இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஆ. ராசா (Andimuthu Raja, பிறப்பு: 10 மே 1963) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார். 17 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் ஆவார். இறுதியாக 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தார். மக்களவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
ஆ. ராசா | |
---|---|
தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர்[1] | |
பதவியில் 16 மே 2007 – 14 நவம்பர் 2010 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | தயாநிதி மாறன் |
பின்னவர் | கபில் சிபல் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சி. கோபாலகிருஷ்ணன் |
தொகுதி | நீலகிரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆண்டிமுத்து. சத்யசீலன்[2] 26 அக்டோபர் 1963 பெரம்பலூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னைற்றக் கழகம் |
துணைவர் | எம். ஏ. பரமேஸ்வரி (1996 -2021)[3] |
பிள்ளைகள் | மயூரி |
வேலை | அரசியல்வாதி |
14 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் 17 அக்டோபர், 2008 அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை திராவிட முன்னைற்றக் கழகத் தலைவர் திரு. மு. கருணாநிதியிடம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார்[4]. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2024 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் "2 ஆம் தலைமுறை அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு தி.மு.கவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் ஆதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது [7] சிபிஐ விசாரணைக்குப் பின் 2011, பெப்ரவரி 2, அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது[8]
இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.[9]
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.[10][11]
இவர் மத்திய அரசில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த போது, ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மீறி சாதகமாக அனுமதி வழங்கியமைக்கு, அந்நிறுவனம் ஆ. ராசாவின் பினாமி பெயரில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரூபாய் 55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை வழங்கியது. இந்நிலத்தை 22 டிசம்பர் 2022 அன்று அமலாக்க இயக்குனரகம் முடக்கியது.[12][13][14][15]
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசுகையில், நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின் என்றும், கள்ள உறவில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை எடப்பாடி கே. பழனிச்சாமி என்றும்; நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும் என்றும், ஆனால் குறைப்பிரவேசத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற, தில்லியிலிருந்து மோடி என்ற மருத்துவர் வருகிறார என்றும், அவர் எடப்பாடி பழனிச்சாமி கையை துாக்கி பிடித்து, திமுக ஊழல் கட்சி என்று பேசுகிறார் என்றார்.
முதல்வரின் பிறப்பு குறித்து, ஆ. ராஜா ஆபாசமாக பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு, திமுக மகளிரணி தலைவியும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி மற்றும் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.[16][17]
எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது, ஆ. ராசாவின் கண்ணியமற்ற பேச்சு குறித்து கண் கலங்கினார். [18]இதனால் ஆ.ராசா தனது கண்ணியமற்ற பேச்சிற்காக முதலமைச்சரிடம் மன்னிப்புக் கோரினார்.[19]
முதல்வா் பழனிசாமி தொடர்பாக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன்படி மாவட்டத் தேர்தல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆ. ராசாவின் சர்சைக்குரிய ஆபாச பேச்சு குறித்து 31 மார்ச் 2021 அன்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது . [20]
ஆண்டு | தொகுதியின் பெயர் | மக்களவை / சட்டமன்றம் | முடிவு |
---|---|---|---|
1996 | பெரம்பலூர் மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
1998 | பெரம்பலூர் மக்களவைத் தொகுதி | மக்களவை | தோல்வி |
1999 | பெரம்பலூர் மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
2004 | பெரம்பலூர் மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
2009 | நீலகிரி மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
2014 | நீலகிரி மக்களவைத் தொகுதி | மக்களவை | தோல்வி |
2019 | நீலகிரி மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
2024 | நீலகிரி மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.