மனௌசு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மனௌசு (Manaus, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [mɐˈnaws] or [mɐˈnawʃ]), அல்லது (முன்னதாக) லூகர் டெ பர்ரா டொ ரியோ நெக்ரோ (Lugar de Barra do Rio Negro) பிரேசிலின் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள அமெசோனசின் தலைநகரம் ஆகும். இது இரியோ நெக்ரோ ஆறும் சோலிமோசு ஆறும் சந்திக்கின்ற கூட்டுத்துறையில் அமைந்துள்ளது. இது அமெசோனசு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[1]
மனௌசு | |
---|---|
நகராட்சி | |
மனௌசு நகராட்சி | |
அடைபெயர்(கள்): "A Paris dos Trópicos" ("அயனமண்டல பாரிசு") | |
நிறுவப்பட்டது | அக்டோபர் 24, 1669 |
அரசு | |
• மேயர் | ஆர்த்தர் விர்கிலோ நேடோ (பிரேசிலிய சமூக சனநாயகக் கட்சி) |
பரப்பளவு | |
• நகராட்சி | 11,401 km2 (4,402 sq mi) |
ஏற்றம் | 92 m (302 ft) |
மக்கள்தொகை (2013) | |
• நகராட்சி | 19,82,179 (7வது) |
• அடர்த்தி | 173,86/km2 (45,030/sq mi) |
• பெருநகர் | 23,16,173 (11வது) |
நேர வலயம் | ஒசநே-4 (அசீநே) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (பகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை) |
அஞ்சல் குறியீடு | 69000-000 |
இடக் குறியீடு | +55 92 |
இணையதளம் | மனௌசு, அமெசோனசு |
இந்த நகரம் சாவோ யோசு டொ ரியோ நெக்ரோ கோட்டைக் கட்டப்பட்ட காலமான 1693-94 இலிருந்து இருந்து வந்துள்ளது. 1832இல் "மனௌசு" என்ற பெயருடன் நகரமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள மனோசு மக்களைக் கொண்டே இந்த நகருக்கு இப்பெயர் அமைந்தது. அக்டோபர் 24, 1848இல் மாநகரமானது; அப்போது இது போர்த்துக்கேய மொழியில் "கருப்பு ஆற்றங்கரையில் அமைந்த நகரம்" என்ற பொருள்படும் Cidade da Barra do Rio Negro என அழைக்கப்பட்டது. செப்டம்பர் 4, 1856இலிருந்தே தற்போது அறியப்படும் பெயரில் அழைக்கப்படலாயிற்று.[2]
மனௌசு அமேசான் மழைக்காடுகளின் நடுவே அமைந்துள்ளதால் இதனை அடைய படகுகள் மூலமோ வானூர்தி மூலமோவாகத் தான் செல்ல இயலும். சாலைகளால் இதற்கு அணுக்கம் இல்லை. இந்த தனிமைப்படுத்தலால் நகரத்தின் பண்பாடும் இயற்கை அழகும் அழிபடாது உள்ளது. பிரேசிலியப் பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள் மற்றெந்த ஊரகப் பகுதியை விட இங்குதான் பாதுகாக்கப்படுகிறது. பிரேசிலிய அமேசான் வனப்பகுதிக்கு செல்லும் நுழைவாயிலாக இது அமைந்துள்ளது. உலகின் மிகச்சில இடங்களிலேயே இந்தளவிலான தாவர, மர, பறவை, பூச்சி, மீன் வகைகளைக் காணவியலும்.[3]
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இது "அமேசானின் இதயப்பகுதி" என்றும் "வன நகரம்" என்றும் அறியப்பட்டது.[4] தற்போது இந்த நகரத்தின் பொருளியலில் இதன் மையமாக கட்டற்ற வணிக வலயம் அமைந்துள்ளது. இங்கு கட்டற்ற துறைமுகமும் பன்னாட்டு வானூர்தி நிலையமும் உள்ளன. மின்னணுவியல், வேதிப்பொருள்கள், சவர்க்காரம் போன்ற தொழில்கள் தழைத்துள்ளன; தூய்மைவடிகட்டிகளும் கப்பல் வடிவமைப்புத் தொழிலும் வளர்ந்து வருகின்றன. இங்கிருந்து பிரேசில் கொட்டைகள், இரப்பர், சணல், உரோசுவுட் எண்ணெய் ஆகியன ஏற்றுமதியாகின்றன. இங்கு தேவாலயம், ஓப்பரா அரங்கு, விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள், உள்ளன. உள்நாட்டுப் பழங்குடிகளின்s அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.[5]
நகரத்தின் மக்கள்தோகை 2013இல் 1.5 மில்லியன் ஆகும். பிரேசிலிய அமேசான் பகுதியில் மிகுந்த மக்கள்தொகை கொண்டதாகவும் பிரேசிலின் ஏழாவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் மனௌசு விளங்குகிறது. [6] நெக்ரோ ஆற்றின் வடகரையில் நெக்ரோவும் சோலுமோசும் சங்கமிக்கும் இடத்திலிருந்து, 11 மைல்கள் (18 கிமீ) மேலே அமைந்துள்ளது. அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து 1450 கிமீ (900 மைல்கள்) தொலைவில் உள்நாட்டில் அமைந்துள்ளது.[7]
சோலிமோசு ஆறும் நெக்ரோ ஆறும் மனௌசில் இணைந்து ஆமேசான் ஆறாகின்றன. இங்குள்ள இரப்பர் தொழிலால் 1800களில் தென் அமெரிக்காவின் மிகுந்த செல்வமிக்க நகரமாக இது விளங்கியது. இதனை "அயனமண்டலத்தின் பாரிசு" என அழைத்தனர். பல ஐரோப்பிய செல்வந்தர்கள் இங்கு குடியேறியதால் கலைநயமிக்க ஓவியங்களையும் ஐரோப்பிய கட்டிட வடிவமைப்பு மற்றும் பண்பாட்டையும் இங்கு கொணர்ந்தனர்.
2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக மனௌசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமேசான் மழைக்காடுகளிலும் வடக்கு பிரேசிலிலும் இப்போட்டி நடைபெறும் ஒரே நகரம் என்ற பெருமை கிடைக்கும்.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.