப்படுகிறது.[8]

காய்ரோவின் அஸ்திவாரம் நாட்டப்படுவதற்கு முன்னதாக, அலெக்ஸாந்திரியா தான் இலவங்கப்பட்டையின் மத்திய தரைக்கடல் கப்பல் வாணிக துறைமுகமாக இருந்தது. கிரேக்க வரலாற்று எழுத்தாளர்களுக்கு இலவங்கப்பட்டை செங்கடலிருந்து எகிப்தின் வாணிப துறைமுகத்திற்கு வந்தது என்பது தெரியும். ஆனால் அது எத்தியோப்பியாவிலிருந்து வந்ததா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஐரோப்பியர்களுக்கு தெரிந்திருந்த லத்தின் எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். 1248ல் சியூவர் டீ ஜாயின்வில்லி என்பவர் அவருடைய ராஜாவுடன் எகிப்திற்கு ஒரு அறப்போரில் கலந்துக்கொண்டார். அந்த அறப்போரின் போது, உலகத்தில் முனையில் நைலின் மூலத்தில் வலைகளின் மூலமாக இலவங்கப்பட்டை பிடிக்கப்படுகின்றன என்று அவர் கேள்விப்பட்டதாக கூறினார். இடைக்காலங்களின் முடிவு வரைக்கும், இலவங்கப்பட்டை எங்கிருந்து கிடைக்கிறது என்ற மூல ஆதாரம் மேற்கத்திய உலகத்திற்கு ஒரு மர்மமாகவே இருந்து வந்தது. மார்கோ போலோ, இந்த எண்ணிக்கையின் துல்லியத்தை தவிர்த்தார்.[9] கிரேக்க எழுத்தாளர்கள் மற்றும் மற்ற நூலாசிரியர்கள், இலவங்கப்பட்டை அரேபியாவில் தான் கிடைக்கிறது என்றனர்: மிகப்பெரிய இலவங்கப்பட்டை பறவைகள், இலவங்கப்பட்டை மரங்கள் வளரும் பெயர் தெரியாத இடத்திலிருந்து இலவங்கப்பட்டை குச்சிகளை சேகரித்து வந்து, அதனுடைய கூடுகளை கட்டுவதற்காக அதனை பயன்படுத்துகின்றன; இந்த குச்சிகளை பெறுவதற்காக அரேபியர்கள் ஒரு திட்டத்தை தீட்டினர். 1310ன் கடைசி வரைக்கும் பைசாண்டியத்தில் இந்த கதை நம்பப்பட்டு வந்தது. முதலாம் நூற்றாண்டு வரை இந்த கதை நம்பப்பட்டு வந்தாலும் கூட, ப்லென்னி த எல்டர் என்பவர், வணிகர்கள் இலவங்கப்பட்டையின் விலையை அதிகரிப்பதற்காக இந்த கதையை உருவாக்கினர் என்று எழுதினார். சுமார் 1270ல் சகரியா அல்-குவாஸ்வினியின் அத்தர் அல்-பிலாட் வா-அக்பர் அல்-இபாட்டில் ("இடங்களின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கடவுளின் அடிமைகளின் வரலாறு") இந்த கறிமசால பொருள் இலங்கையில் வளர்கிறது என்று முதன் முதலாக சொல்லப்பட்டது.[10] சுமார் 1292ல் வந்த கடிதத்தின் மூலமாக, சிறிது நாள் கழித்து ஜான் ஆஃப் மாண்டேகார்வினோவினால் பின்தொடரப்பட்டது.[11]

இந்தொனேஷிய கட்டுமரங்கள் இலவங்கப்பட்டையை (இந்தொனேஷியாவில் காயு மானிஸ் - “இனிப்பான மரம்” என்று நேரடியாக பொருட்கொள்ளலாம்) ஒரு “இலவங்கப்பட்டை வழியில்” நேரடியாக மொலுக்காஸிலிருந்து கிழக்கு ஆஃப்ரிக்காவுக்கு கொண்டு சென்றன. அங்கு உள்ளூர் வியாபாரிகள் அவைகளை வடக்கே ரோமானிய சந்தைக்குக் கொண்டு சென்றனர்.[12][13][14] ராஃப்டா என்ற வார்த்தையையும் பார்க்கவும்.

