From Wikipedia, the free encyclopedia
2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Tokyo 2020 Paralympic Games), மெய்வல்லுநர்களுக்கான பல்துறை விளையாட்டுப் போட்டிகள் பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழுவினரால் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் 24 ஆகஸ்டு 2021 முதல் 5 செப்டம்பர் 2021 வரை நடைபெறுகிறது.[2] இந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏற்கனவே டோக்கியோவில் நடைபெற்ற 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடைபெறுவதாகும்.
நடத்தும் நகரம் | டோக்கியோ, ஜப்பான் |
---|---|
குறிக்கோள் | உணர்வுகளால் ஒன்றுபடுவோம் [lower-alpha 1] |
பங்குபெறும் நாடுகள் | 163 |
வீரர்கள் | 4,537 |
நிகழ்ச்சிகள் | 539 in 22 இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் |
துவக்கம் | 24 ஆகஸ்டு 2021 |
நிறைவு | 5 செப்டம்பர் 2021 |
Opened by | ஜப்பான் பேரரசர் நருகிடோ |
Cauldron | யூ கமிஜி கரின் மொரிசகி சுன்சுகே உசிதா |
Stadium | ஜப்பான் தேசிய அரங்கம் |
கோடைக்காலம் குளிர்காலம்
2020 Summer Olympics |
163 நாடுகளின் 4,535 மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும், 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டியில் 24 வகையான விளையாட்டுகளில் 539 வகையான இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகிறது. தற்போது இறகுப்பந்தாட்டம் மற்றும் டைக்குவாண்டோ போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பாய்மரப் படகோட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.[3][4][5]
இந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்தியாவின் சார்பில் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 54 மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்கள் தடகளம், வில்வித்தை, இறகுப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், குறி பார்த்துச் சுடுதல், டைக்குவாண்டோ, நீச்சல், பளு தூக்குதல் மற்றும் படகுப்போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.[6][7][8][9]
1960-இல் தொடங்கப்பட்ட பாரா ஒலிம்பிக் போட்டிகளில், ({2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ பார-ஒலிம்பிக் போட்டிகளுக்கு]] முன்பு வரை இந்தியா மொத்தமாகவே 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால் இந்த முறை {2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ பார-ஒலிம்பிக் போட்டிகளில்]] இந்தியா 19 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 24-வது இடத்தில் உள்ளது.[10][11] இந்திய வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.[12]
பதக்கம் | பெயர் | விளையாட்டு | நிகழ்வு | நாள் |
---|---|---|---|---|
வெள்ளி | பவினா படேல்[13] | மேசைப்பந்தாட்டம் | மகளிர் ஒற்றையர் class 4 பிரிவு | 29 சூலை 2021 |
வெள்ளி | நிசாத் குமார்[14] | உயரம் தாண்டுதல் | ஆடவர் T 47 பிரிவு | 29 ஆகத்து 2021 |
தங்கம் | அவனி லெகரா [15][16] | குறி பார்த்துச் சுடுதல் | மகளிர் 10 மீட்டர் SH 1 பிரிவு | 30 ஆகத்து 2021 |
வெள்ளி | யோகேஷ் கதுனியா[17] | வட்டு எறிதல் | ஆடவர் F 56 பிரிவு | 30 ஆகத்து 2021 |
வெள்ளி | தேவேந்திர ஜஜாரியா[18] | ஈட்டி எறிதல் | ஆடவர் F 46 பிரிவு | 30 ஆகத்து 2021 |
வெண்கலம் | சுந்தர் சிங் குர்ஜார் | ஈட்டி எறிதல் | ஆடவர் F 46 பிரிவு | 30 ஆகத்து 2021 |
