ராபர்ட் எட்வர்ட்சு
From Wikipedia, the free encyclopedia
ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு (Robert Geoffrey Edwards, செப்டம்பர் 27, 1925-ஏப்ரல் 10, 2013), பிரித்தானிய[1] உயிரியலாளரும் சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்தவர்களில் முன்னோடியும் ஆவார். மருத்துவர் பாட்ரிக் ஸ்டெப்டோவுடன் (1913 – 1988) இணைந்து இவர் நடத்திய ஆய்வுகள் 1978 ஆம் ஆண்டில் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்க வழிவகுத்தது[2][3]. இவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது[4]. இவர் ஏப்பிரல் 10, 2013இல் இறந்தார்.[5]
விரைவான உண்மைகள் ராபர்ட் எட்வர்ட்சு, பிறப்பு ...
ராபர்ட் எட்வர்ட்சு | |
---|---|
பிறப்பு | 27 செப்டம்பர் 1925 (1925-09-27) (அகவை 98) மான்செஸ்டர் |
இறப்பு | 10 ஏப்பிரல் 2013 இங்கிலாந்து |
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
பணியிடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | வேல்சு பல்கலைக்கழகம் எடின்பரோ பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | reproductive medicine in-vitro fertilization |
விருதுகள் | மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2010) |
மூடு