அராபிய வணிகர்கள் தரைவழியாக இந்த மசாலாப் பொருளை எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா பட்டணத்திற்குக் கொண்டு வந்தனர். இங்கு இத்தாலியிருந்து வந்த வெனிஸ் நாட்டு வணிகர்கள் அவைகளை வாங்கினர். இவர்கள் ஐரோப்பாவில் மசாலாப் பொருட்கள் வணிகத்தில் தனி உரிமையை வகித்தார்கள். மற்ற மத்தியதரை சக்திகளான மாம்லுக் சுல்தான்கள் மற்றும் ஓட்டொமன் சாம்ராஜ்ஜியம் ஆகியவை எழும்பினதால் இந்த வணிகம் தடைப்பட்டது. ஆகையால் ஐரோப்பியர்கள் ஆசியாவிற்கு மற்ற வழிகளை பரவலாக தேடுவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாக விளங்கியது.

போர்ச்சுகீஸ் வணிகர்கள் இறுதியாக பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிலோனில் (இலங்கை) தரையிறங்கினார்கள். அங்கு சிங்கல மக்களின் பாரம்பரிய இலவங்கப்பட்டை உற்பத்திக்கும் மேலாண்மைக்கும் மறு உருவளித்தார்கள். இதனால் இவர்கள் சிலோனில் இலவங்கப்பட்டைக்கான தனி உரிமையைப் பிற்பாடு கொண்டிருந்தார்கள். போர்ச்சுகல் நாட்டவர்கள் 1518ம் ஆண்டு இந்த தீவில் ஒரு கோட்டையை நிறுவி நூறு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய சொந்த தனி உரிமையைக் காப்பாற்றினார்கள்.

டச்சு வணிகர்கள் இறுதியில் தீவின் உள்பகுதியிலிருந்த கண்டி ராஜ்ஜியத்துடன் சம்பந்தம் கலந்து போர்ச்சுகல் நாட்டின் உரிமையை விழத்தள்ளினர். 1638ல் அவர்கள் ஒரு வணிகத் துறையை நிறுவினர், 1640க்குள் தொழிற்சாலைகளைக் கைப்பற்றினர். 1658க்குள் மீதமிருந்த அனைத்து போர்ச்சுகல் நாட்டவரையும் துரத்திவிட்டனர். “இந்த தீவின் கரையெங்கும் அவை நிறைந்திருக்கின்றன. கிழக்கத்திய தேசங்கள் அனைத்திலும் அவை மிகவும் சிறந்தன: தீவை விட்டு ஒருவர் கடந்து செல்லும் போது, கடலில் எட்டு லீகுகள் (1லீக்-4.8கிமி) சென்றபின்னும் இன்னும் இலவங்கப்பட்டையின் நறுமனம் வீசும்” என்று ஒரு டச்சு மாலுமி வியந்தார். (பிராடல் 1984, ப. 215)

டச்சு கிழக்கிந்திய நிறுவனம் வனத்தில் அறுவடை செய்யும் முறைகளை மேம்படுத்துவதோடு, காலபோக்கில் தன்னுடைய சொந்த மரங்களை பயிரிட ஆரம்பித்தது.

1767ல் கிழக்கிந்திய நிறுவனத்தின் ப்ரௌன் பிரபு கேரள மாவட்டமான கண்னூரில் (தற்போது கண்ணூர்) அஞ்சரக்கண்டிக்கு அருகே அஞ்சரக்கண்டி இலவங்கப்பட்டை பண்ணையை நிறுவினார்.

