From Wikipedia, the free encyclopedia
மலையாள மனோரமா கேரள மாநிலம் கோட்டயம் நகரிலிருந்து வெளியாகும் மலையாள மொழி காலை நாளிதழ் ஆகும். இதனை மலையாள மனோரமா கம்பெனி லிமிடெட் எனும் நிறுவனம் பதிப்பிடுகிறது. தற்போது மாமென் மேத்யூ என்பவரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழின் முதல் இதழ் ஒரு வாராந்திர இதழாக 22 மார்ச் 1888 அன்று வெளியானது. நாள்தோறும் 1.9 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. 8 மில்லியன் பேர் வாசகர்களாக உள்ளனர்.[3][4] கேரள மாநிலத்தின் இரண்டாவது பழைமையான செய்தித்தாளாக மலையாள மனோரமா கருதப்படுகிறது. கேரளாவின் முதல் செய்தித்தாள் தீபிகா எனும் இதழாகும். இணையவழி பதிப்பையும் மனோரமா நடத்துகிறது.[5]
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | மலையாள மனோரமா கம்பெனி லிமிடெட் |
நிறுவுனர்(கள்) | கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை |
தலைமை ஆசிரியர் | மேமென் மாத்யூ |
முகாமைத்துவ ஆசிரியர்கள் | பிலிப் மாத்யூ |
நிறுவியது | 1888 |
மொழி | மலையாளம் |
வெளியீட்டு முடிவு | 1938 |
மீள் ஆரம்பம் | 1947 |
தலைமையகம் | கோட்டயம், கேரளா, India |
விற்பனை | 1,908,612 நாள்தோறும் (as of சூன் 2022)[1] |
வாசகர்கள் | 8.47 மில்லியன் (ஐஆர்எஸ் 2019)[2] |
ISSN | 0972-0022 |
OCLC எண் | 802436310 |
இணையத்தளம் | www |
இந்நிறுவனத்திலிருந்து ஆங்கிலம், இந்தி மொழிகளில் மகளிர், குழந்தைகளுக்கான இதழ்கள் வெளியாகின்றன. செய்தித் தொலைக்காட்சி, பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. ஆங்கில மொழியில் தி வீக் (The Week) இதழ் வாரந்தோறும் வெளியாகிறது.
ஒரு கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவனமாக, இந்திய குடியரசின் முதல் கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவன அந்தஸ்தைப் பெறுவதற்காக திட்டமிடப்பட்ட இது, 1888 ஆம் ஆண்டில் கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை என்பவரால் கோட்டயத்தில் இணைக்கப்பட்டது. அப்போது அது திருவாங்கூர் இராஜ்ஜியத்தில் ஒரு சிறு நகரம், தற்சமயம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. மலையாள மனோரமா வின் முதல் பதிப்பு மார்ச் 22, 1890 அன்று ஆர்தோடாக்ஸ் சர்ச்சின் மாலங்காரா மெட்ரோபோலியன் எச்.ஜி. ஜோசப் மார் டையோனைசியசின் சொந்த அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டது. மலையாள மனோரமா என்னும் பெயர் திருவல்லாவிலிருந்து வில்லுவரவட்டத்து கவிஞர் ராகவன் நாயரால் தேர்வுசெய்யப்பட்டது. கேரள வர்மா சின்னத்தை வழங்கினார். இது திருவாங்கூர் இராஜ்ஜிய சின்னத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இரண்டு ஆண்டு காலத்தில், இணைக்கப்பட்ட தேதியிலிருந்து வெளியீடு துவங்கியது வரையில் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டது. தகவல் சார்ந்த மாதாந்திர இதழான டெல் மி வையையும் அது வெளியிடுகிறது.
மலையாள மனோரமா, மாத்ருபூமி இதழ்களுக்கிடையேயான ஒரு ஒப்பீடு: (ராபின் ஜெஃப்ரி எழுதிய India's Newspaper Revolution (2000) எனும் நூல், கே. எம். ஜார்ஜ் எழுதிய Western Influence on Malayalam Language and Literature (1972), ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேசன்சு (ABC) 2013 ஆகியவற்றின் அடிப்படையில்)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.