இந்திய பாடகி From Wikipedia, the free encyclopedia
ரிமி டோமி (Rimi Tomy, மலையாளம்: റിമി ടോമി, பிறப்பு: 22 செப்டம்பர் 1983) என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகியும், கர்நாடக இசைக்கலைஞரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், அவ்வப்போது நடிக்கும் நடிகையும் ஆவார். இவர் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு மீசா மாதவன் திரைப்படத்தில் சங்கர் மகாதேவனுடன் தனது முதல் பாடலான "சிங்ஙமாசம் வந்னு சேர்ந்நால்" என்ற மலையாள பாடலைப் பாடினார்.[2]
ரிமி டோமி Rimi Tomy | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 22, 1983 பாலா, கோட்டயம் மாவட்டம், கேரளம் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போதும் |
வாழ்க்கைத் துணை | ராய்சு கிழாகூடன் [1](தி. 2008; ம.மு. 2019) |
உறவினர்கள் | முக்தா (அண்ணி) |
இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், பல்வேறு உண்மைநிலை நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். [3] [4] இவர் ஆசிக் அபு இயக்கிய 5 சுந்தரிகள் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு வெளியான திங்கள் முதல் வெள்ளி வாரே திரைப்படத்தில் ஜெயராமுக்கு சோடியாக தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் பல்ராம் விஎசு தாரதாசு, காரியசுதன் மற்றும் 916 போன்ற திரைப்படங்களின் பாடல் காட்சிகளிலும் தோன்றியுள்ளார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் டோமி ஜோசபுக்கும் ராணி டோமிக்கும் கோட்டயம் மாவட்டத்திலுள்ள பாலாவில் சிரிய-மலபார் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.[சான்று தேவை] இவருக்கு ரீனு டோமி என்ற ஒரு சகோதரியும், ரிங்கு டோமி என்ற ஒரு சகோதரரும் உள்ளனர். இவரது தந்தை மாரடைப்பு காரணமாக 6 சூலை 2014 அன்று இறந்தார்.
27 ஏப்ரல் 2008 அன்று திருச்சூரிலுள்ள லூர்து கதீட்ரல் தேவாலயத்தில் ராய்சு கிழாகூடன் என்பவரை மணந்தார். 2019 இல் இவர்கள் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். [5] இவரது சகோதரர் ரிங்கு டோமி நடிகை முக்தாவை மணந்தார். [6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.