1796ல் ஆங்கிலேயர் டச்சு நாட்டவரிடமிருந்து தீவை கைப்பற்றினர். எனினும், சிலோனின் தனி உரிமையின் முக்கியத்துவம் சரியத்துவங்கியது. இலவங்கப்பட்டை மர வேளாண்மை மற்ற பகுதிகளுக்குப் பரவினது. மிகவும் பொதுவாக கிடைக்கக்கூடிய காசியா பட்டையை நுகர்வோர் அதிகமாக வரவேற்கத் துவங்கினர். மேலும் காப்பி, தேனீர், சர்க்கரை மற்றும் சாக்கலேட் போன்றவை பாரம்பரிய மசாலாப் பொருட்களின் ஜனரஞ்சகத்தன்மையை விஞ்சத் தொடங்கின.

செடி

இலவங்க மரங்கள் 10-15 மீட்டர் (32.8 - 49.2 அடி) உயரமுள்ளவைகளாயிருக்கின்றன. இலைகள் முட்டை வடிவத்தில் நீள சதுரமாக இருக்கின்றன, 7 - 18 செமீ (2.75-7.1 இஞ்சுகள்) நீளமுள்ளவைகளாக இருக்கின்றன. ஒரு குஞ்சம் வடிவத்தில் இருக்கும் பூக்கள், ஒருவகைப் பச்சை நிறத்தைக் கொண்டு, ஒரு தனி வாசனையைக் கொண்டுள்ளன. பழமானது ஒரே ஒரு விதையைக் கொண்ட 1-செமீ ஊதா நிற பெர்ரியாகும்.

வேளாண்மை

Thumb
ஒரு காட்டு இலவங்கப்பட்டை மரத்தின் இலைகள்

இலவங்கப்பட்டையானது மரத்தை இரண்டு வருடங்களுக்கு வளரவிட்டு அதன்பிறகு அதை கிளைநறுக்கி பட்டை செழிக்க செய்யப்படுகிறது. அடுத்த வருடம், சுமார் பன்னிரண்டு துளிர்கள் வேர்களிலிருந்து எழும்புகின்றன. இந்த துளிர்களிலிருந்து அவைகளின் பட்டைகள் நீக்கப்பட்டு காயவைக்கப்படுகின்றன. மெல்லிய (0.5 மிமீ) உள்பட்டை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; வெளிப்புற மரப்பகுதி நீக்கப்பட்டு, ஒரு மீட்டர்-நீள இலவங்கப்பட்டை துண்டுகள் காய்ந்து சுருள்களாகின்றன (“குவில்கள்”); ஒவ்வொரு காய்ந்த குவிலும் எண்ணற்ற துளிர்களிலிருந்து உண்டான பல பட்டைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த குவில்கள் விற்பனைக்காக 5-10 செமீ நீளமுள்ளவைகளாக வெட்டப்படுகின்றன.

இலவங்கப்பட்டை பண்டைய காலங்களிலிருந்து இலங்கையில் வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மரம் வர்த்தகரீதியில் தென்னிந்தியாவின் கேரளா, வங்க தேசம் (பங்க்ளாதேஷ்), ஜாவா, சுமத்ரா, மேற்கிந்திய தீவுகள், பிரேஸில், வியட்னாம், மடகாஸ்கர், சான்ஸிபார் மற்றும் எகிப்திலும் வேளாண்மை செய்யப்படுகிறது. இலங்கையின் இலவங்கப்பட்டை மிகவும் மெல்லிய வழுவழுப்பான பட்டையைக் கொண்டுள்ளது. அதின் நிறம் இளஞ்சிவப்பும் பழுப்பு நிறமும் கலந்ததாகவும் மிகவும் வாசனையான நறுமணமுள்ளதாகவும் காணப்படுகிறது.

