![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/India_new_10_INR%252C_MG_series%252C_2018%252C_reverse.jpg/640px-India_new_10_INR%252C_MG_series%252C_2018%252C_reverse.jpg&w=640&q=50)
10 ரூபாய் பணத்தாள் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
இந்திய 10 ரூபாய் பணத்தாள் (Indian 10-rupee banknote (₹10) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியால் 1996 இல் முதலாவதாக வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்களில் இந்த ₹10 பணத்தாளும் அடங்கும். இது தற்போதும் புழக்கத்தில் உள்ளது.[1]
விரைவான உண்மைகள் (இந்தியா), மதிப்பு ...
(இந்தியா) | |
---|---|
மதிப்பு | இந்திய ரூபாய் ₹10 |
அகலம் | 123 mm |
உயரம் | 63 mm |
அச்சிடப்பட்ட ஆண்டுகள் | சனவரி 2018 – தற்போது வரை |
முன்பக்கம் | |
![]() | |
வடிவமைப்பு | மகாத்மா காந்தி |
வடிவமைப்பாளர் | இந்திய ரிசர்வ் வங்கி |
வடிவமைப்பு நாள் | 2017 |
பின்பக்கம் | |
![]() | |
வடிவமைப்பு | கொனார்க் சூரியக் கோயில் |
வடிவமைப்பாளர் | இந்திய ரிசர்வ் வங்கி |
வடிவமைப்பு நாள் | 2017 |
மூடு
காலனித்துவ காலத்திலிருந்து 10 ரூபாய் பணத்தாள் வெளியிடப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய நாணயக் கட்டுப்பாட்டை 1923 ஆம் ஆண்டில் எடுத்துக் கொண்டதிலிருந்தும் தொடர்ந்து, 10 ரூபாய் பணத்தாள் வெளியிடப்பட்டு வருகிறது.[2]