2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
31வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் / From Wikipedia, the free encyclopedia
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், (2016 Summer Olympics), அலுவல்முறையில் 31வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXXI Olympiad) அல்லது ரியோ டி செனேரோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகத்து 5, 2016 முதல் ஆகத்து 21, 2016 வரை பிரேசிலின் இரியோ டி செனீரோ மாநகரத்தில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும்.[2] 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களும் இதே நகரத்தில் இதே குழுவின் மேற்பார்வையில் செப்டம்பர் 7 முதல் 18 வரை நடைபெற உள்ளன. அக்டோபர் 2, 2009 இல் கோபனாவன், டென்மார்க்கில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 121ஆவது அமர்வில் போட்டிகளை நடத்தும் நகரமாக இரியோ டி செனீரோ அறிவிக்கப்பட்டது.
நடத்தும் நகரம் | இரியோ டி செனீரோ, பிரேசில் |
---|---|
குறிக்கோள் | A new world (போர்த்துக்கேய மொழி: Um mundo novo) |
பங்குபெறும் நாடுகள் | 207[1] |
வீரர்கள் | 11,238[1] |
நிகழ்ச்சிகள் | 306 in 28 விளையாட்டுக்கள் (41 பிரிவுகள்) |
துவக்கம் | 5 ஆகத்து |
நிறைவு | 21 ஆகத்து |
திறந்து வைத்தவர் | மைக்கேல் தொமர் (பிரேசில் துணைத் தலைவர்) |
தீச்சுடர் ஏற்றியோர் | வாண்டெர்லி டி லிமா |
அரங்கு | மரக்கானா |
கோடைக்காலம்
குளிர்காலம்
2016 Summer Paralympics |
பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் போட்டியிடப்படும் விளையாட்டுக்களின் எண்ணிக்கையிலும் இந்த ஒலிம்பிக்சு சாதனை நிகழ்த்தியுள்ளது. 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் 10,500க்கும் கூடுதலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்; முதன்முறையாக கொசோவோவும் தெற்கு சூடானும் பங்கேற்றன.[3] 28 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மொத்தம் 306 பதக்க கணங்கள் வழங்கப்பட்டன; 2009இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு சேர்த்த எழுவர் ரக்பி, குழிப்பந்தாட்டம் போட்டிகளும் இதில் அடங்கும். நடத்தப்படும் நகரத்தின் 33 நிகழிடங்களிலும், சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், சவ்வாதோர், பிரசிலியா, மனௌசு நகரங்களில் ஒவ்வொரு இடத்திலும் போட்டிகள் நடந்தன.