வெண்ணி (ஆல்புமின், Albumin) என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை. வெப்ப ஆற்றலால், இப்பொருள் திரிபடைந்து திரளத்தொடங்கும். இப்பொருளின் வெண் நிறம் பற்றி வெண்ணி என்று பெயர் பெற்றது. இவ்வகைப் பொருட்கள் கோழி முட்டை போன்ற முட்டைகளில் உள்ள வெள்ளைக்கருவிலும் உள்ளன. ஆனால் இவற்றை வெள்ளைக்கரு அல்லது வெண்ணிக்கரு என்னும் பெயரால் அழைக்கப்படும். வெண்ணிகளில் மிகவும் பரவலாக அறியப்படுவது குருதியில் உள்ள வெண்ணிதான் என்றாலும் இவற்றில் சில வகை ஆற்றலை சேமித்து வைக்கும் பொருளாகவும் உள்ளன, சில செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. குருதியில் உள்ள வெண்ணியானது மஞ்சள் நிறக் குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் 60% ஆகும். இந்த வெண்ணிப் பொருட்கள் கல்லீரலில் உருவாகின்றன.

விரைவான உண்மைகள் வெண்ணிப் புரத வகை, அடையாளங்கள் ...
வெண்ணிப் புரத வகை
வெண்ணிப் புரத அமைப்பு.[1][2]
அடையாளங்கள்
குறியீடு Serum_albumin
Pfam PF00273
Pfam clan CL0282
InterPro IPR014760
SMART SM00103
PROSITE PS51438
SCOP 1ao6
மூடு
சமைப்பதற்காக உடைக்கப்பட்ட முட்டை - இதில் தெரியும் வெண்ணிறப் பகுதி பெரும்பாலும் ஆல்புமின் புரதங்கள் மற்றும் நீரால் ஆனது.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.