தங்கம் | சுமித் ஆன்டில் | ஈட்டி எறிதல் | ஆடவர் F 64 பிரிவு | 30 ஆகத்து 2021 |
வெள்ளி | மாரியப்பன் தங்கவேலு [19] | உயரம் தாண்டுதல் | ஆடவர் T42 பிரிவு | 31 ஆகத்து 2021 |
வெண்கலம் | சரத் குமார் | உயரம் தாண்டுதல் | ஆடவர் T 42 பிரிவு | 31 ஆகத்து 2021 |
வெண்கலம் | சிங்ராஜ் அதான[20] | சிறு கைத்துப்பாக்கியால் சுடுதல் | ஆடவர் 10 மீட்டர் பிரிவு | 31 ஆகத்து 2021 |
வெண்கலம் | அவனி லெகரா[21] | குறி பார்த்துச் சுடுதல் | மகளிர் 50 மீட்டர் SH 1 பிரிவு | 3 செப்டம்பர் 2021 |
வெள்ளி | பிரவீன் குமார்[22] | உயரம் தாண்டுதல் | ஆடவர் T 64 பிரிவு | 3 செப்டம்பர் 2021 |
வெண்கலம் | அர்விந்தர் சிங்[23] | வில்வித்தை | ஆடவர் தனிநபர் (ரிகர்வ் பிரிவு) | 3 செப்டம்பர் 2021 |
தங்கம் | மணீஷ் நர்வால்[24] | சிறு கைத்துப்பாக்கியால் சுடுதல் | ஆடவர் 50 மீட்டர் கலப்பு SH 1 பிரிவு | 4 செப்டம்பர் 2021 |
வெள்ளி | சிங்ராஜ் அதான | சிறு கைத்துப்பாக்கியால் சுடுதல் | ஆடவர் 50 மீட்டர் கலப்பு SH 1 பிரிவு | 4 செப்டம்பர் 2021 |
தங்கம் | பிரமோத் பகத்.[25] | இறகுப் பந்தாட்டம் | ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவு | 4 செப்டம்பர் 2021 |
வெண்கலம் | மனோஜ் சர்க்கார் [26] | இறகுப் பந்தாட்டம் | ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவு | 4 செப்டம்பர் 2021 |
தங்கம் | கிருஷ்ண நாகர்[27] | இறகுப் பந்தாட்டம் | ஆடவர் ஒற்றையர் SH6 பிரிவு | 5 செப்டம்பர் 2021 |
வெள்ளி | சுகாஸ் யதிராஜ்[28] | இறகுப் பந்தாட்டம் | ஆடவர் ஒற்றையர் SL-4 பிரிவு | 5 செப்டம்பர் 2021 |
ஜப்பான் தேசிய மைதானத்தில் நிறைவு விழா நிகழ்ச்சி 2021 செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. முதலில் கடந்த 13 நாட்கள் நடந்த போட்டி நிகழ்ச்சிகளின் முக்கிய வீடியோ காண்பிக்கப்பட்டது. இசை, நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜப்பான் நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது. இரண்டு பதக்க்கங்களை வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார். .
நிறைவு விழாவின் போது நடன கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடன கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. பின், பாராலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, வரும் 2024ல் நடக்கவுள்ள பாரிஸ் நகர நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீகோ ஹஷிமோடோ, போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள், போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறப்புரையாற்றிய பன்னாட்டு பாராலிம்பிக் குழு தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ், ஜப்பான் நகர மக்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின், டோக்கியோ பாராலிம்பிக் நிறைவு பெற்றதாக முறைப்படி அறிவித்தார். அடுத்த பாராலிம்பிக் பாரிசில் நடக்கும் என்று தெரிவித்தார். அதன்பின் பாராலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டது. முடிவில் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு விழா நிகழ்ச்சி முடிந்தது.[29]
* போட்டி நடத்தும் நாடு (ஜப்பான்)
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 96 | 60 | 51 | 207 |
2 | ஐக்கிய இராச்சியம் | 41 | 38 | 45 | 124 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 37 | 36 | 31 | 104 |
4 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் RPC | 36 | 33 | 49 | 118 |