2006ன் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற இதழின்படி, இலங்கை உலகத்தின் இலவங்கப்பட்டையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்வதாகவும், இதை தொடர்ந்து சீனா, இந்தியா, வியட்னாம் ஆகியவை உற்பத்தி செய்வதாகவும் அறிவித்தது.[15] FAOவின்படி, இலவங்கப்பட்டையின் காசியா வகையின் உலக உற்பத்தியில் 40% இந்தொனேஷியாவில் உற்பத்தியாவதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை தர அமைப்பு, இலவங்கப்பட்டை இறகுகளை நான்கு வகைகளாக பிரிக்கிறது:
• ஆல்பா விட்டத்தில் 6 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது
• கண்டம் சார்ந்தவை விட்டத்தில் 16 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது.
• மெக்ஸிகன் விட்டத்தில் 19 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது
• ஹாம்பர்க் விட்டத்தில் 32 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது.
இந்த குழுக்கள் மேலும் குறிப்பிட்ட தரங்களாக பிரிக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக, மெக்ஸிகன் M00 000 ஸ்பெஷல், M000000 மற்றும் M0000வாக பிரிக்கப்பட்டது. இவை, இறகின் விட்டம் மற்றும் ஒரு கிலோவிற்கு எத்தனை குவில்கள் நிற்கிறது என்பதை கணக்கிட்டு பிரிக்கப்பட்டது.

106 மில்லிமீட்டர் நீளமுடைய எந்த ஒரு அடிமரப்பட்டை துண்டும் குவில்களாக வகைப்பிரிக்கப்பட்டன. இறகுகள் என்பவை, கொப்புகள் மற்றும் முறுக்குள்ள இளங்கதிர்களின் உட்புற பட்டைகளாகும். பிசிர்கள் என்பவை இறகுகளை கத்தரித்தல், பிரிக்க முடியாத வெளிபுற மற்றும் உட்புற பட்டைகள் அல்லது சிறிய கொப்புகளின் பட்டைகளாகும்.

தொடர்புடைய கறிமசால் பொருட்கள்

தெற்கு மற்றும் தென்–கிழக்கு ஆசியாவில் பல வகையான இலவங்கப்பட்டை கறிமசால் பொருட்கள் உள்ளன. பயிரிடப்படும் இலவங்கப்பட்டை வகை (சின்னமாமம் சேலானிகம் அல்லது சி.வேரம் ) மட்டுமில்லாமல், ஏழு காட்டுவகை இலவங்கப்பட்டை கறிமசால் பொருட்களும் உள்ளன என்று கூறப்படுகிறது. இவை இலங்கையில் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

  • சின்னமாமம் டமலா
  • சின்னமாமம் டூபியம் (எடை) (சிங்கலா: சிவெல் குரண்டு அல்லது வால் குரண்டு ) [மேற்கோள் தேவை]
  • சின்னமாமம் ஓவலிஃபோலியம் (எடை) [மேற்கோள் தேவை]
  • சின்னமாமம் லிட்சிஃபோலியம் திவ். (சிங்கலா: குடு குரண்டு ) [மேற்கோள் தேவை]
  • சின்னமாமம் சிட்ரையோடோரம் (சிங்கலா: பாங்கிரி குரண்டு -அரிதாக கிடைக்கக்கூடியது)
  • சின்னமாமம் ரிவுலோரம் [மேற்கோள் தேவை]
  • சின்னமாமம் சிங்ஹராஜென்ஸ் [மேற்கோள் தேவை]
  • சின்னமாமம் கப்பாரு-கொரெண்டே (சிங்கலா: காபுரு குரண்டு ) [மேற்கோள் தேவை]

அடிமரப்பட்டையின் சுவையை அடிப்படையாக கொண்டு பல வெவ்வேறு சின்னமாமம் சேலானிகம் பயிர்வகைகள் உள்ளது.

