Remove ads
From Wikipedia, the free encyclopedia
பூரூக்கேசியா மைக்ரா (Brookesia micra) அல்லது மடகாசுக்கர் அரியோந்தி என்பது ஆப்பிரிக்காவின் அருகே உள்ள மடகாசுக்கரில், ஆந்துசிரனானா மாநிலத்தில் உள்ள நோசி ஆரா என்னும் தீவில் வாழும் பச்சோந்தி போன்ற ஓந்தி வகையைச்சேர்ந்த மிகச் சிறிய ஓந்தி. இதுவே உலகில் காணப்படும் யாவற்றினும் மிகச்சிறிய ஓந்தி. அரி என்பது சிறிய என்பதைக் குறிக்கும். இதனை பிப்பிரவரி 14, 2012 அன்று கண்டுபிடித்தனர். தீக்குச்சியின் மருந்துத் திரட்சி அளவே உள்ள மிகச்சிறிய ஒந்தி. முற்றிலும் வளர்ந்த அரியோந்தி 29 மிமீ அளவே இருக்கும்.[2][1]
அரியோந்தி Brookesia micra | |
---|---|
தீக்குச்சித் தலையில் இளவுயிரி அரியோந்தி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
உள்வகுப்பு: | லெப்பிடோசௌரோமோர்ஃபா (Lepidosauromorpha) |
பெருவரிசை: | செதிள்பல்லியோந்திகள் (Lepidosauria) |
வரிசை: | செதிளூர்வன (Squamata) |
துணைவரிசை: | பல்லி-ஓந்திகள் |
உள்வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | புரூக்கேசியா (Brookesia) |
இனம்: | B. micra |
இருசொற் பெயரீடு | |
Brookesia micra Glaw et al., 2012[1] | |
புரூக்கேசியா மைக்ரா வை கண்டுபிடித்து பெயர் சூட்டியது, பவேரிய உயிரியல் சேகரிப்பின் சார்பாக, பிராங்க்கு கிளா (Frank Glaw ) தலைமையில் ஆய்வு செய்தவர்கள் [3] கிளாவும், அவருடைய உடன் பணியாற்றிய ஆய்வாளர்களும் மடகாசுக்கர் காடுகளில் எட்டு ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வந்திருக்கின்றனர்[4] இவ்வினத்தின் பிற உறுப்பினர்களை, குறிப்பாக நோசி ஆரா ("Nosy Hara") பகுதியில் இருந்தவற்றை, கிளாவும் வென்செசும் (Glaw and Vences) 2007 இல் புரூக்கேசியா (Brookesia) எனப் பெயரிட்டிருந்தனர்[1].
புரூக்கேசியா மைக்ரா என்பதில் உள்ள மைக்ரா என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்து இலத்தீன் மொழிக்கு வந்த கிரேகக் மொழிச்சொல் "μικρός" (mikros) என்பதாகும். இதன் பொருள் "சிறிய", "குட்டியானது" என்பதே[1]
அரியோந்திகளின் (புரூக்கேசியா மைக்ரா) ஆண் உயிரிகள் மூக்குநுனியில் இருந்து பின்புறம் வரை 16 மி.மீ இருக்கும், ஆண், பெண் இரண்டுமே மொத்த உடல் நீளம் (வாலையும் சேர்த்து) 30 மி.மீ மட்டுமே. ஓந்திகளில் மிகச்சிறிய இது முதுகுநாணிகளிலும் மிகச்சிறயனவற்றுள் ஒன்றாக உள்ளது.[1] புரூக்கேசியா மினிமா எனப்படும் தொடர்பான உயிரின ஓந்தியை ஒப்பிட்டால், இதன் வால் சிறியது, தலை சற்று பெரியது[1]. முதிர்ச்சியடைந்த அரியோந்தியில் வால் மஞ்சள்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் இருக்கின்றது, ஆனால் புரூக்கேசியா மினிமா இனத்தில் குறிப்பிடத்தக்கதாக இல்லாத பழுப்பு நிறத்தில் இருக்கின்றது[1]. இதன் உடல் அளவை, இது வாழும் சூழலால் என்று சொல்லலாம். இப்படி தனிப்பட இருக்கும் சூழலில் ஒருவகையான குறுமைப்பண்பு பெறுகின்றது (insular dwarfism)[5].
புரூக்கேசியா மைக்ராவும், அதற்கு இனமான மற்ற மூன்று இனங்களும் மடகாசுக்கரின் வடக்கே, 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆண்டுக்கும் இடையே கண்டுணரப்பட்டது[6]. இந்த அரியோந்தி மட்டும் கரையோரம் இருந்த சிறு தீவில் காணப்பட்டது. இவை இலை தழைகளுக்கு இடையே பகலில் காணப்படுகின்றது. இரவில் மரக்கிளைகளில் ஏறி உறங்குகின்றது.[6][7] அரியோந்தி (புரூக்கேசியா மைக்ரா), இப்பொழுது சட்டத்தை மீறி காடழிப்பு மரவெட்டிகள் இயங்கும், இடத்தில் காணப்படுகின்றது. இதனால் இதன் வாழிடம் அழியும் வாய்ப்புள்ளது (கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான யோர்ன் கியோலர் (Jorn Köhler) கூற்றின் படி)[8].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.