2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்
தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2023 இந்திய சட்டமன்றத் தேர்தல்களின் போது ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதிகளில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.[2][3]நவம்பர் 2018ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு[4], 20 டிசம்பர் 2018 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது.[5]
![]() | ||||||||||||||||||||||||||
← 2014 | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
2014ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இறுதியாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமைகளைத் திரும்ப பெற்று[6]2019ல் மாநிலத் தகுதி இழந்த[7] பின்னர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.