  • வகை 1 சிங்கலா: பனி குரண்டு , பாட் குரண்டு அல்லது மாபட் குரண்டு
  • வகை 2 சிங்கலா: நாக குரண்டு
  • வகை 3 சிங்கலா: பனி மைரிஸ் குரண்டு
  • வகை 4 சிங்கலா: வெலி குரண்டு
  • வகை 5 சிங்கலா: செவாலா குரண்டு
  • வகை 6 சிங்கலா: கஹாட்டா குரண்டு
  • வகை 7 சிங்கலா: பைரிஸ் குரண்டு

இலவங்கப்பட்டை மற்றும் காசியா

Thumb
சிலோன் ("உண்மை") இலவங்கப்பட்டை (இடது பக்கதில் இருப்பது சின்னமாமம் சேலானிகம்) மற்றும் அதற்கு பக்கத்தில் இருப்பது இந்தோனேஷிய இலவங்கப்பட்டை (சின்னமாமம் பர்மான்னி) குவில்கள்

“உண்மை இலவங்கப்பட்டை ” (சி.சேலானிகம் என்ற தாவரப் பெயரில் இருந்து) என்றும் அழைக்கப்படும் இலங்கை இலவங்கப்பட்டையை சரியாக குறிப்பிட இலவங்கப்பட்டை என்ற பெயர் உபயோகிக்கப்படுகிறது[மேற்கோள் தேவை]. ஆயினும், தொடர்புடைய இனங்களான காசியா (சின்னமோமம் அரோமாடிகம் ), சைகோன் இலவங்கப்பட்டை (சின்னமாமம் லௌரிரோல் ) மற்றும் சின்னமோமம் பர்மான்னி சில சமயங்களில் இலவங்கப்பட்டை என்ற பெயரில் விற்கப்படுகிறது, சில சமயம் உண்மை இலவங்கப்பட்டையில் இருந்து “சீன இலவங்கப்பட்டை”, “வியட்னாமீஸ் இலவங்கப்பட்டை” என்று வேறுபடுத்தப்படுகிறது. பல இணையதளங்கள் தங்கள் “இலவங்கப்பட்டையை” காசியா என்று விவரிக்கின்றன.[16] ஒல்லியான உட்புற அடிமரப்பட்டை மட்டும் உபயோகிக்கும் இலங்கை இலவங்கப்பட்டை, நொறுங்கும் அமைப்புடனும், மென்மையாகவும் இருக்கும் மற்றும் அது காசியாவை விட குறைவான வலிமையுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. இலவங்கப்பட்டையை விட காசியாவிற்கு அதிகமான (சற்று கடுமையான) சுவை மணம் உண்டு. இது சுமாரானதில் இருந்து லேசான செந்நிற பழுப்பு நிறத்துடனும், கடினமான மற்றும் வைரஞ்சரிந்த அமைப்புடனும் மற்றும் மரப்பட்டையின் அனைத்து படலங்களும் உபயோகிக்கப்படுவதால் இது அடர்த்தியாகவும் இருக்கும் (2-3மிமி அடர்த்தி).[17]

லேசான நச்சுத்தன்மையுடைய பொருளான க்யூமாரின் இருக்கும் காரணத்தால், ஐரோப்பிய ஆரோக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் அதிகமான அளவில் காசியா உண்பதற்கு எச்சரிக்கை அளித்துள்ளது.[18] தேவையான எண்ணெய் பொருள் குறைந்த அளவில் இருப்பதனால் சின்னமோம் பர்மான்னியில் இது மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. அதிக அளவுகளில் இருக்கும் போது க்யூமாரின் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையான இலங்கை இலவங்கப்பட்டையில் க்யூமாரின் புறக்கணித்தக்க அளவிலேயே உள்ளது.

