![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8b/VVS_Laxman99.jpg/640px-VVS_Laxman99.jpg&w=640&q=50)
வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் / From Wikipedia, the free encyclopedia
வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் (V.V.S.Laksman,ஒலிப்புⓘ , பிறப்பு: நவம்பர் 1, 1974) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். தற்போது இவர் துடுப்பாட்ட விவரணையாளராக உள்ளார்.[1] இவர் சில நேரங்களில் வெரி வெரி ஸ்பெசல் (VVS) எனவும் அழைக்கப்படுகிறார்.[1]
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 நவம்பர் 1974 (1974-11-01) (அகவை 49) ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 209) | 20 நவம்பர் 1996 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சனவரி 2012 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 112) | 9 ஏப்ரல் 1998 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 3 திசம்பர் 2006 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1992–2012 | ஐதராபாத்து துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–2009 | லேங்கஷயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | டெக்கான் சார்ஜர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 30 சனவரி 2012 |
இவர் வலது கை மட்டையாளர். பல தேர்வுத் துடுப்பாட்டங்களை வென்று கொடுத்ததாலும், போட்டிகளை தோல்வியிலிருந்து மீட்டதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவரின் காலகட்டத்தில் உலகின் தலை சிறந்த அணியாகக் கருதப்பட்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 281 ஓட்டங்கள் அடித்தார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையின் மிகச் சிறப்பான போட்டியாக இது கருதப்படுகிறது.[2]2011 ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மசிறீ விருதினைப் பெற்றார்.[3]
துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடாமல் நூறு தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடிய வீரர்களில் லட்சுமனனும் ஒருவர் ஆவார். மெதுவாக ஓடி ஓட்டங்கள் எடுப்பவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் விரைவு வீச்சு மற்றும் களத்தடுப்பு சூட்சுமங்களைத் தகர்த்து ஓட்டங்கள் சேர்ப்பவராக அறியப்படுகிறார்.
இவர் ஐதராபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி, இங்கிலாந்து மாகாண அணியான லேங்கசயர் ஆகிய அணிகளுக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2002 ஆம் ஆண்டின் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்களுள் ஒருவராக அறிவித்தது.[4]
2012 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[5]