பாவ்லோடர் பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
பாவ்லோடர் பிராந்தியம் (Pavlodar Region, காசாக்கு மொழி: Павлодар облысы ; Russian ) என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 742,475 (2009 மக்கள் கணக்கெடுப்பு) ஆகும். இது முன்பு 806,983 (1999 மக்கள் கணக்கெடுப்பு) என்று இருந்தது. சமீபத்திய அதிகாரப்பூர்வ மதிப்பீடு (2018 தொடக்கத்தில்) 754,739 ஆகும். [4] இதன் தலைநகரம் பாவ்லோடர் நகரம் ஆகும். இந்த நகரானது 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 360,014 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. [5]
பாவ்லோடர் பிராந்தியம்
Павлодар облысы Павлодарская область | |
---|---|
கஜகஸ்தானின் வரைபடத்தில், பாவ்லோதர் மாகாணத்தின் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 52°18′N 76°57′E | |
நாடு | கசக்கஸ்தான் |
தலைநகரம் | பாவ்லோடர் |
அரசு | |
• அக்கிம் | க்காவ், புலாட் ஜுமாபெகோவிச் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,24,800 km2 (48,200 sq mi) |
மக்கள்தொகை (1 சனவரி 2018)[2] | |
• மொத்தம் | 7,54,739 |
• அடர்த்தி | 6.0/km2 (16/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (East) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (not observed) |
அஞ்சல் குறியீடு | 140100 - 141200 |
தொலைபேசி இலக்கத் திட்டம் | +7 (718) |
ஐஎசுஓ 3166 குறியீடு | KZ-PAV |
வாகனப் பதிவு | 14, S |
மாவட்டங்கள் | 10 |
மாநகரங்கள் | 3 |
சிற்றூர்கள் | 504 [3] |
இணையதளம் | http://www.pavlodar.gov.kz |
பாவ்லோடர் பிராந்தியததின் வடக்கே உருசியாவை ( அல்தாய் கிராய், ஓம்ஸ்க் ஒப்லாஸ்ட் மற்றும் நோவோசிபிர்ஸ்க் ஒப்லாஸ்ட் ) எல்லையாகக் கொண்டுள்ளது. மேலும் பின்வரும் கசாக் பிராந்தியங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது: அக்மோலா (மேற்கில்), கிழக்கு கஜகஸ்தான் (தென்கிழக்கில்), வடக்கு கஜகஸ்தான் (வடமேற்கில்) ), கரகந்தா (தெற்கே). நிகிதா குருசேவால் வேளாண் உற்பத்தியைப் பெருக்க அறிமுகப்படுத்தப்பட்ட கன்னி நில சாகுபடி திட்டத்தினால் பலர், குறிப்பாக உக்ரைனியர் பாவ்லோடருக்கு குடிபெயர்ந்தனர்.
இர்டிஷ் ஆறு சீனாவின் அல்த்தாய் மலைகளில் இருந்து உருசியாவுக்கு இப்பகுதி வழியாக பாய்கிறது; இர்டிஷ்-கரகாண்டா கால்வாய் இப்பகுதியின் மேற்கு பகுதியைக் கடந்து, ஆற்றின் நீரின் ஒரு பகுதியை எகிபாஸ்டுஸ் மற்றும் கராகண்டாவுக்கு எடுத்துச் செல்கிறது.
எகிபாஸ்டுசில் இருந்து 100 கி.மீ தொலைவுக்குள் பயனவுல் தேசிய பூங்கா அமைந்துள்ளது.