முழுமையாக இருக்கும் போது இரண்டு மரப்பட்டைகளையும் சுலபமாக வேறுபடுத்த முடியும் மற்றும் அவற்றின் நுண்ணோக்கி குணாதிசயங்களும் அதிகமாகவே வேறுபாடுகளுடன் இருக்கும். இலவங்கப்பட்டை குச்சிகள் (அல்லது குவில்கள்) பல மெல்லிய படிவங்களால் ஆனது மற்றும் அதை காபி அல்லது கறிம பொருள் அரவை எந்திரம் மூலம் எளிதில் பொடியாக்கி விட முடியும். ஆனால், காசியா குச்சிகள் மிக கடினமானதாக இருக்கும். இந்தோனேசிய காசியா (சின்னமாமம் பர்மான்னி ) அதிகப்படியாக ஒரு அடர்த்தியான படிவமுடைய அழகான இறகுகளாக விற்கப்படுகிறது. இது கறிமசால் பொருள் அல்லது காபி அரவை இயந்திரத்தை பழுதாக்கக் கூடும். மரப்பட்டை குவில்களாக மடிக்க முடியாத படி இருக்கும் காரணத்தால், சாய்கான் காசியா (சின்னமாமம் லௌரிரோல் ) மற்றும் சீன காசியா (சின்னமாமம் அரோமாடிகம் ) ஆகியவை அடர்த்தியான மரப்பட்டையின் உடைந்த துகள்களாக விற்கப்படுகிறது. தூள் செய்யப்பட்ட இலவங்கப்பட்டை மற்றும் தூள் செய்யப்பட்ட காசியா ஆகியவற்றை பிரித்துக் காட்டுவது கடினம். தூளாக்கப்பட்ட மரப்பட்டையுடன் சிறிதளவு ஐயோடீனின் டிங்சர் (மாச்சத்துக்கான ஒரு சோதனை) சுத்தமான நல்ல தரமான இலவங்கப்பட்டையில் சேர்க்கப்படும் போது மிகக் குறைவான தாக்கம் காணப்படும், ஆனால் காசியாவில் சேர்த்தால் ஒரு கருநீல நிறம் தோன்றும். நிறத்தின் அடர்த்தி காசியாவின் விகிதத்தை பொருத்தது.[மேற்கோள் தேவை]

இலவங்கப்பட்டை சில சமயங்களில் மலபார்தம் (சின்னமாமம் டமாலா ) மற்றும் சாய்கான் இலவங்கப்பட்டை (சின்னமாமம் லௌரிரோல் ) என்றும் குழப்பிக்கொள்ளப்படுகிறது.

பயன்கள்

இலவங்கப்படை அதிகமாக கறிமசால் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. சமையலில் குறிப்பாக இது தாளிக்கும் மற்றும் மணம் கூட்டும் பொருளாகவே உபயோகிக்கப்படுகிறது. இது சாக்லெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக, அசல் இலவங்கப்பட்டையின் முக்கியமான இறக்குமதி நாடான மெக்சிகோவில் உபயோகிக்கப்படுகிறது.[19] ஆப்பிள் பை, டோனட்ஸ் மற்றும் இலவங்கப்பட்டை அப்பம் போன்ற உணவுக்குப் பின் அளிக்கப்படும் இனிப்பு வகைகளிலும் உறப்பு பதார்த்தங்கள், தேனீர், சூடான கோக்கோ மற்றும் மது பானங்கள் ஆகியவற்றிலும் இது உபயோகிக்கப்படுகிறது. இனிப்பு பதார்த்தங்களில் காசியாவை விட அசல் இலவங்கப்பட்டையே பொருத்தமாக இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் இது கோழி மற்றும் ஆடு கார உணவுப் பொருட்களில் அதிகப்படியாக உபயோகிக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில், இலவங்கப்பட்டை மற்றும் சக்கரை அதிகப்படியாக தானியப்பொருட்களில் மணம் சேர்க்க, ரொட்டி சார்ந்த உணவு பதார்த்தங்கள் மற்றும் பழங்கள் குறிப்பாக ஆப்பிள் ஆகியவற்றில் உபயோகிக்கப்படுகிறது. இந்த நோக்கங்களுக்காக ஒரு இலவங்கப்பட்டை-சக்கரை கலவை கூட தனியாக விற்கப்படுகிறது. ஊறுகாய்களிலும் இலவங்கப்பட்டை உபயோகிக்கப்படலாம். நேரடியாக உண்ணக் கூடிய ஒரு சில கறிமசால் பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. பெர்சிய சமையல் முறையில் பல காலமாக இலவங்கப்பட்டை பொடி மிக முக்கியமான கறிமப் பொருளாக உள்ளது. இது அடர்த்தியான சூப், பானங்கள் மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகப்படியாக பன்னீர் அல்லது மற்ற கறிமசால் பொருளோடு கலக்கப்பட்டு ஸ்ட்யூவுக்கான இலவங்கப்பட்டை சார்ந்த குழம்பு பொடி செய்யப்படுகிறது அல்லது இனிப்பு பதார்த்தங்களில் மீது தூவப்படுகிறது (குறிப்பாக ஷோலிசார்ட் பேர் شله زرد).

