![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/Petaling_Jaya_Emblem.svg/langta-640px-Petaling_Jaya_Emblem.svg.png&w=640&q=50)
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya City Councill); (சுருக்கம்: MBPJ) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது. [2]
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி Petaling Jaya City Council Majlis Bandaraya Petaling Jaya | |
---|---|
![]() பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | சனவரி 1, 1964 |
முன்பு | பெட்டாலிங் ஜெயா நகராட்சி |
தலைமை | |
நகர முதல்வர் | முகமட் அசான் அமீர் Mohamad Azhan Md. Amir 21 அக்டோபர் 2021 |
நகரத் துணை முதல்வர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 24 |
![]() | |
அரசியல் குழுக்கள் | மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
|
கூடும் இடம் | |
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தலைமையகம் Jalan Yong Shook Lin, 46675 Petaling Jaya, Selangor, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
2006 சூன் 20-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் உள்ளது. இதன் அதிகார வரம்பு 97 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
2017-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் 2,335 பேர் பணிபுரிந்தார்கள். இந்த மாநகராட்சியின் 2017-ஆம் ஆண்டு வரவு செலவு MYR 479,488,450 (ஏறக்குறைய 480 மில்லியன் ரிங்கிட்).[3]