5 | நெதர்லாந்து | 25 | 17 | 17 | 59 |
6 | உக்ரைன் | 24 | 47 | 27 | 98 |
7 | பிரேசில் | 22 | 20 | 30 | 72 |
8 | ஆத்திரேலியா | 21 | 29 | 30 | 80 |
9 | இத்தாலி | 14 | 29 | 26 | 69 |
10 | அசர்பைஜான் | 14 | 1 | 4 | 19 |
11 | சப்பான்* | 13 | 15 | 23 | 51 |
12 | செருமனி | 13 | 12 | 18 | 43 |
13 | ஈரான் | 12 | 11 | 1 | 24 |
14 | பிரான்சு | 11 | 15 | 28 | 54 |
15 | எசுப்பானியா | 9 | 15 | 12 | 36 |
16 | உஸ்பெகிஸ்தான் | 8 | 5 | 6 | 19 |
17 | போலந்து | 7 | 6 | 12 | 25 |
18 | அங்கேரி | 7 | 5 | 4 | 16 |
19 | சுவிட்சர்லாந்து | 7 | 4 | 3 | 14 |
20 | மெக்சிக்கோ | 7 | 2 | 13 | 22 |
21 | நியூசிலாந்து | 6 | 3 | 3 | 12 |
22 | இசுரேல் | 6 | 2 | 1 | 9 |
23 | கனடா | 5 | 10 | 6 | 21 |
24 | இந்தியா | 5 | 8 | 6 | 19 |
25 | தாய்லாந்து | 5 | 5 | 8 | 18 |
26 | சிலவாக்கியா | 5 | 2 | 4 | 11 |
27 | பெலருஸ் | 5 | 1 | 1 | 7 |
28 | தூனிசியா | 4 | 5 | 2 | 11 |
29 | அல்ஜீரியா | 4 | 4 | 4 | 12 |
30 | மொரோக்கோ | 4 | 4 | 3 | 11 |
31 | பெல்ஜியம் | 4 | 3 | 8 | 15 |
32 | அயர்லாந்து | 4 | 2 | 1 | 7 |
33 | நைஜீரியா | 4 | 1 | 5 | 10 |
34 | தென்னாப்பிரிக்கா | 4 | 1 | 2 | 7 |
35 | கியூபா | 4 | 1 | 1 | 6 |
36 | யோர்தான் | 4 | 0 | 1 | 5 |
37 | கொலம்பியா | 3 | 7 | 14 | 24 |
38 | வெனிசுவேலா | 3 | 2 | 2 | 7 |
39 | மலேசியா | 3 | 2 | 0 | 5 |
40 | டென்மார்க் | 3 | 1 | 1 | 5 |
41 | தென் கொரியா | 2 | 10 | 12 | 24 |
42 | துருக்கி | 2 | 4 | 9 | 15 |
43 | இந்தோனேசியா | 2 | 3 | 4 | 9 |
44 | செக் குடியரசு | 2 | 3 | 3 | 8 |
45 | சிலி | 2 | 3 | 1 | 6 |
செர்பியா | 2 | 3 | 1 | 6 | |
47 | நோர்வே | 2 | 0 | 2 | 4 |
48 | சிங்கப்பூர் | 2 | 0 | 0 | 2 |
49 | ஆஸ்திரியா | 1 | 5 | 3 | 9 |
50 | சுவீடன் | 1 | 5 | 2 | 8 |
51 | கிரேக்க நாடு | 1 | 3 | 7 | 11 |
52 | கசக்கஸ்தான் | 1 | 3 | 1 | 5 |
பின்லாந்து | 1 | 3 | 1 | 5 | |
54 | ஐக்கிய அரபு அமீரகம் | 1 | 1 | 1 | 3 |
55 | கோஸ்ட்டா ரிக்கா | 1 | 1 | 0 | 2 |
56 | எக்குவடோர் | 1 | 0 | 2 | 3 |
57 | இலங்கை | 1 | 0 | 1 | 2 |
சைப்பிரசு | 1 | 0 | 1 | 2 | |
59 | எதியோப்பியா | 1 | 0 | 0 | 1 |
பாக்கித்தான் | 1 | 0 | 0 | 1 | |
பெரு | 1 | 0 | 0 | 1 | |
மங்கோலியா | 1 | 0 | 0 | 1 | |
63 | அர்கெந்தீனா | 0 | 5 | 4 | 9 |
64 | எகிப்து | 0 | 5 | 2 | 7 |
65 | குரோவாசியா | 0 | 3 | 4 | 7 |
66 | லாத்வியா | 0 | 3 | 2 | 5 |
67 | சியார்சியா | 0 | 3 | 0 | 3 |
68 | ஆங்காங் | 0 | 2 | 3 | 5 |
69 | பல்கேரியா | 0 | 2 | 0 | 2 |
70 | ஈராக் | 0 | 1 | 2 | 3 |
71 | உருமேனியா | 0 | 1 | 1 | 2 |
குவைத் | 0 | 1 | 1 | 2 | |
சுலோவீனியா | 0 | 1 | 1 | 2 | |
நமீபியா | 0 | 1 | 1 | 2 | |
75 | வியட்நாம் | 0 | 1 | 0 | 1 |
76 | லித்துவேனியா | 0 | 0 | 3 | 3 |
77 | போர்த்துகல் | 0 | 0 | 2 | 2 |
78 | உகாண்டா | 0 | 0 | 1 | 1 |
எல் சல்வடோர | 0 | 0 | 1 | 1 | |
ஓமான் | 0 | 0 | 1 | 1 | |
கத்தார் | 0 | 0 | 1 | 1 | |
கென்யா | 0 | 0 | 1 | 1 | |
சவூதி அரேபியா | 0 | 0 | 1 | 1 | |
சீன தைப்பே | 0 | 0 | 1 | 1 | |
பொசுனியா எர்செகோவினா | 0 | 0 | 1 | 1 | |
மொண்டெனேகுரோ | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (86 நாடுக்கள்) | 539 | 540 | 589 | 1668 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.