இதன் மணம், இதன் உட்பொருட்களில், 0.5 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் வரை உள்ள வாசனை மிகுந்த தேவையான எண்ணெயினால் ஏற்படுகிறது. அடி மரப்பட்டையை இடித்து, கடல் தண்ணீருடன் கலந்து பின் உடனடியாக வடிகட்டி இந்த எண்ணெய் தயார் செய்யப்படுகிறது. இது தங்க-மஞ்சள் நிறத்திலும், இலவங்கப்பட்டையின் வாசனை மற்றும் சூடான வாசனை மிகுந்த சுவையுடன் இருக்கும். நெடியுடன் கூடிய சுவை மற்றும் வாசம் இதில் உள்ள சின்னமிக் ஆல்டிஹைட் அல்லது சின்னமால்டிஹைடினால் (அடி மரப்பட்டை எண்ணெயில் சுமார் 60 சதவீதம் வரை) ஏற்படுகிறது மற்றும் நாளாகும் போது பிராணவாயு ஈர்க்கப்பட்டு, அதன் நிறம் அடர்த்தியாகி, குன்கிலிய சேர்மங்களை உருவாக்குகிறது. இந்த எண்ணெயின் மற்ற திரவ உட்பொருட்களில் அடங்குபவை எத்தில் சின்னமேட், யூஜினால் (இலைகளில் அதிகமாகக் காணப்படுவது), சின்னமால்டிஹைட், பீடா-காரியோஃபிலின், லின்னலூல் மற்றும் மெத்தில் ஷாவிகோல் ஆகியவையாகும்[மேற்கோள் தேவை].

மருந்துகளில் இது மற்ற கரையக்கூடிய எண்ணெய்களைப் போல செயல்படுகிறது மற்றும் ஒரு காலத்தில் இது ஜலதோஷத்தை குணப்படுத்துகிறது என்று கருதப்பட்டது. இது வயிற்றுப் போக்கு மற்றும் ஜீரண மண்டலத்தின் மற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் உபயோகிக்கப்படுகிறது.[20] ஆக்சிஜன் ஏற்றத் தடுப்பு செயல்பாடு இலவங்கப்பட்டையில் அதிகமாக உள்ளது.[21][22] இலவங்கப்பட்டையில் உள்ள தேவையான எண்ணெய்க்கு நுண்ணுயிர் கொல்லி குணங்களும் உண்டு.[23] இது சில குறிப்பிட்ட உணவுகளை பதப்படுத்தவும் உதவும்.[24]

