From Wikipedia, the free encyclopedia
ஃபீபி (Phoebe) என்பது சனிக் கோளின் ஒரு சீரற்ற இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது வில்லியம் பிக்கரிங் என்பவரால் மார்ச் 17, 1899 இல் கண்டறியப்பட்டது. பெருவில் ஆகஸ்ட் 16, 1899 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படத் தகடுகளை ஆராயும் போது இத்துணைக்கோளை பிக்கரிங் கண்டுபிடித்தார்[4].
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | வில்லியம் பிக்கரிங் |
கண்டுபிடிப்பு நாள் | மார்ச் 17, 1899 / ஆகஸ்ட் 16, 1898 |
அரைப்பேரச்சு | 12,955,759 கிமீ |
மையத்தொலைத்தகவு | 0.1562415 |
சுற்றுப்பாதை வேகம் | 550.564636 நாள் |
சாய்வு | 173.04° (to the ecliptic) 151.78° (to Saturn's equator) |
இது எதன் துணைக்கோள் | சனி |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 230 x 220 x 210 கிமீ |
நிறை | 0.8292 ± 0.0010×1019 kg [1] |
அடர்த்தி | 1.6342 ± 0.0460 g/cm³ [1] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | ~0.049 m/s2 |
விடுபடு திசைவேகம் | ~0.10 கிமீ/செ |
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 0.38675 நா (9 h 16 min 55.2 s) [2] |
அச்சுவழிச் சாய்வு | 152.14° [3] |
எதிரொளி திறன் | 0.06 |
2004 ஆம் ஆண்டில் சனிக் கோள் தொகுதிக்குள் சென்ற நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி முதன் முதலில் ஃபீபி என்ற சந்திரனை எதிர்கொண்டது. கசீனியின் சனிக்கோளுக்கான எறிபாதை மற்றும் நேரம் ஆகியன ஃபீபியை எதிர்கொள்ளத்தக்கதாக தெரிவு செய்யப்பட்டன[5].
Seamless Wikipedia browsing. On steroids.