From Wikipedia, the free encyclopedia
அக்குளுத்தல் என்பது சங்ககால காதலர் விளையாட்டுகளில் ஒன்று.[1]
குறளன் ஒருவன் கூனிமேல் காதல் கொள்கிறான். தன் காதலை வெளிப்படுத்துகிறான். கூனி குறளனை இழிவாகப் பேசுகிறாள். குறளன் "உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன்" என்கிறான்.
அப்போது சொல்கிறான்: நெஞ்சோடு நெஞ்சு புல்லினால் (தழுவினால்) இன்பம் ஊறும். ஆனால் அது முடிவில்லை. பின்புறமாக அக்குளுத்துப் புல்லவும் முடியவில்லை. (அக்குளுத்துப் புல்லல் = இரண்டு அள்ளைகளையும் பிடித்துக் கிச்சு கிச்சு செய்தல்). "உன் பக்கத்தில் (அள்ளைப் பக்கம்) நின்று புல்ல இடம் தருக" என்று சொல்லிக் கெஞ்சுகிறான்.
அண்மைய கால விளையாட்டுகளில் பருப்பு கடை விளையாட்டில் குழந்தைகளைக் கிச்சு கிச்சு செய்து விளையாடும் பழக்கம் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.