இன்சுலின் தடுப்பு மற்றும் வகை 2 சக்கரை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் இலவங்கப்பட்டைக்கு நல்ல மருந்தியல் தாக்கங்கள் இருப்பதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆய்வில் உபயோகித்த செடி பொருள் அதிகமாக காசியாவில் இருந்து எடுக்கப்பட்டது மற்றும் அதில் சில மட்டுமே உண்மையாக சின்னமாமம் சேலானிகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை (காசியாவின் ஆரோக்கிய பயன்கள் குறித்த தகவல்களுக்காக காசியாவில் மருத்துவ உபயோகங்களைப் பார்க்கவும்).[25][26] தாவர வேதியியலின் தற்போதைய வளர்ச்சி, சி.சேலானிகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சின்னம்டானின் B1க்கு வகை 2 சக்கரை நோயில் சிகிச்சை குணங்கள் இருப்பதாக காண்பித்துள்ளது.[27] சி.காசியா எடுக்கும் மாதவிடாய் நின்ற நோயாளிகளில் எடுக்கப்பட்ட ஆய்வு மட்டும் இதற்கு விதிவிலக்கு.[28] இலவங்கப்பட்டை பல் வலிக்கு சிகிச்சை அளிக்க மற்றும் துர்நாற்றத்தைப் போக்க பாரம்பரியமாக உபயோகிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியான உபயோகம் பொது ஜலதோஷத்தை தடுக்கவும் மற்றும் ஜீரணத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.[29]

பூச்சி கொல்லியாகக் கூட இலவங்கப்பட்டை உபயோகிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது, ஆனால் இது இன்னும் சோதனை செய்யப்படவில்லை.[30] கொசு முட்டைகளை அழிக்க இலவங்கப்பட்டை இலை எண்ணெய் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது.[31] இலவங்கப்பட்டை இலை எண்ணெயில் உள்ள சேர்மங்களான சின்னமாம்டிஹைட், சின்னமைல் அசிடேட், யூஜினால் மற்றும் அனிதோல் ஆகியவற்றிற்கு கொசு முட்டைகளை அழிப்பதில் அதிக தாக்கம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.[31]

அடிமரப்பட்டையில் இருந்து செய்யப்படும் சின்னமாமம் சேலானிகம் தேநீரை தொடர்ந்து குடிப்பது, செடி பகுதியில் குறிப்பிடத்தக்க பிராணவாயு ஏற்பு எதிர் திறன் இருப்பதால், மனிதர்களில் பிராணவாயு அழுத்தம் சார்ந்த நோய்களில் நல்ல பயனை அளிக்கிறது.[32]

இலவங்கப்பட்டை பாலுணர்ச்சி ஊக்கியாகக் கூட இருக்கலாம்.[33]

இலவங்கப்பட்டை சவால்

இலவங்கப்பட்டை சவால் என்ற இணைய தள தொடர் நிகழ்ச்சியில் இலவங்கப்பட்டை பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையை சுவாசிக்காமல் அல்லது வாந்தி எடுக்காமல் சாப்பிட வேண்டும். பல ஆயிரம் பட-ஆவண முயற்சிகள் நடந்தாலும், சிலர் மட்டுமே வெற்றி பெற்றனர். குறிப்பிடத்தக்க சவால் ஏற்றவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான டோஷ்.ஒ என்பதன் தொகுப்பாளர். இவர் தோல்வி அடைந்தார்.[34] மூக்கின் மூலமாக சுவாசித்தாலும் கூட , மிகுந்த வலி மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அனுபவத்தை அளிக்கக் கூடிய இலவங்கப்பட்டை தூளையே அவர்கள் சுவாசிக்கிறார்கள் என்று பலர் தெரிந்துக்கொள்வதில்லை.[35] ஒரு தேக்கரண்டி தூளை நிரம்ப அதிகப்படியான திரவம் தேவைப்படுகிறது. வாய் மற்றும் தொண்டைக்கு நடுவே பகிர்ந்து கொள்ளப்படும் எந்த சுவாசத்திலும் இந்த தூசு எளிதாக ஏற்றிச் செல்லப்படுகிறது. அதிகப்படியான சவால் விட்டவர்கள் இதன் பின் பயந்து தங்கள் வாய் வழியாக காற்றுக்காக தவிப்பர், அப்போது அவர்கள் அதிக அளவில் இலவங்கப்பட்டையை சுவாசிக்கின்றனர்.[36]

குறிப்புகள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.