தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
எஸ். பி. பி. சரண் (S. P. Charan) புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும், திரைப்பட நடிகரும் திரைப்படப் பின்னணிப் பாடகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். 2008இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சரோஜாவில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2].இவர் முதலில் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகப் பணியாற்றினார். இவர் 2003இல் கன்னடத் திரைப்படமான ஹுடுகிகாகியுடன் நடிப்பில் இறங்கினார். மேலும் 2008 இல் சரோஜா திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானார். இவர் கேபிடல் பிலிம் ஒர்க்சு என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தார். இதில் 2007 இல் சென்னை 600028 வெற்றியடைந்தது. இவர் தயாரித்த தெலுங்குத் திரைப்படம் ஆரண்ய காண்டம் 2012 இல் தேசிய திரைப்பட விருது வென்றது.
எஸ். ப்பி. பி. சரண் | |
---|---|
பிறப்பு | 7 சனவரி 1972[1] இந்தியா |
தொழில் | நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 1997 - தற்போது |
பெற்றோர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாவித்ரி |
சரண் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாவித்திரி ஆகியோரின் மகன். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சரணுக்கு மூத்த சகோதரி பல்லவி உள்ளார். இவர் சென்னை ஆசான் மெமோரியல் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்றார். அதில் இவருக்கு பள்ளி நண்பராக இருந்த பிரபல தமிழ் நடிகர் அஜித்குமாரும் இவருடன் படித்தார். 1994 இல் அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பேஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதுடன், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டு படிப்பை முடித்தார்.[3][4]
கே.எஸ்.எல் சுவாமி இயக்கிய மஹா யெதாபிதாங்கி என்ற படத்தில் சரண் முதலில் தனது தந்தையுடன் நடித்தார். ஆனால் திரைப்படம் வெளியிடப்படவில்லை. பாலசந்தர் மகன் கைலாசம் இவரை சுந்தர் கே. விஜயன் இயக்கிய கைலாசம் பாலசந்தர் தயாரிப்பில் உருவான ஊஞ்சல் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க அணுகினார். அதைத் தொடர்ந்து இராடனின் அண்ணாமலை நாடகத்தில் நடித்தார். தமிழில் பொம்மைகள் என்றும், தெலுங்கில் அக்கா செல்லலு என்றும் பெயரிடப்பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பி. மஞ்சுநாத் இயக்கிய 2003-இன் கன்னடத் திரைப்படமான ஹுடுகிககி இவரது முதற் திரைப்படமாகும் . 2008 இல் இவர் வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது நடிப்பு குறித்து, சிஃபி: "ஜகபதி பாபுவாக எஸ்பிபி சரண் இந்த பாத்திரத்திற்கு ஏற்றது, அருமை" என்று எழுதினார். இவர் வ குவாட்டர் கட்டிங் திரைப்படத்தில் நடித்தார். அதில் இவர் சிவாவின் வருங்கால மைத்துனராக நடித்தார். வானவராயன் வல்லவராயன், விழித்திரு ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்தார்.
சரண் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான கேபிடல் பிலிம் ஒர்க்சை 2002 இல் நிறுவினார். இவர்களின் முதல் தயாரிப்பு உன்னைச் சரணடைந்தேன் திரைப்படம், இதில் சரண் இவரது நண்பர் வெங்கட் பிரபுவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். குறிப்பாக எஸ். பி. பாலசுப்பிரமணியம் சரணின் தந்தையின் பாடல்கள், பின்னணி இசையைப் பெற்ற இப்படம் நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றது. சமுத்திரக்கனியின் கதைகளைக் கேட்டபின் படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாக சரண் தெரிவித்தார். இவர் மேலும் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த மழை- திரைப்படத்தை உருவாக்கினார். இது தெலுங்கு திரைப்படமான வர்சத்தின் மறு ஆக்கம் ஆகும். இது நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இவரது அடுத்த தயாரிப்பு அறிமுக இயக்குநரான வெங்கட் பிரபுவின் சென்னை 600028 ஆகும். இது ஒரு பொழுது போக்கு-அமைக்கும் படமாகக் கருதப்பட்டது. இது 11 புதியவர்களை கொண்டு முன்னணி வகித்ததுடன், 2007 இன் மிகப்பெரிய வணிக மற்றும் விமர்சன வெற்றிகளில் ஒன்றாகும். 2011 இல், இவரது ஆறாவது தயாரிப்பான ஆரண்ய காண்டம் வெளியிடப்பட்டு, விமர்சன ரீதியான பாராட்டுகளுடன் பிராந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் 52 வெட்டுக்களைப் பெற்றது. இது எதிர்பார்த்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை அடையவில்லை என்றாலும், 59 வது தேசிய திரைப்பட விருதுகளில் சரண் ஒரு சுவர்ணா கமலை வென்றார். இவரது அடுத்த தயாரிப்பு திருடன் போலீஸ், மற்றொரு அறிமுக இயக்குநர், கார்த்திக் ராஜு இயக்கியதாகும்.
