மடகாஸ்கர் (இலங்கை வழக்கு:மடகஸ்கார்) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. சிறப்பபித்துச் சொல்வதென்றால் பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.இது மலாய்,இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

விரைவான உண்மைகள் மடகாசுகர் குடியரசுRepoblikan'i MadagasikaraRépublique de Madagascar, தலைநகரம் ...
மடகாசுகர் குடியரசு
Repoblikan'i Madagasikara
République de Madagascar
Thumb
கொடி
Thumb
சின்னம்
குறிக்கோள்: Tanindrazana, Fahafahana, Fandrosoana  (மலகசி)
Patrie, liberté, progrès  (பிரெஞ்சு)
"Fatherland, Liberty, Progress"
நாட்டுப்பண்: Ry Tanindrazanay malala ô!
Oh, Our Beloved Ancestral-land
Thumb
தலைநகரம்அண்டனானரீவோ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)மலகாசி, பிரெஞ்சு, ஆங்கிலம்1
மக்கள்மலகாசி[1]
அரசாங்கம்குடியரசு
 அதிபர்
மார்க் ரவலொமனனா
 பிரதமர்
சார்ல்ஸ் ரபேமனஞ்சரா
விடுதலை 
பிரான்சிடமிருந்து
 நாள்
ஜூன் 26 1960
பரப்பு
 மொத்தம்
587,041 km2 (226,658 sq mi) (45வது)
 நீர் (%)
0.13%
மக்கள் தொகை
 ஜூலை 2007 மதிப்பிடு
19,448,815 [2] (55வது)
 1993 கணக்கெடுப்பு
12,238,914
 அடர்த்தி
33/km2 (85.5/sq mi) (171வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
 மொத்தம்
$17.270 billion (123வது)
 தலைவிகிதம்
$905 (169வது)
ஜினி (2001)47.5
உயர்
மமேசு (2007)Increase 0.533
Error: Invalid HDI value · 143rd
நாணயம்மலகாசி அரியாரி (MGA)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (நடைமுறையிலில்லை)
அழைப்புக்குறி261
இணையக் குறி.mg
1Official languages since 27 April 2007
மூடு

வரலாறு

Thumb
இட்சிங்கி
Thumb
வரிவால் லெமூர் - இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் நூற்றுக்கும் மேலான லெமூர் வகைகளுள் ஒன்று.[3]
Thumb
விரல் நகத்தின் மீது இளவுயிரி அரியோந்தி - உலகில் உள்ள ஓந்திகள் அனைத்திலும் இந்த மடகாசுக்கர் அரியோந்தியே மிகச்சிறியதாகும்.

மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றாண்டில் எழுத்தில் தொடங்குகிறது. அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான். 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.