From Wikipedia, the free encyclopedia
84ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 84th Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது, 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. பிப்ரவரி 26, 2012 அன்று ஹாலிவுட் மற்றும் ஹைலாந்து சென்டர் திரையரங்கம்[a], ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 17:30 ப.நே.வ / 20:30 கி.நே.வ நடந்தது. நடிகர் பில்லி கிறிசுடல் இவ்விழாவினை ஒன்பதாவது முறையாக நடத்தினார்..[6]
84-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
Official poster | ||||
திகதி | பிப்ரவரி 26, 2012 | |||
இடம் | ஹாலிவுட் மற்றும் ஹைலாந்து சென்டர் திரையரங்கம்[a] ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | பில்லி கிறிசுடல்[1] | |||
முன்னோட்டம் | ஜெஸ் கேகில் நினா கார்சியா டிம் கன் ராபின் ராபர்ட்சு லுயிசு ரோஸ்[2] | |||
தயாரிப்பாளர் | பிரையன் கிரேசர் டான் மிஸ்சர்[3] | |||
இயக்குனர் | டான் மிஸ்சர்[3] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | த ஆர்ட்டிஸ்ட் | |||
அதிக விருதுகள் | த ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஹியூகோ (5) | |||
அதிக பரிந்துரைகள் | ஹியூகோ (11) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 13 நிமிடங்கள்[4] | |||
மதிப்பீடுகள் | 39.46 மில்லியன் 23.91% (நீல்சன் மதிப்பீடுகள்)[5] | |||
|
சூன் 14, 2011 அன்று அகாதமி தலைவர் டாம் ஷெராக் 2012 அகாதமி விருதுகலில் ஐந்து முதல் பத்து திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தார். [7][8]
த ஆர்ட்டிஸ்ட் ஐந்து விருதுகளை வென்றது, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், மற்றும் சிறந்த திரைப்படம். 1927 இல் வெளிவந்த விங்ஸ் திரைப்படத்தினை அடுத்து சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஊமைத்திரைப்படம் வென்றது முதல் முறையாகும்.[9][10][11] பிற வெற்றியாளர்களில் - ஹியூகோ ஐந்து விருதுகளை வென்றது, தி ஐயர்ன் லேடி இரண்டு விருதுகளையும், மற்றும் பிகின்னர்சு, தி டிசன்டன்ட்சு, த பேன்டாசுடிக் பிலையிங் புக்சு ஆஃப் மிசுடர். மார்ரிசு லெசுமோர், த கேர்ள் வித் த டிராகன் டாட்டூ, தி ஹெல்ப், மிட்நைட் இன் பாரீசு, தி மப்பெட்சு, ரங்கோ, சேவிங் ஃபேசு, எ செபரேஷன், த ஷோர், மற்றும் அன்டிபீடட் ஒவ்வொன்றும் ஒரு விருதினை வென்றன. ஐக்கிய அமெரிக்காவில் 39 மில்லியன் மக்கள் இவ்விழாவினை தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்.
சனவரி 24, 2012 அன்று at 5:38 a.m. பி.நே.வ. மணியளவில்(13:38 ஒ.ச.நே.) 84ஆவது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.[12] ஹியூகோ திரைப்படம் 11 பரிந்துரைகளுடன் முன்னனியில் இருந்தது; அதனைத் தொடர்ந்து த ஆர்ட்டிஸ்ட் திரைப்படம் 10 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தினைப் பெற்றது. [13]
வெற்றியாளர்கள் பிப்ரவரி 26, 2012 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர். .[14] த ஆர்டிஸ்ட் திரைப்படத்தினை பலர் முழுதும் ஊமைத்திரைப்படமாக கருதினாலும், உண்மையில் அது இசைத்திரைப்படமாகும். 1927 ஆம் ஆண்டு வெளிவந்த விங்ஸ் திரைப்படம் மட்டுமே சிறந்த திரைப்படம் வென்ற முழுக்க முழுக்க ஊமைத்திரைப்படமாகும்.[15] மேலும் 1993 இல் சிறந்த திரைப்படம் வென்ற சிண்டலர்ஸ் லிஸ்ட் திரைப்படத்தினை அடுத்து கருப்புவெள்ளைத் திரைப்படம் வெல்வது இதுவே முதன்முறை.[15][b][16] மெரில் ஸ்ட்ரீப் ஆசுக்கர் விருதினை வெல்வது மூன்றாவது முறையாகும்.[16][16][17]
வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் () என்று குறியிடப்படுள்ளது.[18]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிறந்த ஒப்பனை
|
|
|
மூன்றாம் கவர்னர்கள் விருதுகள் விழா நவம்பர் 12, 2011 அன்று நடத்தப்பட்டது, பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன.[8][19]
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன.
|
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன.
|
அன்மையில் மறைந்த திரைப்படத்துறையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. [20][21] அவர்களில் சிலர்,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.