சரண் 1997 இல் இளையராஜா இசையமைத்த தேவதை திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு பிரபலத்தின் மகனாக இருப்பதைப் பற்றி இவர்: "என் குரல் அப்பாவைப் போலவே இருக்கிறது. மக்கள் இதேபோன்ற குரலைப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். அப்பாவே இதே குரலில் பாடிக்கொண்டிருக்கும்போது, இசையமைப்பாளர்களுக்கு என்னுடைய குரல் ஏன் தேவை?". என்று கூறினார். இசையமைப்பாளர்களான எம். எம். கீரவாணி, ஏ. ஆர். ரகுமான், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருக்காக இவர் பாடியுள்ளார். சரண் மிகவும் பிரபலமான பாடல்களில் சில அலைபாயுதே திரைப்படத்தில் "நகிலா நகிலா", வருசம் திரைப்படத்தில் "மெல்லக", மன்மதுடு தெலுங்குத் திரைப்படத்தில் "நீனு நீனுக லெய்ன்", மழை திரைப்படத்தில் "ஐ லவ் யூ சைலஜா" ,பாய்ஸ் திரைப்படத்தில் "பிளீஸ் சார்", சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் "மாஜா மாஜா", எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் "ஒரு நண்பன் இருந்தால்", வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் "ஓ சாந்தி", மங்காத்தா திரைப்படத்தின் "நீ நான்" போன்ற பாடல்களாகும். 2010 இல், யுவன் சங்கர் ராஜாவுக்காக காதல் 2 கல்யாணம் ஒலிப்பதிவில் வெள்ளைக்கொடி பாடலைப் பதிவு செய்தார். ஆடுகளம் படத்திற்காக தமிழில் முதன்முறையாக தன் தந்தையோடு ஒரு பாடலைப் பதிவு செய்தார். இதற்காக இவர்கள் இருவரும் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விஜய் விருதை வென்றனர். பல இசை நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பாடுவதைக் காணலாம்.
1996 இல், இவரும் குழந்தைப் பருவ நண்பர்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோர் அடுத்த தலைமுறை என்ற இசைக் குழுவை அமைத்தனர். அதில் யுகேந்திரன், தமன் ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர்.
இவரது முதல் திருமணம் 1998 இல் பிஜோயாவுடன் நடைபெற்று 2008 இல் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் இவர் 2012 இல் அபர்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
2010 இன் பிற்பகுதியில் சரண் ஒரு குறிப்பிடத்தக்க எடை இழப்புக்கு ஆளானார். ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இவர், இது உடல்நல உணர்வுள்ளவருக்குப் பதிலளிப்பதாக கூறினார்.
2020 செப்டம்பர் 25 அன்று, இவரது தந்தை எஸ். பி. பாலசுப்பிரமணியம் சென்னையிலுள்ள எம். ஜி. எம் மருத்துவமனையில் கோவிட்-19 பெருந்தொற்றில் சுவாசக் கோளாறு காரணமாக இறந்தார்.
ஆண்டு | விருது | குறிப்புகள் |
---|---|---|
2001 | சிறந்த நடிகர் | மயிலாப்பூர் அகாடமி விருது [5]
ஊஞ்சல் தொடரில் நடித்தது |
2013 | தமிழக அரசின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருது | எனக்காக பொறந்தாயே- பண்ணையாரும் பத்மினியும் |
2012 | தேசிய திரைப்பட விருதுகள்- சிறந்த தயாரிப்பாளருக்கான இந்திராகாந்தி தங்கத் தாமரை விருது | ஆரண்ய காண்டம் |
சரணின் புகழ்பெற்ற பாடல்கள்:
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | இயக்குநர் | குறிப்புகள் |
2003 | உன்னைச் சரணடைந்தேன் | எஸ். பி. பி. சரண், வெங்கட் பிரபு | சமுத்திரக்கனி | |
2005 | மழை | ஜெயம் ரவி, சிரேயா சரன் | எஸ். ராஜ்குமார் | |
2007 | சென்னை 600028 | ஜெய், நிதின் சத்யா, சிவா, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி | வெங்கட் பிரபு | |
2008 | குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் | ராமகிருஷ்ணன், தர்ஷனா | ராஜ்மோகன் | |
2009 | நாணயம் | பிரசன்னா, சிபிராஜ் | சக்தி | |
2010 | ஆரண்ய காண்டம் | ஜாக்கி சராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் | குமாரராஜா | |
2014 | திருடன் போலீஸ் | அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் | கார்த்திக் ராஜூ | |
2015 | மூணே மூணு வார்த்தை | அர்ஜுன் சிதம்பரம், வெங்கடேஷ் ஹரிநாதன், அதிதி செங்கப்பா, ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம், லட்சுமி , கே. பாக்யராஜ் | மதுமிதா | |
2016 | சென்னை 600028 II | ஜெய், நிதின் சத்யா, சிவா, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி | வெங்கட் பிரபு |
ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | ஹுடுகிகாகி | கன்னடம் | ||
2003 | உன்னைச் சரணடைந்தேன் | தமிழ் | ||
2004 | நாலோ | தெலுங்கு | ||
2007 | ஞாபகம் வருதே | தமிழ் | ||
2008 | சரோஜா | ஜகபதிபாபு | தமிழ் | |
2010 | வ குவாட்டர் கட்டிங் | மார்த்தாண்டன் | தமிழ் | |
2010 | துரோகி | வெங்கட் | தமிழ் | |
2014 | வானவராயன் வல்லவராயன் | தமிழ் | ||
2016 | ||||
விழித்திரு | தமிழ் | படபிடிப்பில் |
ஆண்டு | நிகழ்ச்சி | தொலைக்காட்சி | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | ஊஞ்சல் | விஜய் தொலைக்காட்சி | தமிழ் | |
2002-2005 | அண்ணாமலை | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
அக்கா செல்லெலு | தெலுங்கு | |||
2014 | நெஞ்சத்தைக் கிள்ளாதே | ஜீ தமிழ் | தமிழ் | முரளி கதாப்பாத்திரம் |
2015 | சூப்பர் சிங்கர்-பகுதி 5 | விஜய் தொலைக்காட்சி | தமிழ் | நடுவர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.