![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7b/Jalan_Tanjung_Malim-Kampar_%2528Malaysia_Federal_Highway_1%2529%252C_Kampung_Bikam_20230628_084920.jpg/640px-Jalan_Tanjung_Malim-Kampar_%2528Malaysia_Federal_Highway_1%2529%252C_Kampung_Bikam_20230628_084920.jpg&w=640&q=50)
பீக்காம்
பீக்காம் (Bikam) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட் / From Wikipedia, the free encyclopedia
பீக்காம் (Bikam) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறு கிராம நகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களை இணைக்கும், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் பீக்காம்Bikam, நாடு ...
பீக்காம் Bikam | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 4°3′N 101°18′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1880 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdtapah.gov.my/ |
மூடு
பழைய ஈப்போ, கோலாலம்பூர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்திற்குச் செல்லலாம்.[1] அத்துடன் பீடோர், தெலுக் இந்தான் நகரங்களை இணைக்கும் (Jalan Persekutuan 58) கூட்டரசு நெடுஞ்சாலை 58-க்கு அருகிலும் உள்ளது.
பீக்காம் கிராம நகரத்திற்கு வடக்கே பீடோர், தாப்பா நகரங்கள். தெற்கே சுங்கை, துரோலாக், சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். ஈப்போ மாநகரத்தில் இருந்து 64 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 110 கி.மீ.; தொலைவில் பீக்காம் நகரம் அமைந்து உள்ளது.