ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
பிலிப் ஹியூஸ் (Phillip Joel Hughes), (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) ஆத்திரேலியத் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். நியூ சவுத் வேல்சு அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார்.[2]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிலிப் ஜொயெல் ஹியூஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | மாக்சுவில், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | 30 நவம்பர் 1988|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 27 நவம்பர் 2014 25) சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | (அகவை|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ஹியூசி, லிட்டில் டான், ஹியுக் டாக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 170 செ.மீ (5 அடி 8 அங்குலம்)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை-புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | முன்வரிசை துடுப்பாட்டக்காரர், பதில் குச்சக் காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 408) | 26 பெப்ரவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 18 சூலை 2013 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 198) | 11 சனவரி 2013 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 12 அக்டோபர் 2014 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 64 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–2012 | நியூ சவுத்து வேல்சு புளூசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009 | மிடில்செக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | ஹாம்ப்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2012 | சிட்னி தண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | வூஸ்டர்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2014 | தெற்கு ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–2014 | அடிலெயிட் ஸ்ட்ரைக்கர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2014 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 25 நவம்பர் 2014 |
இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் மெல்பேர்னில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.[3]
25 நவம்பர் 2014 அன்று, சிட்னி துடுப்பாட்டத் திடலில் நடந்த போட்டியின் போது, சோன் அபொட் வீசிய பந்தால் கழுத்தில் தாக்கப்பட்டு, பிலிப்பிற்கு முதுகெலும்பு தமனி சிதைவு ஏற்பட்டு, அது குருதிக்கசிவுக்கு வழிவகுத்தது. அவர் சுயநினைவு திரும்பாமல், 2014 நவம்பர் 27 அன்று தனது 25-ஆவது அகவையில் இறந்தார்.[4][5][6]
ஹியூசு ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தையார் கிரெக் ஒரு வாழைத்தோட்ட விவசாயி, தாயார் இத்தாலிய வம்சாவளி ஆவார்.[7] சிறு வயதிலேயே மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.[7] தனது 17வது அகவையில் சிட்னிக்கு இடம்பெயர்ந்து ஹோம்புஷ் ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.[8][9] 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 ஐசிசி உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.
2014 நவம்பர் 25 இல், சிட்னி துடுப்பாட்டத் திடலில் நடைபெற்ற செஃபீல்டு சீல்டு போட்டி ஒன்றில், ஹியூஸ் தலைக்கவசம் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சோன் அபொட் வீசிய அதிவேக எகிறி பந்து பிலிப்பின் இடது காதுக்குக் கீழே பாதுகாப்பற்ற கழுத்துப் பகுதியில் தாக்கியதில்[10] படுகாயமடைந்த நிலையில் சிட்னி செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[11] அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தூண்டப்பட்ட உணர்விழந்த நிலையில் வைக்கப்பட்டார்.[12] பிலிப்பின் காயம் ஒரு அரிதான ஆனால் விவரிக்கப்பட்ட விளையாட்டு தொடர்பான மழுங்கிய மூளைக் குருதிநாள நேர்ச்சி[13] என்று அழைக்கப்படும் வலையுருவடிக் குருதிப்பெருக்குக்கு வழிவகுத்தது.[14]
போட்டி உடனடியாகக் கைவிடப்பட்டது. ஏனைய இரண்டு செஃபீல்டு சீல்ட் போட்டிகள் ஆத்திரேலியாவில் பிரிஸ்பேன், மெல்பேர்ண் நகரங்களில் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நாள் முடிவில் அவையும் கைவிடப்பட்டதாக கிரிக்கெட் ஆத்திரேலியா அறிவித்தது.[15]
வியாழன் அன்று காலை, 27 நவம்பர் 2014 அன்று, பிலிப் தனது 25வது அகவையில், தன்னுடைய பிறந்தநாளை 3 நாளில் கொண்டாடவிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.[16][17][18][19][20] ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் பிலிப்பின் குடும்பத்தின் சார்பாக ஒரு அறிக்கையைப் படித்தார்.[21]
மே 2015 இல், கிரிக்கெட் ஆத்திரேலியா, பிலிப் இயூசின் மரணம் குறித்து ஒரு சுயாதீன மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.[22]
பிலிப் ஹியூசின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட் இரங்கல் செய்தியை வெளியிட்டார். உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூசிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடகத்தில் தங்கள் கிரிக்கெட் மட்டை ஒளிப்படங்களை வெளியிட்டனர்[23].
பிலிப் இயூசின் தேர்வு சதங்கள் | ||||||
---|---|---|---|---|---|---|
இல. | ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நகரம்/நாடு | அரங்கு | ஆண்டு |
[1] | 115 | 2 | தென்னாப்பிரிக்கா | டர்பன், தென்னாப்பிரிக்கா | கிங்சுமீட் | 2009 |
[2] | 160 | 2 | தென்னாப்பிரிக்கா | டர்பன், தென்னாப்பிரிக்கா | கிங்சுமீட் | 2009 |
[3] | 126 | 13 | இலங்கை | கொழும்பு, இலங்கை | சிங்கள அரங்கு | 2011 |
பிலிப் இயூசின் ஒருநாள் பன்னாட்டு சதங்கள் | ||||||
---|---|---|---|---|---|---|
இல. | ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நகரம்/நாடு | அரங்கு | ஆண்டு |
[1] | 112 | 1 | இலங்கை | மெல்பேர்ண், ஆஸ்திரேலியா | மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் | 2013 |
[2] | 138* | 5 | இலங்கை | ஹோபார்ட், ஆஸ்திரேலியா | பிளன்ட்ஸ்டோன் | 2013 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.